அஜித் நிவாட் கப்ரால்

இராஜாங்க அமைச்சர் கப்ரால்: ஒதுக்குகள் தொடர்பில் சரியாகக் குறிப்பிடுகின்றார்.

"

எங்களிடம் ஐ.அ.டொலர் 8.2 பில்லியன் ஒதுக்குச் சொத்துக்கள் காணப்பட்டன... நல்லாட்சி அரசாங்கம் எங்களிடம் அரசாங்கத்தை கையளித்த போது, ஒதுக்குச் சொத்துக்களில் ஐ.அ.டொலர் 7.6 பில்லியன் மாத்திரமே காணப்பட்டது.

மவ்பிம | ஜனவரி 7, 2021

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

இராஜாங்க அமைச்சரின் இந்தக் கூற்றினை சரிபார்ப்பதற்கு FactCheck இலங்கை மத்திய வங்கியின் 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான ஆண்டறிக்கைகள் மற்றும் மத்திய வங்கியின் வாராந்த பொருளாதார குறிகாட்டிகளை ஆராய்ந்தது. இராஜாங்க அமைச்சர் மொத்த அலுவல்சார் ஒதுக்குகளை குறிப்பிடுவதாக FactCheck கருதுகின்றது (பிற வகையான ஒதுக்குகளின் வரைவிலக்கணங்களுக்கு மேலதிகக் குறிப்பு (iii) ஐப் பார்க்கவும்).

இராஜாங்க அமைச்சரின் முதலாவது கூற்று “எங்களிடம் ஐ.அ.டொலர் 8.2 பில்லியன் ஒதுக்கு காணப்பட்டது” என்பது, 9 ஜனவரி 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி முடிவுக்கு வந்த போது காணப்பட்ட ஒதுக்குச் சொத்து நிலைமையைக் குறிப்பிடுகின்றது. அந்த திகதிக்கு முன்னரான ஒதுக்குச் சொத்தின் நிலைமை தொடர்பாக பகிரங்கமாக பொதுவெளியில் கிடைக்கக்கூடிய சமீபத்திய தரவானது 31 டிசம்பர் 2014 ஆம் ஆண்டுக்குரியது, அதன் பிரகாரம் அவர் குறிப்பிட்டது போன்று மொத்த அலுவல்சார் ஒதுக்கு ஐ.அ.டொலர் 8.2 பில்லியன் ஆகும்.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ 16 நொவம்பர் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று அரசாங்கம் மாறிய போது ஒதுக்கு சொத்து நிலைமை 7 சதவீதத்தினால் குறைந்து ஐ.அ.டொலர் 7.6 பில்லியனாக காணப்பட்டது என்பது இரண்டாவது கூற்று. மொத்த அலுவல்சார் ஒதுக்கு (31 ஒக்டோபர் மற்றும் 30 நொவம்பர் 2019) உடனடியாக முன்னரும், பின்னரும் முறையே ஐ.அ.டொலர் 7.8 பில்லியன் மற்றும் 7.5 பில்லியன் ஆகும். இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டது இந்த இரண்டு இலக்கங்களுக்கும் இடையே உள்ளது.

கிடைக்கும் தகவல்கள் இராஜாங்க அமைச்சரின் கூற்றுக்களுக்கு ஆதரவாகவே காணப்படுகின்றன. ஆகவே, அவரது அறிக்கையை நாங்கள் “சரியானது” என வகைப்படுத்துகின்றோம்.

*பகிரங்கமாக பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck மறுபரிசீலனை செய்யும்.

மேலதிகக் குறிப்புக்கள்:

(i) 2020 ஆம் ஆண்டில் மொத்த அலுவல்சார் ஒதுக்கு வீழ்ச்சி: 2020 நொவம்பரில், மொத்த அலுவல்சார் ஒதுக்கு ஐ.அ.டொலர் 5,555, இது நொவம்பர் 2019 இல் இருந்து 26% வீழ்ச்சியாகும்.

(ii)   மொத்த அலுவல்சார் ஒதுக்கின் தரம்: 2014 ஆம் ஆண்டின் ஐ.அ.டொலர் 8.2 பில்லியன் ஒதுக்கில் 12 மாதங்களுக்குள் முதிர்ச்சியடையும் ஐ.அ.டொலர் 2,196 மில்லியன் பெறுமதியான பரஸ்பர பரிமாற்றல்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. அதேவேளை, 2019 ஒக்டோபர் மற்றும் நொவம்பரில் 12 மாதங்களுக்குள் முதிர்ச்சியடையும் பரஸ்பர பரிமாற்றல்கள் ஐ.அ.டொலர் 419 மில்லியன் ஆகும். 2020 நொவம்பரில் இது ஐ.அ.டொலர் 1,415 மில்லியனாக உயர்ந்தது. 2014 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 2019 ஆம் ஆண்டின் ஒதுக்கு சிறந்த தரமானது என்பதை இது சுட்டிக்காட்டுகின்றது.

(iii)   ஒதுக்குகளின் வரைவிலக்கணங்கள்: வெளிநாட்டு ஒதுக்குகளில் மூன்று முதன்மையான வடிவங்கள் காணப்படுகின்றன.

1) மொத்த அலுவல்சார் ஒதுக்கானது (GOR) அரசின் வெளிநாட்டு சொத்துக்கள் மற்றும் மத்திய வங்கியின் வெளிநாட்டு சொத்துக்களைக் குறிக்கின்றது.

2) மொத்த வெளிநாட்டு சொத்துக்கள் (TFA) மொத்த அலுவல்சார் ஒதுக்குகளுக்கு வைப்புக்களை ஏற்கும் கூட்டுத்தாபனங்களின் வெளிநாட்டுச் சொத்துக்களை உள்ளடக்கியது.

3) தேசிய பன்னாட்டு ஒதுக்குகள் (NIR) என்பது மொத்த அலுவல்சார் ஒதுக்குகளில் இருந்து ஒதுக்குடன் தொடர்புடைய பொறுப்புக்களைக் கழிப்பதைக் குறிப்பிடுகின்றது (அதாவது சர்வதேச நாணய நிதியத்தின் சிறப்பு எடுப்பனவு உரிமைகளைத் தவிர்த்து மத்திய வங்கியின் மொத்த கடன்).



மூலம்

இலங்கை மத்திய வங்கி, வாராந்த குறிகாட்டி, 3 ஜனவரி 2021, அட்டவணை 4.3, பக்கம் 15, பார்வையிட: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/statistics/wei/WEI_20200103_e_0.pdf

இலங்கை மத்திய வங்கி, வாராந்த குறிகாட்டி, 20 பெப்ரவரி 2015, அட்டவணை 4.4, பக்கம் 16, பார்வையிட: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/statistics/wei/wei_20150220.pdf

இலங்கை மத்திய வங்கி, வாராந்த குறிகாட்டி, 29 நொவம்பர் 2019, அட்டவணை 4.3, பக்கம் 15, பார்வையிட: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/statistics/wei/WEI_29_11_2019_e.pdf

இலங்கை மத்திய வங்கி, ஆண்டறிக்கை (2015), அட்டவணை 5.11, பக்கம் 165, பார்வையிட: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/publications/annual_report/2015/en/9_Chapter_05.pdf

இலங்கை மத்திய வங்கி, ஆண்டறிக்கை (2019), அட்டவணை 5.12, பக்கம் 198, பார்வையிட: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/publications/annual_report/2019/en/9_Chapter_05.pdf

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன