ரணில் விக்ரமசிங்க

தேர்தல் செலவுகள் குறித்து பிரதமர் தவறாகக் குறிப்பிடுகிறார்

"

இப்போது தேர்தலை நடத்த முடியாது. பொருளாதாரம் மிக மோசமடைந்து வருகிறது. பொருளாதாரத்தை நாங்கள் நிலைப்படுத்த வேண்டும். கடந்த தேர்தலுக்கான செலவு ரூ.10 பில்லியன். இந்த முறை ரூ.20 பில்லியன் செலவாகும்

டெய்லி நியூஸ் | மே 8, 2022

blatantly_false

Blatantly False

உண்மைச் சரிபார்ப்புகளும்

தேர்தலை ஏன் இப்போது நடத்த முடியாது என்பதற்கான இரண்டு முக்கிய காரணங்களை பிரமர் ரணில் விக்ரமசிங்க டெய்லி நியூஸுடனான நேர்காணலின்போது குறிப்பிட்டிருந்தார். அவை: (1) அரசாங்கத்திற்கு ஏற்படும் செலவு (2) பொருளாதாரம் மீதான எதிர்மறைத் தாக்கம்.

பிரதமரின் இந்தக் கூற்றைச் சரிபார்க்க தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும் வருடாந்தச் செயலாற்றுகை மற்றும் நிர்வாக அறிக்கைகளை FactCheck.lk ஆராய்ந்தது.

அவரது முதலாவது கூற்றில், கடந்த தேர்தலுக்கு ரூ. 10 பில்லியன் செலவானதாகவும் இப்போது தேர்தலை நடத்தினால் அதற்கு ரூ.20 பில்லியன் செலவாகும் எனவும் குறிப்பிடுகிறார். எனினும் தேர்தல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட 2022 செயலாற்றுகை அறிக்கையில், ஓகஸ்ட் 5ம் திகதி நடைபெற்ற 2020 பொதுத் தேர்தலுக்கு செலவிடப்பட்ட மொத்தத் தொகை ரூ.5.7 பில்லியன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பிரதமர் குறிப்பிடும் தொகையை விட சுமார் அரைப்பங்காகும். கடந்த தேர்தலுக்காக செலவிடப்பட்ட உண்மையான தொகையிலிருந்து அவர் குறிப்பிடும் தொகை மிக அதிகமாக உள்ளது. தற்போது தேர்தலை நடத்தினால் ரூ.20 பில்லியன் (கடந்த தேர்தலை விட 4 மடங்கு) செலவாகும் என அவர் குறிப்பிடுவது எந்த அடிப்படையும் அற்றது. கோவிட் 19 தொடர்பான நெறிமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக வழக்கமாகச் செலவிடப்படும் தொகையை விட கடந்த தேர்தலின்போது அதிகமாகச் செலவிடப்பட்டது.

அவரது இரண்டாவது கூற்றில், சாதகமான தாக்கத்தை பிரதமர் எதிர்மறையான தாக்கமாகத் தவறாகக் குறிப்பிடுகிறார். வேட்பாளர்கள் எதிர்காலப் பிரச்சாரத்திற்காகச் ரூ.30-40 பில்லியன்* செலவு செய்ய வேண்டியிருக்கும் என அவர் மதிப்பிடுகிறார். வேட்பாளர்கள் அவ்வாறு செலவு செய்வது உண்மையில் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதுடன் பிரச்சாரத்துடன் தொடர்புடைய சேவைகளை வழங்கும் நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் பயனளிக்கும். இது அரசாங்கத்தின் வருமானத்திற்கும் நன்மையளிக்கும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கொள்கைகளின் கீழ் எதிர்பார்க்கப்படும் வரி வருமானம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 10 சதவீதமாக இருக்கும்.** தேர்தல் பிரச்சாரங்களுக்காக பிரதமர் மதிப்பிட்ட தொகையில் பாதி மட்டுமே கூடுதல் வரிக்கு உட்பட செலவினமாகப் பெறப்பட்டாலும் கூட, அரசாங்கத்தின் வருமானம் சுமார் ரூ.2 பில்லியனால் அதிகரிக்கக்கூடும். இவை பொருளாதாரத்தில் நேர்மறையான தாக்கத்தை விட சாதகமான தாக்கத்தையே ஏற்படுத்தும்.

எனவே (1) கடந்த கால மற்றும் எதிர்காலத் தேர்தல்களுக்கான செலவுகள் குறித்த அவரது மதிப்பீடுகள் மிகைப்படுத்தப்பட்டுள்ளன (2) பொருளாதார நடவடிக்கைகள், தேர்தல் பிரச்சாரம் தொடர்பான சேவை வழங்குனர்கள், அரசாங்கத்திற்கு கிடைக்கும் வருமானம் ஆகியவற்றில் ஏற்படக்கூடிய சாதகமான விளைவுகளைக் கருத்தில் கொள்ளாமல் தேர்தலால் பொருளாதாரத்திற்கு எதிர்மறையான தாக்கம் ஏற்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, பிரதமரின் கூற்றை நாங்கள் முற்றிலும் தவறானது என வகைப்படுத்துகிறோம்.

* 2020 பொதுத்தேர்தலில் அனைத்து வேட்பாளர்களாலும் தேர்தல் பிரச்சாரத்திற்காகச் செலவிடப்பட்ட மொத்தத் தொகை ரூ.10-13 பில்லியன் என தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் வெளியிட்ட ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது.

** 2019-2021 காலப்பகுதியில் (அதாவது தற்போதைய ஜனாதிபதியின் கீழ்) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சராசரி வரி வருமானம் 9.1% ஆகும்.

 

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

 

 மூலம்

2022 பட்ஜெட் குழு கூட்டத்தில் தேர்தல் ஆணைக்குழுவால் சமர்ப்பிக்கப்படவிருக்கும் செயல்திறன் அறிக்கை: https://elections.gov.lk/web/wp-content/uploads/pdf/admin_reports/AR2022_E.pdf

தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் (CMEV) 2020 தேர்தல் இறுதி அறிக்கை: https://cmev.org/wp-content/uploads/2021/02/Final-Report_Campaign-Finance_CMEV_Parliamentary-Election_2020-1.pdf

2021 ஆம் ஆண்டு மத்திய வங்கி ஆண்டறிக்கை: https://www.cbsl.gov.lk/en/publications/economic-and-financial-reports/annual-reports/annual-report-2021

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன