உண்மைச் சரிபார்ப்புகளும்
இந்தக் கூற்றுகளைச் சரிபார்க்க சர்வதேச நாணய நிதியத்தால் வெளியிடப்பட்ட ஊடக வெளியீட்டையும் இலங்கை மத்திய வங்கியின் 2021 ஆண்டறிக்கையையும் Factcheck.lk ஆராய்ந்தது. ஆரம்ப கணக்கு மீதியானது வருமானத்திலிருந்து செலவினத்தை (கடன்கள் மீதான வட்டிக் கொடுப்பனவுகள் தவிர்த்து) கழிப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த நொவம்பர் 2019 – ஜுலை 2022 காலப்பகுதி 2020, 2021 ஆகிய நிதியாண்டுகளைக் கொண்டது. மத்திய வங்கியின் 2021 ஆண்டறிக்கையின் பிரகாரம், 2021ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்காக ஆரம்ப கணக்கு மீதி 6% எதிர்மறையாக இருந்து. இது முதலாவது கூற்று சரியென்பதைக் காட்டுகிறது.
செப்டெம்பர் 1, 2022 திகதியிடப்பட்ட ஊடக வெளியீட்டின் பிரகாரம், நீட்டிக்கப்பட்ட நிதியுதவியின் (ETF – Extended Fund Facility) கீழ் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவுவதற்காக சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கை அரசாங்கத்தின் இடையில் அலுவலர் மட்டத்திலான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. ‘2025ம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆரம்பக் கணக்கு மீதியை 2.3 சதவீதமாக எட்டுவதே இந்தத் திட்டத்தின் நோக்கம்’ என ஊடக வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இரண்டாவது கூற்றும் சரியென்பதை காட்டுகிறது.
மூன்றாவது கூற்றைச் சரிபார்க்க Factcheck.lk கடந்த காலப் பெறுமதிகளுடன் எதிர்பார்க்கப்படும் இலக்கை மதிப்பிட்டு பின்வருபவற்றைக் கண்டறிந்தது: (1) 1950ம் ஆண்டு முதல் ஆரம்ப மீதி 5 ஆண்டுகளில் மட்டுமே நேர்மறையாக இருந்துள்ளது. அதிகபட்சமாக மொ.உ.உற்பத்தியின் 2.8 சதவீதமாக 1955ம் ஆண்டில் இருந்துள்ளது. அதன் பிறகு ஆரம்ப கணக்கு மீதி எப்போதும் மொ.உ.உற்பத்தியின் 0.6 சதவீதத்தைத் தாண்டியதில்லை. எனினும் இப்போது 2.3 சதவீதம் எனும் இலக்கு வழங்கப்பட்டுள்ளது (விளக்கப்படம் 1 ஐப் பார்க்கவும்). (2) ஆரம்ப மீதிக்கான இலக்கை அடைய வேண்டுமானால் நான்காண்டு காலப்பகுதியில் ஆரம்ப கணக்கு மீதியை 8.3 சதவீதப் புள்ளிகளால் அதிகரிக்க வேண்டும். இது கடந்த 6 தசாப்தங்களில் ஒருமுறை மாத்திரமே எட்டப்பட்டுள்ளது. 1979-1983 காலப்பகுதியில் ஆரம்பக் கணக்கு 10.7 சதவீதப் புள்ளிகளால் அதிகரித்தது. சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ள இலக்கை அடைவதென்பது மகத்தான சாதனையாக இருக்கும் என்ற மூன்றாவது கூற்றை இந்த அவதானிப்புகள் ஆதரிக்கின்றன.
பாராளுமன்ற உறுப்பினரின் மூன்று கூற்றுகளும் கிடைக்கும் தகவல்களுடன் பொருந்துவதால் அவரது கூற்றை நாங்கள் சரியானது என வகைப்படுத்துகிறோம்.
விளக்கப்படம் 1: மொ.உ.உற்பத்தியின் பங்காக ஆரம்ப கணக்கு மீதியின் கடந்த காலப் பெறுமதிகள்
மூலம்: இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கை 2021, சிறப்பு புள்ளிவிபரப் பின்னிணைப்பு
குறிப்பு: 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கான இலங்கை மத்திய வங்கியின் ஆரம்ப மீதிக்கான பெறுமதிகள் தவறானவை. எனவே அவை விளக்கப்படத்தில் சரிசெய்யப்பட்டுள்ளன. கூடுதல் விபரங்களுக்கு FactCheck.lk இன் (link) முந்தைய உண்மைச் சரிபார்ப்பைப் பார்க்கவும்.
மூலம்
இலங்கை மத்திய வங்கி, ஆண்டறிக்கை 2021, சிறப்பு புள்ளிவிபரப் பின்னிணைப்பு
சர்வதேச நாணய நிதியம், “இலங்கையுடன் விரிவாக்கப்பட்ட நிதியுதவிக்கான அலுவலர் மட்ட உடன்படிக்கையை சர்வதேச நாணய நிதியத்தின் அலுவலர்கள் எட்டியுள்ளனர்”. செப்டெம்பர் 1, 2022. பார்வையிட https://www.imf.org/en/News/Articles/2022/09/01/pr22295-imf-reaches-staff-level-agreement-on-an-extended-fund-facility-arrangement-with-sri-lanka