ரமேஷ் பதிரண

அமைச்சர் பதிரண ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பில் குறிப்பிடும் புள்ளிவிபரம் மந்த போஷனைக்கு உரியவை

"

2009ம் ஆண்டில் 27.4 சதவீதமாகக் காணப்பட்ட ஊட்டச்சத்து குறைபாடு 2021ம் ஆண்டில் 12.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. எங்கள் சுகாதாரத் துறையின் வளர்ச்சியை இது பிரதிபலிக்கிறது.

பாராளுமன்ற ஹன்சாட் | செப்டம்பர் 7, 2022

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

2009ம் ஆண்டு முதல் இலங்கையில் ஊட்டச்சத்து குறைபாடு குறைந்து வருவதாக அமைச்சர் தனது அறிக்கையில் புள்ளிவிபரங்களை வழங்குகிறார்.

இந்தக் கூற்றைச் சரிபார்க்க, உலக சுகாதார நிறுவனம், குடித்தொகை மற்றும் சுகாதாரம் தொடர்பான தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் 2016 கணக்கெடுப்பு, சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதாரப் பணியகத்தின் தேசியப் புள்ளிவிபர டாஷ்போர்டு மற்றும் ஆண்டறிக்கைகளை FactCheck.lk ஆராய்ந்தது.

ஊட்டச்சத்து குறைபாடு என்பது ஊட்டச்சத்துக்களை குறைவாகவோ அதிகமாகவோ உட்கொள்வதால் பாதிக்கப்படுபவர்களைக் குறிக்கிறது. அதாவது மந்த போஷனை அல்லது அதிக போஷாக்கு ஆகும்.  (1) உடற்தேய்வு (Wasting) (2) குன்றிய வளர்ச்சி (Stunting) (3) நிறைக்குறைவு (Underweight) (வயதுக்கான சராசரி எடையில் இருந்து 2 புள்ளிகள் குறைவான நியமவிலகலைக் கொண்டிருத்தல்) போன்ற பண்புகளில் ஏதேனும் ஒன்றை ஒருவர் வெளிப்படுத்தினால் அதன் அடிப்படையில் மந்த போஷனை மதிப்பிடப்படுகிறது.

மந்த போஷனை தொடர்பான மதிப்பீடுகளின் புள்ளிவிபரங்களை சுகாதார அமைச்சு ஆண்டு தோறும் வழங்குவதுடன் தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் அவ்வப்போது வழங்குகிறது. அட்டவணை 1 சுகாதார அமைச்சின் 2009, 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளுக்கான புள்ளிவிபரங்களைக் காட்டுகிறது (மற்றும் தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின் 2016ம் ஆண்டுக்கான புள்ளிவிபரங்களையும் காட்டுகிறது).

5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் “நிறைக்குறைவு” 2009ம் ஆண்டில் 27.4% மற்றும் 2021ம் ஆண்டில் 12.2% என்ற சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தை அமைச்சர் சரியாகக் குறிப்பிடுகிறார்.

அமைச்சர் தனது அறிக்கையில் “ஊட்டச்சத்து குறைபாடு” என்னும் பதத்தைப் பயன்படுத்துகிறார். எனினும் அவர் சரியாகக் குறிப்பிட்ட புள்ளிவிபரமானது நிறைகுறைவான குழந்தைகளுக்கானது. இது ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் முழுமையான எண்ணிக்கை அல்ல. இதன் காரணமாக அவர் குறிப்பிடும் எண்ணிக்கைகள் சரியானவை அல்ல.

எனினும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது என்பதே அமைச்சர் முன்வைக்கும் முதன்மையான கருத்தாகும். ஊட்டச்சத்து குறைபாட்டில் அதிக உடல் எடையைப் பொறுத்தவரையில் ஒரளவு அதிகரிப்பு காணப்படுகிறது. ஆனால் மந்த போஷனையைப் பொறுத்தவரையில் அதைக் கணக்கிடும் மூன்று வடிவங்களிலும் பாரிய வீழ்ச்சி காணப்படுவதை அட்டவணை 1 காட்டுகிறது.

“நிறைக்குறைவு” தொடர்பான தரவை அமைச்சர் தவறாக ஊட்டச்சத்து குறைபாடு எனக் குறிப்பிட்டாலும், ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான ஒட்டுமொத்த தரவின் போக்கு அமைச்சர் முதன்மையாக முன்வைக்கும் கூற்றை ஆதரிக்கின்றன. எனவே அவரது கூற்றை பகுதியளவு சரியானது என நாங்கள் வகைப்படுத்துகிறோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

அட்டவணை 1: 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடையே ஊட்டச்சத்து நிலையின் அளவீடு (பெறுமதிகள் சதவீதத்தில்)

குடித்தொகை மற்றும் சுகாதாரம் தொடர்பான தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் 2016 கணக்கெடுப்பு, சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதாரப் பணியகத்தின் தேசியப் புள்ளிவிபர டாஷ்போர்டு 2009, 2016 மற்றும் 2021.


மூலம்

ஊட்டச்சத்து குறைபாடு, உலக சுகாதார நிறுவனம், பார்வையிட, https://www.who.int/health-topics/malnutrition#tab=tab_1[இறுதியாக அணுகியது: 22 நவம்பர் 2022]

சமூகத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடையே ஊட்டச்சத்து பிரச்சினைகளை நிர்வகிப்பதற்கான நெறிமுறைகள், சுகாதாரம் மற்றும் போஷாக்கு அமைச்சு, பார்வையிட, https://fhb.health.gov.lk/images/FHB%20resources/ChildNutrition/CIRCULAR/Protocol%20for%20managing%20nutrition%20problems.pdf [இறுதியாக அணுகியது: 22 நவம்பர் 2022]

குடித்தொகை மற்றும் சுகாதாரக் கணக்கெடுப்பு 2016, தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் மற்றும் சுகாதாரம் மற்றும் போஷாக்கு அமைச்சு, பார்வையிட,http://www.statistics.gov.lk/Health/StaticalInformation/DemographicAndHealthSurvey-2016FullReport [இறுதியாக அணுகியது: 22 நவம்பர் 2022]

தேசியப் புள்ளிவிபர டாஷ்போர்டு, சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதாரப் பணியகம், பார்வையிட, https://fhb.health.gov.lk/index.php/en/statistics [இறுதியாக அணுகியது: 22 நவம்பர் 2022]

ஆண்டறிக்கை 2019, சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதாரப் பணியகம், பார்வையிட, https://drive.google.com/file/d/1j3KdkBN0cwueRB9opmYsJN_03tNGvwDz/view [இறுதியாக அணுகியது: 22 நவம்பர் 2022]

ஆண்டறிக்கை 2018, சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதாரப் பணியகம், பார்வையிட, https://drive.google.com/file/d/1hDs-1C6gbneb44jw41aNvMDuP9W_FOev/view [இறுதியாக அணுகியது: 22 நவம்பர் 2022]

ஆண்டறிக்கை 2017, சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதாரப் பணியகம், பார்வையிட, https://drive.google.com/file/d/1sIAnkf1okrinQI3VDCtOokPtf9vvc94o/view [இறுதியாக அணுகியது: 22 நவம்பர் 2022]

ஆண்டறிக்கை 2016, சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதாரப் பணியகம், பார்வையிட, https://drive.google.com/file/d/1kNOB0IwEgIVKpP0-J3mC52dan6yY1qDL/view [இறுதியாக அணுகியது: 22 நவம்பர் 2022]

ஆண்டறிக்கை 2015, சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதாரப் பணியகம், பார்வையிட,https://drive.google.com/file/d/1cym2eQEM1PGuEM52KucGwThDw1m4kgnY/view [இறுதியாக அணுகியது: 22 நவம்பர் 2022]

ஆண்டறிக்கை 2014, சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதாரப் பணியகம், பார்வையிட, https://drive.google.com/file/d/1tgMSe1fRvwSJ8_LgDyHe1gsxDo4aKQiB/view [இறுதியாக அணுகியது: 22 நவம்பர் 2022]

ஆண்டறிக்கை 2013, சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதாரப் பணியகம், பார்வையிட, https://drive.google.com/file/d/1MwexX8NmDWWrpxcUCLHdMKPOr6AG-wNs/view [இறுதியாக அணுகியது: 22 நவம்பர் 2022]

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன