உண்மைச் சரிபார்ப்புகளும்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், அமைச்சர் இந்த அறிக்கையை விடுத்துள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையைத் திருத்தத்தின் மூலம் ஒழிக்க முடியாது எனவும் மாறாக புதிய அரசியலமைப்பை உருவாக்குவதன் மூலமே அதை முன்னெடுக்க முடியும் எனவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவரது கூற்றை நாம் இவ்வாறு புரிந்துகொள்ள முடியும். (1) திருத்தத்தை மேற்கொள்வது சட்டரீதியாக அனுமதிக்கப்படவில்லை அல்லது (2) அது நடைமுறையில் சாத்தியமற்றது.
இந்தக் கூற்றைச் சரிபார்க்க அரசியலமைப்பின் விதிகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்மானங்களை FactCheck.lk ஆராய்ந்து.
கூற்று ஒன்றைப் பொறுத்தவரையில், அரசியலமைப்பின் உறுப்புரை 75 பாராளுமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரத்தை விளக்குகிறது. அரசியலமைப்பின் எந்தவொரு விதியையும் ரத்து செய்யும் அல்லது திருத்தும் அல்லது அதனுடன் எந்தவொரு விதியையும் சேர்க்கும் அதிகாரம் இதில் அடங்கும். அரசியலமைப்பின் அல்லது அதன் எந்தவொரு பகுதியின் செயல்பாட்டையும் இடைநிறுத்துவது அல்லது புதிய அரசியலமைப்பை இயற்றாமல் அரசியலமைப்பை முழுவதுமாக இரத்துச் செய்வது போன்ற சட்டங்களை உருவாக்குவதற்கு மட்டுமே பாராளுமன்றம் தடை செய்யப்பட்டுள்ளது. “அரசியலைமைப்பைத் திருத்துதல்” என்று தலைப்பிடப்பட்ட அரசியலமைப்பின் அத்தியாயம் XII, அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான நடைமுறைத் தேவைகளை விளக்குகிறது.
அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கான சட்டமூலத்தில் அரசியலமைப்பைத் திருத்துவதற்கான பாராளுமன்றத்தின் அதிகாரத்தின் நோக்கத்தை உச்சநீதிமன்றம் அதன் தீர்மானத்தில் ஆராய்ந்தது. இலங்கையின் அரசியலமைப்பு ”அடிப்படைக் கட்டமைப்பைக்” கொண்டிருப்பதால் திருத்தத்தின் மூலம் அதை மாற்ற முடியாது என்ற வாதத்தை நீதிமன்றம் பரிசீலித்தது. அரசியலமைப்பின் விதிகள் தெளிவாக இருப்பதால் இந்த வாதத்தை அதன் பெரும்பான்மை தீர்ப்பின் மூலம் நிராகரித்து முடிவுக்கு வந்தது.
“But both our Constitutions of 1972 and 1978 specifically provide for the amendment or repeal of any provision of the Constitution or for the repeal of the entire Constitution-Vide Article 51 of the 1972 Constitution and Article 82 of the 1978 Constitution. In fact, Article 82(7) of the 1978 Constitution states “in this chapter “Amendment” includes repeal, alteration and addition.” In view of this exhaustive explanation that amendment embraces repeal, in our Constitution we are of the view that it would not be proper to be guided by concepts of ‘Amendment’ found in the Indian judgments which had not to consider statutory definition of the word ‘Amendment.’ Fundamental principles or basic features of the Constitution have to be found in some provision or provisions of the Constitution and if the Constitution contemplates the repeal of any provision or provisions of the entire Constitution, there is no basis for the contention that some provisions which reflects fundamental principles or incorporate basic features are immune from amendment. Accordingly, we do not agree with the contention that some provisions of the Constitution: are unamendable.” (In Re the Thirteenth Amendment to the Constitution and the Provincial Councils Bill (1987) 2 Sri L.R. 312, at pages 329-330)
அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கான சட்டமூலம் தொடர்பான அதன் தீர்மானத்தில் உச்ச நீதிமன்றம் அதே வாதத்தைக் கருத்தில் கொண்டு அதே தீர்மானத்திற்கு வந்தது.
“Furthermore, it is pertinent to observe that Articles 1, 2 and 3 of the Constitution expresses the nature of the State and the Sovereignty of the People. They encapsulate core features described in the preamble to the Constitution. Article 120(a) read with Article 83 of the Constitution provides that Articles specified therein, including Article I of the Constitution can be amended if such amendment is approved by People at a Referendum in addition to it being passed with the special majority in Parliament. Hence, we are unable to agree with the contention that some of the provisions of the Constitution cannot be amended even with the approval of the People, in addition to the special majority in Parliament.” (“Twentieth Amendment to the Constitution”, S.C.S.D. No.s 01/2020–27/2020, and 29/2020-39/2020)
உறுப்புரை 75 மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்மானம் ஆகியவற்றின் பிரகாரம் அரசியலமைப்பின் எந்தவொரு விதியோ விதிகளோ பாராளுமன்றத்தால் திருத்தப்படலாம். எனவே நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையானது அந்த முறைமையுடன் தொடர்புடைய எந்தவொரு உறுப்புரையும் சரியாகத் திருத்தப்பட்டால் அரசியலமைப்பைத் திருத்துவதன் மூலம் ஒழிக்கப்பட முடியும்.
கூற்று இரண்டானது இந்த முறைமையை ஒழிப்பதற்கான திருத்தத்தின் நடைமுறைத் தேவைகள் குறித்துப் பேசுகிறது. ஐக்கிய மக்கள் சக்தியால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூல வரைபு, அரசியலமைப்பு முழுவதும் காணப்படும் ஜனாதிபதியின் நியமனம், அதிகாரங்கள் மற்றும் முடிவுகளுடன் தொடர்புடைய அரசியலமைப்பின் பொருத்தமான அனைத்து விதிகளையும் திருத்துவதன் மூலம் அமைச்சர் குறிப்பிடும் நடைமுறைச் சிக்கல்களைச் சரிசெய்துள்ளதாகத் தெரிகிறது. நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதே இந்த சட்டமூலத்தின் முக்கிய நோக்கம் என்பது இந்த வழக்கில் ஆஜரான அனைத்துச் சட்டத்தரணிகளின் பொதுவான கருத்து என்பதை இந்த சட்டமூலம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம் பதிவுசெய்கிறது. இந்தப் பணி கடினமாக இருந்தாலும் அதை நடைமுறையில் செய்வது சாத்தியம் என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.
ஆகவே இந்த அறிக்கையை நாங்கள் தவறானது என வகைப்படுத்துகிறோம்.
*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.
மூலம்
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பு (1978)
அரசியலமைப்பின் 13வது திருத்தம் மற்றும் மாகாண சபைகள் சட்டமூலம் (1987) 2 Sri L.R. 312
“அரசியமைப்பின் 20வது திருத்தம்” (S.C.S.D. No.s 01/2020 – 27/2020, and 29/2020 – 39/2020)
“அரசியமைப்பின் 21வது திருத்தம்” (S.C.S.D. No.s 31/2022, 32/2022, 34/2022, 36/2022, and 37/2022)