உண்மைச் சரிபார்ப்புகளும்
பாராளுமன்ற உறுப்பினர் அவரது அறிக்கையில் (அ) கைத்தொழில்கள் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 26.4% பங்களிப்பை வழங்குகின்றன (ஆ) கைத்தொழில் ஏற்றுமதிகள் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 10% பங்களிப்பை வழங்குகின்றன (இ) 26.4% உற்பத்தியில் 10% ஏற்றுமதி என்பது மிகக்குறைந்த பங்கு எனக் குறிப்பிடுகின்றார்.
இந்தக் கூற்றினை மதிப்பிடுவதற்கு இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் தேசியக் கணக்குகள் மற்றும் வருடாந்த ஏற்றுமதிப் புள்ளிவிபரங்களையும், உலக வங்கியின் அபிவிருத்திக் குறிகாட்டிகளையும் FactCheck ஆராய்ந்தது.
(அ) உரிமை கோரலில் தற்காலிகத் தரவுகளின் பிரகாரம், 2020 இல் நடைமுறைச் சந்தை விலைகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.14,973 பில்லியன். இதில் கைத்தொழில் உற்பத்திகள் ரூ.3,930 பில்லியன் அல்லது 26.2% பங்களிப்பை வழங்கியுள்ளன. இது அமைச்சரின் கூற்றுடன் பொருந்திப் போகின்றது.
(ஆ) உரிமை கோரலில் 2020 இல் கைத்தொழில் ஏற்றுமதிகள் ரூ.1,419 பில்லியன். இது கைத்தொழில் உற்பத்தியில் 36% மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.5% ஆகும். 26.2% கைத்தொழில் உற்பத்திக்கு மாறாக மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 9.5% ஏற்றுமதி செய்யப்பட்டது என்பது பாராளுமன்ற உறுப்பினரின் 10% என்ற கூற்றை விளக்குகின்றது (அட்டவணை 1).
(இ) உரிமை கோரலில் உலக வங்கியின் தரவுகளின் பிரகாரம் 2017 ஆம் ஆண்டில், குறைந்த நடுத்தர வருமான நாடுகளின் கைத்தொழில் கூட்டப்பட்ட பெறுமதியின் சராசரி மொ.உ.உ சதவீதம் (தலைக்குரிய மொ.உ.உ ஐ.அ.டொ 1,036 – 4,045) மற்றும் உயர் நடுத்தர வருமான நாடுகளின் (தலைக்குரிய மொ.உ.உ ஐ.அ.டொ 4,046 – 12,535) கைத்தொழிலில் கூட்டப்பட்ட பெறுமதி* மற்றும் உற்பத்தி ஏற்றுமதிகள் முறையே 25.4% மற்றும் 25.9% – இது இலங்கையின் கைத்தொழிலில் கூட்டப்பட்ட பெறுமதி 26.2 சதவீதத்துடன் ஒத்திருக்கின்றது. எனினும் இலங்கையின் கைத்தொழில் ஏற்றுமதிகள் 9.5% என்பது குறைந்த நடுத்தர வருமான நாடுகளின் மொ.உ.உற்பத்தியில் ஏற்றுமதியின் பங்கான 4.3 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் அதிகமாகும். ஆனால் உயர் நடுத்தர வருமான நாடுகளின் மொ.உ.உற்பத்தியில் ஏற்றுமதியின் பங்கான 19.0 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் குறைவாகும் (அட்டவணை 2).
உள்நாட்டு உற்பத்தியின் பங்காக மொ.உ.உற்பத்திக்கு ஏற்றுமதியின் பங்களிப்பான 10% சதவீதம் என்பது மிகக்குறைவு என்ற அமைச்சரின் முடிவு, குறைந்த அல்லது உயர் நடுத்தர வருமான நாடுகளில் இலங்கை எதில் தரப்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்தே செல்லுபடியாகும். தற்போது தலைக்குரிய மொ.உ.உற்பத்தி ஐ.அ.டொ 3,682 ஐக் கொண்டுள்ள இலங்கை, குறைந்த மற்றும் உயர் நடுத்தர வருமான நாடு வகைப்படுத்தலுக்கு அருகில் உள்ளது. குறைந்த நடுத்தர வருமான நாடுகளின் அளவுகோல் 4.3 சதவீதத்துடன் இந்த உரிமை கோரலை நியாயப்படுத்த முடியாத போதிலும், உயர் நடுத்தர வருமான நாடு அளவுகோலான 19.0 சதவீதத்துடன் நியாயப்படுத்த முடியும். மேலும் குறைந்த நடுத்தர வருமான நாடுகளில் கால்பங்குக்கும் அதிகமானவை (இதற்கான தரவு 2017 இல் கிடைக்கின்றது) மொ.உ.உற்பத்தியில் ஏற்றுமதியின் பங்கு 10 சதவீதத்தை விட அதிகமாகவும், பாதிக்கும் அதிகமானவை ஏற்றுமதியில் 20 சதவீதத்திற்கும் அதிகமான பங்கினையும் கொண்டுள்ளன – ஆகவே குறைந்த நடுத்தர வருமான நாடுகளில் முதன்மையான 25 சதவீதத்தில் இலங்கையை மதிப்பிடுவதன் மூலம் பாராளுமன்ற உறுப்பினரின் உரிமை கோரலை நியாயப்படுத்த முடியும்.
ஆகவே அவரது கூற்றினை ‘சரியானது’ என நாங்கள் வகைப்படுத்துகின்றோம்.
*கைத்தொழிலில் கூட்டப்பட்ட பெறுமதி என்பது, பொருளாதாரத்தின் கைத்தொழில் துறையில் கூட்டப்பட்ட பெறுமதி ஆகும். பொருளாதாரத்தின் மொத்த கூட்டப்பட்ட பெறுமதிக்குப் பங்களிக்கும் மூன்று துறைகளில் இது ஒன்றாகும். மற்றைய இரண்டும் விவசாயம் மற்றும் சேவைகள் துறைகள் ஆகும்.
**பகிரங்கமாக பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck மறுபரிசீலனை செய்யும்.
மூலம்
இலங்கை மத்திய வங்கி, வெளிநாட்டுத் துறை புள்ளிவிபரங்கள், இறக்குமதி மற்றும் வர்த்தகம், ஏற்றுமதி – வருடாந்தம் (1990 இருந்து இன்று வரை) அட்டவணை, பார்வையிட: https://www.cbsl.gov.lk/en/statistics/statistical-tables/External-Sector [last accessed 26 April 2021] இலங்கை மத்திய வங்கி, புள்ளிவிபரங்கள், புள்ளிவிபர அட்டவணைகள், உண்மையான துறை, தேசியக் கணக்குகள், நடைமுறைச் சந்தை விலைகளில் கைத்தொழில் மூலங்களின் படி மொத்த உள்நாட்டு உற்பத்தி அட்டவணை, பார்வையிட: https://www.cbsl.gov.lk/en/statistics/statistical-tables/real-sector/national-accounts
[Last accessed 26 April 2021]
உலக வங்கி, தரவுகள், உலக அபிவிருத்தி குறிகாட்டிகள், பார்வையிட: https://databank.worldbank.org/source/world-development-indicators# [last accessed 18 May 2021]