சுனந்த மத்தும பண்டார

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தாமதங்கள் குறித்து ஜனாதிபதி ஆலோசகர் தவறாகக் குறிப்பிடுகிறார்

"

[…] 1991 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடைபெற்ற அனைத்து உள்ளூராட்சி சபைத் தேர்தல்களும் குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்தப்படாமல் பிற்போடப்பட்டன. […]

லங்காதீப | அக்டோபர் 25, 2023

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

1991 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடைபெற்ற அனைத்து உள்ளூராட்சி சபைத் தேர்தல்களும் பிற்போடப்பட்டன, அத்துடன் குறிப்பிட்ட காலத்திற்குள் அவை நடைபெறவில்லை என ஜனாதிபதி ஆலோசகர் குறிப்பிடுகிறார்.

இந்தக் கூற்றைச் சரிபார்க்க, 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இல. பிரதேச சபைகள் சட்டத்தின் (PSA) பிரிவுகள் 5(1) மற்றும் 5(2)(ஆ), மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் (MCO) பிரிவுகள் 10(1) மற்றும் 10(2)(ஆ), நகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் (UCO) பிரிவுகள் 10(1)(ஆ) மற்றும் 10(2)(ஆ) மற்றும் பாராளுமன்ற வலைதளம் ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது.

மேலேயுள்ள பிரிவுகளில் PSA, MCO, UCO ஆகியவற்றில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்கான “குறிப்பிட்ட காலப்பகுதி” நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுடன் இரண்டு சூழ்நிலைகளை (S1 மற்றும் S2) கொண்டுள்ளது.

  • அனுமதிக்கப்பட்ட காலநீட்டிப்புகள் செயல்படுத்தப்படாவிட்டால், S1க்கு 48 மாதங்கள் நிர்ணயிக்கப்பட்ட காலம் உள்ளது.
  • அனுமதிக்கப்பட்ட காலநீட்டிப்புகள் செயல்படுத்தப்பட்டால், S2க்கு 60 மாதங்கள் நிர்ணயிக்கப்பட்ட காலம் உள்ளது.

அனைத்து ஆறு உள்ளூராட்சி சபைத் தேர்தல்களும் நடைபெற்ற திகதியை அட்டவணை 1 காட்டுகிறது. ஒரு உள்ளூராட்சி சபைத் தேர்தல் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நடைபெற்றுள்ளது (S1 இன் கீழ்), இரண்டு தேர்தல்கள் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நடைபெற்றுள்ளன (S2 இன் கீழ்), இரண்டு மட்டுமே குறிப்பிட்ட காலப்பகுதியைத் தாண்டி நடைபெற்றுள்ளது என்பதை இது காட்டுகிறது.

ஜனாதிபதி ஆலோசகரின் அறிக்கை, தற்போதைய உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதைக் குறிப்பிடுவதாகப் புரிந்துகொள்ள முடியும். இது சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட காலப்பகுதியைத் தாண்டியுள்ளது.

ஜனாதிபதி ஆலோசகர் இரண்டு விடயங்களில் தவறிழைத்துள்ளார்: (அ) அனைத்து தேர்தல்களும் பிற்போடப்படவில்லை, ஏனெனில் 2006 உள்ளூராட்சி சபைத் தேர்தல் 48 மாதங்களுக்குள் நடைபெற்றுள்ளது (ஆ) இரண்டு தேர்தல்கள் மட்டுமே குறிப்பிட்ட காலப்பகுதியைத் தாண்டி நடைபெற்றுள்ளன.

ஆகவே ஜனாதிபதி ஆலோசகரின் கூற்றை நாங்கள் தவறானது என வகைப்படுத்துகிறோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

மேலதிகக் குறிப்பு:

1987 ஆம் ஆண்டு சட்டத்திற்கு திருத்தங்களாக அமைந்த மூன்று சட்டங்கள் காரணமாக 2018 உள்ளூராட்சி சபைத் தேர்தல் தாமதமாக நடைபெற்றது. 2012 ஆம் ஆண்டின் 21 ஆம் இல. உள்ளூராட்சி அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டம், 2016 ஆம் ஆண்டின் 1 ஆம் இல. உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டம் மற்றும் 2017 ஆம் ஆண்டின் 16 ஆம் இல. உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டம் ஆகியன வாக்களிப்பு முறை, பெண்களின் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் மற்றும் வட்டாரங்களின் எல்லை நிர்ணயம் ஆகிய திருத்தங்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டன. புதிய வட்டாரங்களுக்கான எல்லைகளை நிர்ணயம் செய்த தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை மீதான சட்ட ரீதியான சவால்கள் காரணமாக வாக்கெடுப்பை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

அட்டவணை 1: உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள்



மூலம்

தேர்தல்களின் திகதிகள், பாராளுமன்றம்: https://parliament.lk/en/dates-of-elections

1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இல. பிரதேச சபைகள் சட்டம்: https://www.parliament.lk/files/ca/12._Pradeshiya_Sabhas_Act.pdf

https://citizenslanka.org/wp-content/uploads/2016/02/Pradeshiya-Sabhas-Act-No-15-of-1987-E.pdf

மாநகர சபைகள் கட்டளைச் சட்டம்: https://www.srilankalaw.lk/revised-statutes/alphabetical-list-of-statutes/1576-municipal-councils-ordinance.html

நகர சபைகள் கட்டளைச் சட்டம்: https://www.srilankalaw.lk/u/1578-urban-councils-ordinance.html

இலங்கையின் தேர்தல் வரலாற்றில் தேர்தல் மைல்கற்கள், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம்: https://cmev.org/wp-content/uploads/2016/09/election-milestones-of-the-electoral-history-in-sri-lanka.pdf

உள்ளூராட்சி அதிகாரசபைகள் கட்டளைச் சட்டத்தின் அதிவிசேட வர்த்தமானி http://www.documents.gov.lk/files/egz/2017/12/2047-52_E.pdf

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன