ரன்ஜித் சியம்பலாபிடிய

வாகனங்களின் இறக்குமதி எண்ணிக்கை குறித்து இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிடிய சரியாகக் குறிப்பிடுகிறார்

"

…[2015-2020] இந்தக் காலப்பகுதிக்குள் நாங்கள் 2,498,714 வாகனங்களைக் கொண்டு வந்துள்ளோம்… இவற்றின் பெறுமதி ரூ.1,331.51 பில்லியன்… நாங்கள் (அவற்றின் பெறுமதிக்கு) 991.12 பில்லியனை வரியாக விதித்துள்ளோம்.

இலங்கைப் பாராளுமன்றத்தின் யூடியூப் பக்கம் | ஜூன் 9, 2023

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

அரசாங்கத்தின் வரி வருமானங்களை அதிகரிப்பதற்காக வாகன இறக்குமதி மீது தற்போதுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கான முன்மொழிவுகளை அரசாங்கம் பரிசீலித்துவரும் நிலையில் இராஜாங்க அமைச்சர் இந்தக் கூற்றை முன்வைத்துள்ளார். 

இராஜாங்க அமைச்சரின் இந்தக் கூற்றைச் சரிபார்க்க, நிதி அமைச்சின் ஆண்டறிக்கை 2022 மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கை 2022 ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது. 

2015 முதல் 2020 வரையில் 2,530,830 மோட்டார் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இது இராஜாங்க அமைச்சர் குறிப்பிடும் பெறுமதியுடன் (1.5 சதவீதத்திற்குள்) ஓரளவு பொருந்துகிறது. 

அதே காலப்பகுதியில்தனிநபர் வாகனங்கள்/இயந்திர பாகங்களின்பெறுமதி ரூ.1,133.63 பில்லியன் என இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை குறிப்பிடுகிறது. இது இராஜாங்க அமைச்சர் குறிப்பிடும் ரூ.1331.51 பில்லியன் எனும் பெறுமதியுடன் பொருந்தவில்லை. எனினும் 133 என்பதை அமைச்சர் 331 எனத் தவறுதலாகக் குறிப்பிட்டுள்ளார் எனக் கருதலாம். 

இதேவேளை, “மோட்டார் வாகனங்கள் மற்றும் ஏனையவைமூலம் கிடைக்கப்பெற்ற மொத்த வரி வருமானம் ரூ.1,053.51 பில்லியன் என அறிக்கையிடப்பட்டுள்ளது. இது இராஜாங்க அமைச்சர் குறிப்பிடும் பெறுமதியை விட சற்று அதிகமாகும். எனினும் மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் மோட்டார் வாகனங்கள் மற்றும் ஏனையவை எனும் பரந்த வகைக்கு குறிப்பிடப்பட்டுள்ளதால், இராஜாங்க அமைச்சர் மோட்டார் வாகனங்களுக்கு மட்டும் குறிப்பிடும் வரி வருமானம் சரியாக இருக்கக்கூடும். 

எனவே நாங்கள் அவரது அறிக்கையை சரியானது என வகைப்படுத்துகிறோம். 

மேலதிகக் குறிப்பு: வாகன இறக்குமதி மூலமான வரிகள் மற்றும் அரச வருமானத்தில் அவற்றின் தாக்கத்தைக் கவனத்தில் கொள்ளும்போது, 2015-2019 காலப்பகுதியில்மோட்டார் வாகனங்கள் மற்றும் ஏனையவைமூலமான சராசரி வரி வருமானம் (மோட்டார் வாகனங்கள் மீது இறக்குமதி கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு முன்னர்) இலங்கையின் மொ.உ.உற்பத்தியில் 1.48% ஆகும். 

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும் மூலம்

புள்ளிவிபரப் பின்னிணைப்பு, இலங்கை மத்திய வங்கி 2022, பார்வையிட: 

https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/publications/annual_report/2022/en/15_Appendix.pdf [இறுதியாக அணுகியது: 19 ஜுலை 2022] 

புள்ளிவிபரப் பின்னிணைப்பு, இலங்கை மத்திய வங்கி 2019, பார்வையிட: 

https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/publications/annual_report/2019/en/15_Appendix.pdf [இறுதியாக அணுகியது: 19 ஜுலை 2022] 

செய்தி அறிக்கைகளுக்கு தயவுசெய்து இங்கே பார்க்கவும் 

https://www.ft.lk/front-page/Govt-mulls-lifting-of-vehicle-import-restrictions/44-749364  

https://www.ft.lk/front-page/Siyambalapitiya-does-a-U-turn-on-vehicle-imports/44-749521  

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன