அஜித் நிவாட் கப்ரால்

முன்னாள் ஆளுநரின் அறிக்கையில் மூன்று தவறுகள் உள்ளன

"

2015 – 2019 காலப்பகுதியில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி படிப்படியாக 7 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைந்தது. வெளிநாட்டுக் கடன் ஐ.அ.டொ 15 பில்லியனால் அதிகரித்திருந்தாலும் வெளிநாட்டு ஒதுக்குகள் ஐ.அ.டொ 1 பில்லியனால் குறைவடைந்தன.

நியூஸ்19.lk | மார்ச் 23, 2022

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் தனது அறிக்கையில், 2015 – 2019 காலப்பகுதியில் பின்வரும் மூன்று விடயங்களைக் குறிப்பிடுகிறார்:

  1. இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்திலிருந்து படிப்படியாக 2 சதவீதமாகக் குறைந்துள்ளது
  2. இலங்கையின் வெளிநாட்டுக் கடன் ஐ.அ.டொ 15 பில்லியனால் அதிகரித்துள்ளன
  3. இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்குகள் ஐ.அ.டொ 1 பில்லியனால் குறைந்துள்ளன

இந்தக் கூற்றுகளை மதிப்பிடுவதற்கு இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கைகளையும் நிதியமைச்சின் ஆண்டறிக்கைகளையும் FactCheck.lk ஆராய்ந்தது.

அவரது முதலாவது கூற்றை மதிப்பிடுவதற்கு, உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வருடாந்த வளர்ச்சி வீதத்தைக் கொண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மதிப்பிடப்பட்டது. 2014ம் ஆண்டின் இறுதியில் இலங்கையின் வளர்ச்சி வீதம் 5 சதவீதமாகவும் 2019ல் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம் 2.3 சதவீதமாகவும் இருப்பதை அட்டணை 1 காட்டுகிறது. முன்னாள் ஆளுநர் 2010 முதல் 2014 வரையான சராசரி வளர்ச்சி வீதமான 6.8 சதவீதத்தைப் பயன்படுத்தியிருக்கக்கூடும். எனினும் அந்தப் பெறுமதியைப் பயன்படுத்தியிருந்தால், 2015 முதல் 2019 வரையான சராசரி வளர்ச்சி வீதம் 3.7% ஆகும். அவ்வாறு இருந்தாலும் அவர் குறிப்பிடுவது போன்று 5% வீழ்ச்சி இல்லை. வெறும் 3.1% மட்டுமே வீழ்ச்சியடைந்துள்ளது.

அவரது இரண்டாவது கூற்றை மதிப்பிடுவதற்கு, இலங்கையின் வெளிநாட்டுப் படுகடனில் ஏற்பட்ட அதிகரிப்பை FactCheck.lk கணக்கிட்டது. இதில் இறையாண்மை உத்தரவாதத்தின் கீழ் பெறப்பட்ட அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் கடனும் அடங்கும். 2014ம் ஆண்டின் இறுதி முதல் 2019ம் ஆண்டின் இறுதி வரையில் முன்னாள் ஆளுநர் குறிப்பிடுவது போன்று ஐ.அ.டொ 15 பில்லியன் அன்றி, ஐ.அ.டொ 12.5 பில்லியன் மட்டுமே அதிகரித்துள்ளதை அட்டவணை 2 காட்டுகிறது.

மூன்றாவது கூற்றைப் பொறுத்தவரையில், மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் முன்னாள் ஆளுநர் குறிப்பிடுவது போன்று ஐ.அ.டொ 1 பில்லியனால் அன்றி, 2014ம் ஆண்டின் இறுதி முதல் 2019ம் ஆண்டின் இறுதி வரை ஐ.அ.டொ 0.57 பில்லியன் மாத்திரமே குறைந்துள்ளதை அட்டவணை 3 காட்டுகிறது.

முன்னாள் ஆளுநர் குறிப்பிடும் பெறுமதிகள் அவரது மூன்று கூற்றுக்களுடனும் பொருந்தவில்லை. ஆகவே அவரது அறிக்கையை நாங்கள் ‘தவறானது’ என வகைப்படுத்துகிறோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

குறிப்பு: எனினும் 2014ம் ஆண்டின் இறுதியில் மொத்த அலுவல்சார் ஒதுக்குகளில் 27 சதவீதமானவை குறுகிய கால பரஸ்பர நாணயப் பரிமாற்றங்களைக் கொண்டிருந்தன. 2019 ஆம் ஆண்டின் இறுதியில் மொத்த அலுவல்சார் ஒதுக்குகளில் 5 சதவீதமானவை மட்டுமே குறுகிய கால பரஸ்பர நாணயப் பரிமாற்றங்களைக் கொண்டிருந்தன. அந்நிய செலாவணி திரவத்தன்மையில் ஏற்படும் தற்காலிகப் பற்றாக்குறையைச் சரிசெய்யவும் வெளிநாட்டு ஒதுக்குகளை மேம்படுத்தவும் இந்த பரஸ்பர நாணயப் பரிமாற்றங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆகவே வெளிநாட்டு ஒதுக்குகளில் ஏற்பட்ட அதிகரிப்பை மதிப்பிட இவற்றைத் தவிர்க்க வேண்டும். அதன் பிரகாரம் 2014 இறுதி முதல் 2019 இறுதி வரை பரஸ்பர நாணயப் பரிமாற்றங்கள் இல்லாமல் மொத்த அலுவல்சார் ஒதுக்குகளில் ஏற்பட்ட அதிகரிப்பு ஐ.அ.டொ 1.27 பில்லியன் என்பதை அட்டவணை 3 காட்டுகிறது.

அட்டவணை 1: உண்மையான மொ.உ.உ வளர்ச்சி வீதங்கள் 2010 – 2019

மூலம்: இலங்கை மத்திய வங்கி சிறப்பு புள்ளிவிபரப் பின்னிணைப்பு 2020

அட்டவணை 2: மொத்த வெளிநாட்டுப் படுகடன்

மூலம்: இலங்கையின் கடனில் ஏற்பட்ட அதிகரிப்பைத் தெளிவுபடுத்தல், வெரிட்டே ரிசர்ச்

அட்டவணை 3: இலங்கையின் ஒதுக்குகளின் நிலை

மூலம்: இலங்கை மத்திய வங்கி சிறப்பு புள்ளிவிபரப் பின்னிணைப்பு 2020மூலம்

இலங்கை மத்திய வங்கி 2020 ஆண்டறிக்கை – சிறப்பு புள்ளிவிபரப் பின்னிணைப்பு

இலங்கையின் கடனில் ஏற்பட்ட அதிகரிப்பைத் தெளிவுபடுத்தல், வெரிட்டே ரிசேர்ச், பார்வையிட: https://www.dailymirror.lk/other/Demystifying-increase-in-Sri-Lankas-debt/117-226501 [இறுதியாக அணுகியது 4th ஏப்ரல் 2022]

இலங்கை மத்திய வங்கியின் வாராந்தப் பொருளாதாரக் குறிகாட்டிகள் 2014 – 2018 வரையான பல்வேறு பதிப்புகள்

மத்திய வங்கியின் சிறப்பு தரவு வெளிப்படுத்தலுக்கான தரம், பார்வையிட: http://erd.cbsl.gov.lk/erd/presentation/htm/english/erd/sdds/rpt_sdds.aspx [இறுதியாக அணுகியது 4th ஏப்ரல் 2022]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன