ஹர்ஷ டி சில்வா

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இலங்கையின் பணவீக்கம் தொடர்பில் சரியாகக் குறிப்பிடுகிறார்

"

”இப்போது ஆசியாவிலேயே நாங்கள் தான் (இலங்கை) உயர் பணவீக்கத்தைக் கொண்டிருக்கிறோம்”

அத தெரண | பிப்ரவரி 1, 2022

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

பாராளுமன்ற உறுப்பினர் இலங்கையை தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுவதாக அவரது கூற்றை FactCheck.lk விளங்கிக் கொள்கிறது. எனினும் இந்தக் கூற்றை மதிப்பிடும்போது அனைத்து ஆசிய நாடுகளின் மத்திய வங்கிகள் மற்றும் புள்ளிவிபர அமைப்புகளின் இணையதளங்களை FactCheck.lk ஆராய்ந்தது.

2021ம் ஆண்டுக்கான அதிக பணவீக்க வீதங்களைக் கொண்ட தெற்காசிய நாடுகளை அட்டவணை 1 நிரல்படுத்துகிறது. 2021ம் ஆண்டின் மொத்தப் பணவீக்கம் என்பது டிசம்பர் மாத இறுதியில் அந்தந்த நாடுகளின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட ஆண்டுக்கு ஆண்டு சதவீத அதிகரிப்பு ஆகும். இது இலங்கைக்கு 14 சதவீதமாக உள்ளது. பிற தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது அதிகமாகும். அத்துடன் மத்திய கிழக்கு தவிர அனைத்துப் பிற ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையிலும் உயர்வாகவே உள்ளது.

ஆகவே பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை ‘சரியானது’ என நாங்கள் வகைப்படுத்துகிறோம்.

குறிப்பு: இலங்கை புள்ளிவிபரத் திணைக்களமும் கொழும்பு நுவர்வோர் விலைச் சுட்டெண்ணை வெளியிடுகிறது. இது 2021ம் ஆண்டுக்கான மொத்தப் பணவீக்கத்தை 12.1% எனக் குறிப்பிடுகிறது.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

 

 மூலம்

இலங்கை, பணவீக்கமும் விலைகளும், தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்,பார்வையிட: http://www.statistics.gov.lk/InflationAndPrices/StaticalInformation/MonthlyNCPI/MovementsOf-NCPI

பாகிஸ்தான், விலைச் சுட்டெண்கள் மீதான மாதாந்த மீளாய்வு, பாகிஸ்தான் புள்ளிவிபரப் பணியகம், பார்வையிட: https://www.pbs.gov.pk/sites/default/files//price_statistics/monthly_price_indices/nb/2022/cpi_review_december_2021.pdf

நேபாளம், நேபாளத்தின் தற்போதைய பேரண்டப் பொருளாதாரம் மற்றும் நிதி நிலைமை, நேபாள ராஷ்டிர வங்கி, பார்வையிட: https://www.nrb.org.np/contents/uploads/2022/02/Current-Macroeconomic-and-Financial-Situation-English-Based-on-Six-Months-data-of-2021.22.pdf

பூட்டான், நுகர்வோர் விலைச் சுட்டெண்: டிசம்பர் 2021, தேசிய புள்ளிவிபரப் பணியகம், பார்வையிட://www.nsb.gov.bt/consumer-price-index-october-2020/

பங்களாதேஷ், பங்களாதேஷ் வங்கி, பார்வையிட: https://www.bb.org.bd/en/index.php/econdata/inflation

இந்தியா, வாராந்தப் புள்ளிவிபர இணைப்பு, இந்திய ரிசர்வ் வங்கி, பார்வையிட: https://rbi.org.in/Scripts/WSSView.aspx?Id=25091

ஆப்கானிஸ்தான், டா ஆப்கானிஸ்தான் வங்கி, பார்வையிட: https://dab.gov.af/inflation-rate

மாலைதீவு, வருடாந்த நுகர்வோர் விலைச் சுட்டெண் 2021, மாலைதீவு புள்ளிவிபரப் பணியகம், பார்வையிட: http://statisticsmaldives.gov.mv/cpi-annual-2021/

மொங்கோலியா, நுகர்வோர் விலைச் சுட்டெண்கள், மொங்கோலிய மத்திய வங்கி, பார்வையிட: https://www.mongolbank.mn/eng/dblistcpi_mng.aspx

கிர்கிஸ்தான், விலைகள் மற்றும் கட்டணங்கள், கிர்கிஸ் குடியரசின் தேசிய புள்ளிவிபரப் பணியகம், பார்வையிட: http://stat.kg/en/statistics/ceny-i-tarify/

உஸ்பெகிஸ்தான், ஆண்டுக்கு ஆண்டு, மாதத்துக்கு மாதம் மற்றும் மொத்தப் பணவீக்கம், உஸ்பெகிஸ்தான் குடியரசின் மத்திய வங்கி, பார்வையிட: https://cbu.uz/en/monetary-policy/annual-inflation/indicators/

கஸகஸ்தான், விலைகளின் புள்ளிவிபரம், கஸகஸ்தான் குடியரசின் புள்ளிவிபரத் தேசியப் பணியகத்தின் மூலோபாயத் திட்டமிடல் மற்றும் மறுசீரமைப்பு முகவரகம், பார்வையிட: https://stat.gov.kz/official/industry/26/statistic/6

தஜிகிஸ்தான், மாதாந்த பணவீக்க மீளாய்வு, தஜிகிஸ்தான் மத்திய வங்கி, பார்வையிட: https://www.nbt.tj/en/macroeconomic/tavarrumi-solona-iyun-2017.php

 

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன