நிரோஷன் பெரேரா

தொழில்துறை தொடர்பில் சரியாகக் குறிப்பிடும் பா.உ பெரேரா ஏற்றுமதிகள் தொடர்பில் தவறாகக் குறிப்பிடுகிறார்

"

…ஏற்றுமதிகள் 19.5 சதவீதத்தால் குறைந்துள்ளன. […] 2023 முதல் காலாண்டில் தொழில்துறை 23.4 சதவீதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பாராளுமன்ற யூடியூப் பக்கம் | ஆகஸ்ட் 23, 2023

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

பாராளுமன்ற உரையின்போது பாராளுமன்ற உறுப்பினர் இரண்டு கூற்றுகளை முன்வைக்கிறார். (1) ஏற்றுமதிகள் 19.5 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளன, (2) 2023 முதல் காலாண்டில் தொழில்துறை 23.4 சதவீதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூற்றுகளைச் சரிபார்க்க, இலங்கை மத்திய வங்கி வெளியிடும் ஏற்றுமதி மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பான புள்ளிவிபரங்களை FactCheck.lk ஆராய்ந்தது

கூற்று 1: பாராளுமன்ற உறுப்பினர் இதற்கான கால அளவைக் குறிப்பிடவில்லை. எனினும் ஜுன் 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஜுன் 2023ல் பொருட்களின் ஏற்றுமதி 19.5 சதவீதத்தால் குறைந்துள்ளதை இலங்கை மத்திய வங்கியின் ஏற்றுமதி புள்ளிவிபரங்கள் காட்டுவதை FactCheck.lk கண்டறிந்தது

ஏற்றுமதி வருமானத்தில் சுழற்சிகள் மற்றும் ஏற்ற இறக்கங்கள் காணப்படுவதால் ஒரு மாதத்தின் ஏற்றுமதிகளை மட்டும் கருத்தில் கொண்டு ஒட்டுமொத்தமாக ஏற்றுமதிகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடுவது தவறாகும். உதாரணமாக, ஜுன் 2023க்குப் பதிலாக பாராளுமன்ற உறுப்பினர் ஜுலை 2023 ஐக் கவனத்தில் கொண்டால் ஏற்றுமதியில் ஏற்பட்ட மாற்றம் 12.4% ஆகும்.

பல்வேறு மாதங்களுக்கு ஏற்றுமதிகளை ஒப்பிடுவதே சரியான மதிப்பீடாக இருக்கும். 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு மற்றும் இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடும்போது, 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையின் ஏற்றுமதிகள் 7.9 சதவீதத்தாலும் இரண்டாம் காலாண்டில் 12.1 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளன. இந்த இரண்டு வீழ்ச்சிகளும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் 19.5% என்பதை விடக் குறிப்பிடத்தக்க அளவு குறைவாகும்.

கூற்று 2: 2022 முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 2023 முதல் காலாண்டில் தொழில்துறை உற்பத்தியின் உண்மையான பெறுமதி 23.4 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதை மொ.உ.உ தரவு உறுதிப்படுத்துகிறது. இது பாராளுமன்ற உறுப்பினரால் சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுருக்கமாகக் குறிப்பிடுவதானால், தொழில்துறை உற்பத்தி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சரியாகக் குறிப்பிடுகிறார். எனினும் ஏற்றுமதிகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி தொடர்பில் அவர் குறிப்பிடும் பெறுமதி சற்று அதிகமாகவும் தவறாகவும் உள்ளது. ஏனெனில் அவர் மாதந்தோறுமான மாற்றங்களை ஒப்பிடுகிறார். காலாண்டு போன்ற நீண்ட கால அடிப்படையில் ஏற்றுமதிகளை மதிப்பிடும்போது ஏற்படும் பொதுவான போக்குகளை இது பிரதிபலிக்காது.

ஆகவே, நாங்கள் பாராளுமன்ற உறுப்பினரின் அறிக்கையை பகுதியளவு சரியானது என மதிப்பிடுகிறோம்.மூலம்

‘வெளிநாட்டுத்துறை துறை’, இலங்கை மத்திய வங்கி: https://www.cbsl.gov.lk/en/statistics/statistical-tables/external-sector

தேசிய கணக்குகள்: மொத்த உள்நாட்டு உற்பத்தி: https://www.cbsl.gov.lk/en/statistics/statistical-tables/real-sector/national-accounts

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன