கோட்டாபய ராஜபக்ஷ

ஜனாதிபதி ராஜபக்ஷ கடன்கள் தொடர்பில் தவறாகக் குறிப்பிடுகிறார்

"

நான் பதவியில் இருந்த இரண்டு ஆண்டுகளில் வெளிநாட்டுக் கடனாக ஒரு சதத்தைக் கூட பெறவில்லை.

நியூஸ்வயர் | ஜனவரி 7, 2022

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

ஜனாதிபதியின் கூற்றை மதிப்பிடுவதற்கு நிதியமைச்சின் 2020 ஆண்டறிக்கை மற்றும் அரசிறை முகாமைத்துவ அறிக்கை 2022 ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது.

இலங்கை எந்தவொரு கால கட்டத்திலும் ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட கடன்கள் மூலமான கொடுப்பனவுகள் மற்றும் புதிதாக ஒப்புக்கொள்ளப்படும் கடன்கள் ஆகிய இரண்டு வழிகளில் வெளிநாட்டுக் கடன்களைப் பெறுகிறது.

ஜனவரி 2020 முதல் ஓகஸ்ட் 2021 வரை, ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட கடன்கள் மூலம் இலங்கை ஐ.அ.டொலர் 3,467 மில்லியன் கொடுப்பனவைப் பெற்றுள்ளது. குறித்த காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 2,962 மில்லியன் பெறுமதியான புதிய கடன் ஒப்பந்தங்களையும் இலங்கை முன்னெடுத்துள்ளது (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்). இந்தப் புதிய கடன் ஒப்பந்தங்களில் சில ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. இதில் சீன அபிவிருத்தி வங்கியில் இருந்து பெறப்பட்ட ஐ.அ.டொலர் 1,308 மில்லியன் கடனும் அடங்கும். இந்தப் பெறுமதிகள் ஜனாதிபதியின் கூற்றுடன் முரணாக உள்ளன.

பலதரப்பு மற்றும் இருதரப்பு புதிய சலுகைக் கடன்களுக்கு மாறாக சந்தையை அடிப்படையாகக் கொண்ட புதிய கடன்களை மாத்திரம் ஜனாதிபதி குறிப்பிடுவதாக இருந்தாலும் கூட ஜனாதிபதியின் கூற்று தவறு ஆகும். நிதியமைச்சின் பிரகாரம் ஜனவரி 2020 முதல் ஓகஸ்ட் 2021 வரையில் இலங்கை ஐ.அ.டொலர் 1,308 மில்லியன் பெறுமதியான சந்தைக் கடன்களைப் பெற்றுள்ளது.

ஜனாதிபதி தமது ஆட்சிக்காலத்தில் எந்தவித வெளிநாட்டுக் கடன்களையும் பெறவில்லை என்று குறிப்பிடுவது தவறு ஆகும். 2020 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒப்புக்கொள்ளப்பட்ட புதிய கடன்களைக் குறிப்பிடுவதாகவோ சந்தையை அடிப்படையாகக் கொண்ட புதிய கடன்களை மட்டும் குறிப்பிடுவதாகவோ கருதினாலும் கூட அது தவறாகவே இருக்கிறது.

ஆகவே ஜனாதிபதியின் கூற்றை நாங்கள் ‘தவறானது’ என வகைப்படுத்துகிறோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.



மூலம்

நியூஸ்வயர், 2022. ”எனது இரண்டு ஆண்டு காலத்தில் எந்த வெளிநாட்டுக் கடன்களும் பெறப்படவில்லை” ஜனாதிபதிநியூஸ்வயர் (ஓன்லைன்) பார்வையிட: <https://www.newswire.lk/2022/01/07/no-foreign-loans-h-been-taken-during-my-two-years-president/> [Accessed 25 January 2022].

அரசிறை முகாமைத்துவ அறிக்கை 2022, பார்வையிட: https://www.treasury.gov.lk/api/file/16e9c6ec-7a13-4220-a8a7-1427c5d14785

நிதியமைச்சின் ஆண்டறிக்கை 2020, பார்வையிட: https://www.treasury.gov.lk/p/annual-reports

இலங்கை மத்திய வங்கி, வெளிநாட்டுத் துறை செயலாற்றம், செப்டெம்பர் 2021, பார்வையிட: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/press/pr/press_20211115_external_sector_performance_september_2021_e.pdf

இலங்கை மத்திய வங்கி, வெளிநாட்டுத் துறை செயலாற்றம், ஏப்ரல் 2021, பார்வையிட: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/press/pr/press_20210617_external_sector_performance_april_2021_e.pdf

இலங்கை மத்திய வங்கி, வெளிநாட்டுத் துறை செயலாற்றம், மார்ச் 2020, பார்வையிட: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/press/pr/press_20200601_external_sector_performance_march_2020_e.pdf

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன