ரன்ஜித் சியம்பலாபிடிய

கசினோ வரிகள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிடிய தவறாகக் குறிப்பிடுகிறார்

"

[…] ஏப்ரல் 1, 2023 முதல் அமுலுக்கு வரும்வகையில் சூதாட்டம் போன்ற வணிக நிலையத்திற்குள் நுழையும் ஒவ்வொரு இலங்கையர்களுக்கும் ஐ.அ.டொ 50 கட்டணத்தை விதிக்க நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். இந்தச் சட்டம் 2015 ஆம் ஆண்டு முதல் உள்ளது. (தொடர்ச்சி…)

Manthiri.lk Watch | ஆகஸ்ட் 9, 2023

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

(தொடர்ச்சி…)

“2015 ஆம் ஆண்டு முதல், சட்டத்தின் பிரகாரம் ஒவ்வொருவரிடமும் ஐ.அ.டொ 100 அறவிடப்பட வேண்டும். எனினும் இந்த எட்டு வருட காலத்தில் ஒரு சதம் கூட அறவிடப்படவில்லை. இந்த ஆண்டு முதலே இந்தக் கட்டணத்தை நாங்கள் அறவிடத் தொடங்கியுள்ளோம். […] தொடக்கத்தில் ஐ.அ.டொ 50 ஐ விதிப்பதுடன் பின்னர் இதை ஐ.அ.டொ 200 ஆக அதிகரிப்பதன் மூலம் இலங்கையர்களின் பங்களிப்பு குறையும் என நாங்கள் நம்புகிறோம்.”

2023 ஆம் ஆண்டின் 11 ஆம் இல. பந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு (திருத்த) சட்டம் (BGL23) தொடர்பில் பாராளுமன்றத்தில் வழங்கப்பட்ட நீண்ட உரையின் ஒரு பகுதியே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. சேகரிக்கப்படும் வருமானத்தை அதிகரிப்பதற்காகவும் இலங்கையர்களின் பங்களிப்பைக் குறைப்பதற்காகவும் கசினோ வரிகளில் சட்டமியற்றுபவர்கள் திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிடிய குறிப்பிடுகிறார். இந்த அறிக்கையில் அவர் பின்வரும் கூற்றுகளை முன்வைக்கிறார்: (1) இலங்கையர்களுக்கு ஐ.அ.டொ 50 நுழைவுக் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது (2) எதிர்காலத்தில் இது ஐ.அ.டொ 200 ஆக அதிகரிக்கும்போது கசினோக்களில் இலங்கையர்களின் பங்களிப்பு குறையத்தொடங்கும்.

இந்தக் கூற்றுகளை மதிப்பிடுவதற்கு, BGL23, இதற்கு முன் காணப்பட்ட 2015 ஆம் ஆண்டின் 14 ஆம் இல. பந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு சட்டம் (BGL15), வெரிட்டே ரிசர்ச்சால் முன்னெடுக்கப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாகப் பெறப்பட்ட தகவல்கள் ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது.

கூற்று 1: சமீபத்திய திருத்தத்தில் (BGL23) இலங்கையர்களிடமிருந்து கசினோ நுழைவுக் கட்டணம் ஐ.அ.டொ 50 வசூலிக்கப்பட வேண்டும் என்பதை அட்டவணை 1 உறுதிப்படுத்துகிறது.

கூற்று 2: BGL15 இல் குறிப்பிடப்பட்ட கசினோ நுழைவுக் கட்டணமான ஐ.அ.டொ 100 இந்த ஆண்டு பெப்ரவரி வரை சேகரிக்கப்படவில்லை என்பதையும் (அட்டவணை 2 ஐப் பார்க்கவும்) அதன் பின்னர் சேகரிக்கப்பட்டது என்பதையும் வெரிட்டே ரிசர்ச்சின் தகவல் அறியும் கோரிக்கை மூலம் பெறப்பட்ட தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

BGL23 இயற்றப்படுவதற்கு முன்னர், கசினோ நுழைவுக் கட்டணம் ஐ.அ.டொ 100 இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்டது. சட்டம் இயற்றப்பட்டதன் பின்னர், இலங்கையர்களிடம் இருந்து பெறப்படும் கட்டணம் ஐ.அ.டொ 50 ஆகக் குறைக்கப்பட்டது. மேலும் வெளிநாட்டவர்களிடம் இருந்து பெறப்படும் கட்டணம் ரத்து செய்யப்பட்டது. அதாவது ஐ.அ.டொ 100 இலிருந்து பூஜ்ஜியமாக்கப்பட்டது (ஏப்ரல் 1, 2023 இலிருந்து).

BGL23 மூலம் இலங்கையர்கள் மீது விதிக்கப்பட்ட வரி தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சரியாகக் குறிப்பிடுகிறார். அத்துடன் இந்த ஆண்டிலிருந்தே கசினோ நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதையும் சரியாகக் குறிப்பிடுகிறார். எனினும் BGL23 மூலம் இலங்கையர்களின் பங்களிப்பைக் குறைப்பதுடன் வரி சேகரிப்பை மேம்படுபடுத்த முற்படுவதாக அவர் தவறான முடிவுக்கு வருகிறார். BGL23 தற்போது (அ) இலங்கையர்களுக்கான கசினோ நுழைவுக் கட்டணத்தை பாதியாகக் குறைத்ததன் மூலம் இலங்கையர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கிறது (ஆ) வெளிநாட்டவர்களுக்கான நுழைவுக் கட்டணத்தை இல்லாது செய்ததன் மூலம் வரி சேகரிப்பை வெகுவாகக் குறைத்துள்ளது என்பதை அடையாளம் காண அவர் தவறியுள்ளார்.

எனவே இராஜாங்க அமைச்சரின் அறிக்கையை நாங்கள் பகுதியளவு சரியானது என வகைப்படுத்துகிறோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

அட்டவணை 1: கசினோ நுழைவுக் கட்டணத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள்

அட்டவணை 2: BGL மூலமான சேகரிப்பு தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடம் வெரிட்டே ரிசேர்ச் தாக்கல் செய்த தகவல் அறியும் கோரிக்கைக்கான பதில்

 மூலம்

2015 ஆம் ஆண்டின் 14 ஆம் இல. பந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு (திருத்த) சட்டம், http://www.ird.gov.lk/en/publications/Acts_Betting%20and%20Gaming%20Levy/BNG_Act_No._14_2015_E.pdf

2023 ஆம் ஆண்டின் 11 ஆம் இல. பந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு (திருத்த), http://www.ird.gov.lk/en/publications/Acts_Betting%20and%20Gaming%20Levy/BNG_Act_No._11_2023_E.pdf

அறிவித்தல்: கேசினோ நுழைவுக் கட்டணத்தை அமுல்படுத்துதல், உள்நாட்டு இறைவரித் திணைக்களம்: http://www.ird.gov.lk/en/Lists/Latest%20News%20%20Notices/Attachments/495/PN_CEL_2023_01_07022023_E.pdf

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன