உண்மைச் சரிபார்ப்புகளும்
முக்கியத்துவம் வாய்ந்த அரசுக்குச் சொந்தமான 52 நிறுவனங்களின் (நிதியமைச்சினால் வகைப்படுத்தப்பட்டது) நட்டம் தொடர்பில் பா.உ 2 கூற்றுகளை முன்வைக்கிறார்: (1) 2021ம் ஆண்டில் ரூ.286 பில்லியன் (2) 2022ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ரூ.966 பில்லியன்.
இந்தக் கூற்றுகளைச் சரிபார்க்க, நிதியமைச்சின் 2022ம் ஆண்டுக்கான அரையாண்டு நிதிநிலை அறிக்கையை FactCheck.lk ஆராய்ந்தது. இந்த 52 முக்கியமான அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் தேறிய நட்டம் ரூ.86 பில்லியன் என இந்த அறிக்கையின் அட்டவணை 3.2ல் குறிப்பிடப்பட்டுள்ளது (அட்டவணை 1). எனினும் நட்டத்தை எதிர்கொண்ட 52 நிறுவனங்களில் 20 நிறுவனங்களின் (மொத்த) நட்டம் ரூ.286 பில்லியன். பாராளுமன்ற உறுப்பினர் இந்தத் தொகையையே குறிப்பிடுகிறார் (அட்டவணை 1).
இரண்டாவது கூற்றைப் பொறுத்தவரையில், நிதியமைச்சின் அறிக்கையின் பிரகாரம் 52 முக்கிய அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் தேறிய நட்டம் ஏப்ரல் 2022 இறுதியில் ரூ.859 பில்லியன் ஆகும். எனினும் நட்டத்தில் இயங்கும் 20 நிறுவனங்களின் (மொத்த) நட்டம் ரூ.933 பில்லியன் ஆகும் (அட்டவணை 1). இது பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்ட தொகையுடன் ஓரளவு பொருந்துகிறது.
2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கு பா.உ குறிப்பிடும் தொகை நட்டத்தில் இயங்கும் 20 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் மொத்த நட்டத்துடன் பொருந்துகிறது. எனினும் இந்த அறிக்கை தவறாகக் கருதப்படலாம்: பாராளுமன்ற உறுப்பினர் 52 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களைக் குறிப்பிடுகிறார். ஆனால் நட்டத்தில் இயங்கும் 20 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் மொத்த நட்டத்தை மட்டுமே குறிப்பிடுகிறார். 52 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் தேறிய நட்டம் அதை விடக் குறைவாகும். ஏனெனில் அவற்றில் சில இலாபத்தை ஈட்டுகின்றன.
தேறிய நட்டங்களுக்குப் பதிலாக மொத்த நட்டங்களைக் குறிப்பிடுவதால் இந்த அறிக்கை தவறாகக் கருதப்படக்கூடும் என்பதால், பகுதியளவு சரியானது என நாங்கள் வகைப்படுத்துகிறோம்.
*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.
குறிப்பு: 2021ம் ஆண்டின் 12 மாதங்களுடன் ஒப்பிடுகையில், 52 முக்கிய அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் தேறிய நட்டம் 2022ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் ரூ.773 பில்லியனால் அதிகரித்துள்ளது. (மொத்த நட்டம் ரூ.646 பில்லியனால் அதிகரித்துள்ளது). 2022ம் ஆண்டில் நட்டங்கள் இவ்வாறு அதிகரித்தமைக்கு மோசமான திறைசேரி முகாமைத்துவம் காரணமாக அமைந்துள்ளது – கடன்களை அமெரிக்க டொலர்களில் வைத்திருப்பது, மார்ச் மாதத்தில் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததால் ஏற்பட்ட நட்டத்தினால் பாதிக்கப்பட்டது போன்றவை காரணங்கள் ஆகும். கடந்த காலங்களில் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் நட்டங்களில் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததால் ஏற்பட்ட தாக்கம் குறித்து மேலும் அறிய, https://bit.ly/3WJ201d இணைப்பைக் கிளிக் செய்யவும்.
அட்டவணை 1: 52 முக்கிய அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் நட்டங்கள் தொடர்பான தரவின் ஒப்பீடு
மூலம்
நிதியமைச்சின் 2022க்கான நடப்பாண்டு நிதி அறிக்கை, பார்க்க: https://www.treasury.gov.lk/api/file/65addab5-c203-46f1-b095-cb9a59881e6b[இறுதியாக அணுகியது 11 நவம்பர் 2022]