உண்மைச் சரிபார்ப்புகளும்
ஒரு லீற்றர் பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய்க்கான எரிபொருள் விலைச் சூத்திர விலை விபரம் தொடர்பில் அமைச்சரின் சமீபத்திய ட்வீட்டை இந்த உண்மைச் சரிபார்ப்பு அடிப்படையாகக் கொண்டுள்ளது. அடுத்துவரும் மாதத்திற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விதிக்கும் கட்டணத்தை நியாயப்படுத்தும் வகையில் இந்த விலை விபரம் உள்ளது. அவரது ட்வீட்டில், எரிபொருள் விலைச் சூத்திரத்தின் நியாயப்படுத்த முடியாத பதிப்பின் மூலம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு குறைந்த இலாபம் கிடைப்பதாக அமைச்சர் குறிப்பிடுகிறார்.
இந்த ட்வீட்டைச் சரிபார்ப்பதற்கு, 2018ம் ஆண்டில் நிதி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்ட எரிபொருள் விலைச் சூத்திரம் மற்றும் இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட பிற தரவைப் பயன்படுத்தி ஒரு லீற்றருக்கான விலையை FactCheck.lk மதிப்பிட்டது. நிதி அமைச்சின் சூத்திரத்திற்கு இணங்க, மார்ச் 1 முதல் 28 வரையான சராசரி சிங்கப்பூர் பிளாட்ஸ் பெற்றோல் மற்றும் டீசல் விலைகளை FactCheck.lk பயன்படுத்தியது (அட்டவணை 2 ஐப் பார்க்கவும்). 92- ஒக்டெய்ன் மற்றும் ஓட்டோ டீசல் ஆகியவற்றுக்கான தரவு மட்டுமே கிடைக்கிறது.
அட்டவணை 1 மேலே குறிப்பிடப்பட்ட அமைச்சரின் மதிப்பீடுகளுடன் முரண்படுகிறது. FactCheck.lk முன்னெடுத்த கணக்கீடுகளின் பிரகாரம் பெற்றோலுக்கு ரூ.35 மற்றும் டீசலுக்கு ரூ.49 இலாபம் கிடைக்கிறது. எனினும் அமைச்சர் பெற்றோலுக்கு ரூ.2 மற்றும் டீசலுக்கு ரூ.0 இலாபம் கிடைப்பதாகக் குறிப்பிடுகிறார்.
அமைச்சரின் பெறுமதியும் FactCheck.lk கணக்கிட்ட பெறுமதியும் முரண்படுவதற்கு முக்கிய காரணம் சிங்கப்பூர் பிளாட்ஸ் விலையை விட அமைச்சர் அதிக விலையை தனது கணக்கீட்டில் பயன்படுத்துகிறார். உதாரணமாக, 92 – ஒக்டெய்ன் பெற்றோலைப் பொறுத்தவரையில், அமைச்சர் (உண்மையான) செலவு ஐ.அ.டொ 107.3 எனக் குறிப்பிடுகிறார். ஆனால் மார்ச் மாதத்திற்கான பீப்பாய் ஒன்றின் சராசரி சிங்கப்பூர் பிளாட்ஸ் விலை ஐ.அ.டொ 94 ஆகும். அமைச்சரின் ட்வீட்டின் அடிக்குறிப்பில் பெற்றோல் நவம்பர் 2022ல் பெறப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. எனினும், நவம்பர் 2022க்கான சராசரி சிங்கப்பூர் பிளாட்ஸ் விலை ஐ.அ.டொ 93 எனக் குறைவாகவே உள்ளது. எனினும் அரசாங்கத்தின் கொள்முதல் ஒழுங்கற்றதாகவும் உலக சந்தை விலையை விட அதிகமாகவும் இருந்திருக்கலாம் என்பதைச் சரிபார்க்க முடியாத போதிலும் நிகழ்ந்திருக்க சாத்தியம் உள்ளது.
சிங்கப்பூர் பிளாட்ஸ் விலைகளை விட அதிக பெறுமதியில் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கொள்வனவு செய்யக்கூடாது என நிதி அமைச்சின் சூத்திரம் கருதுகிறது. கடந்த ஆண்டை விடக் குறைந்த விலையில் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கொள்வனவு செய்துள்ளதை முந்தைய உண்மைச் சரிபார்ப்பு ஒன்று காட்டுகிறது (https://bit.ly/3M51zeE எனும் இணைப்பைப் பார்க்கவும்). எனவே நிதி அமைச்சின் சூத்திரத்தில் சரியான சந்தை விலையைக் கணக்கிடும் நோக்கில் சிங்கப்பூர் பிளாட்ஸ் விலையை விட கூடுதலான பெறுமதி கருத்தில் கொள்ளப்படவில்லை.
செலவைக் கணக்கிடுவதில் நிதி அமைச்சின் எரிபொருள் விலைச் சூத்திரத்தின் வழிமுறையை அமைச்சர் பயன்படுத்தியள்ளார். ஆனால் அதிகபட்ச விலையைக் கணக்கிடுவதற்கான சரியான அடிப்படையாக சிங்கப்பூர் பிளாட்ஸ் விலைகளைப் பயன்படுத்த அவர் தவறிவிட்டார். எனினும் அவர் சிக்கல் குறித்து அறிந்திருக்கிறார் என்பதை அடிக்குறிப்பு சுட்டிக்காட்டுகிறது. எனவே நாங்கள் அவரது அறிக்கையை பகுதியளவு சரியானது என வகைப்படுத்துகிறோம்.
*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.
அட்டவணை 1: பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள்
அட்டவணை 2: FactCheck.lk மதிப்பீட்டின் விரிவான கணக்கீடு
மூலம்
இலங்கை மத்திய வங்கி, நாளாந்த கொள்வனவு மற்றும் விற்பனை விலை (ஐ.அ.டொலர் ஒன்றிற்கு இல.ரூபா), பார்வையிட https://www.cbsl.gov.lk/rates-and-indicators/exchange-rates/daily-buy-and-sell-exchange-rates (இறுதியாக அணுகியது: மார்ச் 31, 2023)
எரிபொருள் விலைச் சூத்திரம் மற்றும் பயன்படுத்தப்பட்ட அனுமானங்கள் – https://factcheck.lk/factcheck/mp-gammanpila-no-shortage-of-facts-on-fuel/
நிதி அமைச்சு, ஊடக அறிக்கை (டிசம்பர் 31, 2018), பார்வையிட http://www.treasury.gov.lk/web/guest/article/-/article-viewer-portlet/render/view/retail-prices-of-auto-fuels-as-at-december-19-2018-as-per-fuel-pricing-mechanism (இறுதியாக அணுகியது: மார்ச் 24, 2023)
நிதி அமைச்சு, ஊடக அறிக்கை (அக்டோபர் 16, 2018), பார்வையிட treasury.gov.lk/documents/10181/606187/PRESS+RELEASE+-+Fuel+Formula20181016/acd8b96e-fae4-46b5-ae30-25086e16134e?version=1.0 (இறுதியாக அணுகியது: மார்ச் 24, 2023)
இலங்கை சுங்கம், சுங்க இறக்குமதி தீர்வை – 2022, பார்வையிட https://www.customs.gov.lk/customs-tariff/import-tariff/ (இறுதியாக அணுகியது: மார்ச் 30, 2023)
நிதி அமைச்சு, சுங்க இறக்குமதி தீர்வைகள் மீதான தள்ளுபடி (மார்ச் 24, 2021), https://treasury.gov.lk/api/file/95bfd5ef-e255-4310-a437-0b23bea9e284 (இறுதியாக அணுகியது: மார்ச் 02, 2023)
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், கடந்த கால விலைகள், https://ceypetco.gov.lk/historical-prices/ (இறுதியாக அணுகியது: மார்ச் 31, 2023)
முகப்பு – எரிபொருள் விலை கணிப்பான் (publicfinance.lk)