உண்மைச் சரிபார்ப்புகளும்
“பெறப்பட்ட கடன்கள்” என்பது அரசாங்கத்தின் கடன்களில் புதிதாகச் சேர்க்கப்பட்ட கடன்களைக் குறிப்பிடுவதாக FactCheck.lk விளங்கிக் கொள்கிறது. பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களில் இருந்து ஏற்கனவே பெறப்பட்ட கடன்களின் மூலதன மீள்கொடுப்பனவைக் கழிக்கும்போது இது கிடைக்கிறது.
ஆகவே “கடன்களைத் திருப்பிச் செலுத்துவது” என்பதை ஏற்கனவே பெறப்பட்ட கடன்களுக்கான வட்டிக் கொடுப்பனவைச் செலுத்துதல் என நாங்கள் விளங்கிக் கொள்கிறோம். ஆகவே நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தின்போது (2015 – 2019) பெறப்பட்ட புதிய கடன்களில் 80% ஏற்கனவே காணப்பட்ட கடன்களுக்கான வட்டிக் கொடுப்பனவைச் செலுத்தப் பயன்பட்டதாக ஐ.தே.க பிரதித் தலைவர் குறிப்பிடுகிறார்.
இந்தக் கூற்றைச் சரிபார்ப்பதற்கு, வெரிட்டே ரிசேர்ச் வெளியிட்ட இலங்கையின் கடன்களில் ஏற்பட்ட அதிகரிப்பைத் தெளிவுடுத்தல் எனும் அறிக்கையை FactCheck.lk ஆராய்ந்தது.
2015 – 2019 வரை கடன்களில் ஏற்பட்ட அதிகரிப்பில் 89.8% 2014ம் ஆண்டின் இறுதியில் காணப்பட்ட கடன்களின் வட்டிக் கொடுப்பனவுக்காகச் செலவிடப்பட்டதை குறித்த அறிக்கையிலிருந்து பெறப்பட்ட அட்டவணை 1 காட்டுகிறது.
கடந்த காலக் கடன்களை (வட்டிக் கொடுப்பனவுகள்) செலுத்துவதற்காகப் புதிய கடன்களில் 80% பயன்படுத்தப்பட்டதாக ஐ.தே.க பிரதித் தலைவர் குறிப்பிடுகிறார். கடந்த காலக் கடன்களின் வட்டிக் கொடுப்பனவுகளுக்காக இதைவிட அதிகம் (89.8%) பயன்படுத்தப்பட்டுள்ளதை பகுப்பாய்வு சுட்டிக்காட்டப்படுகிறது.
ஆகவே அவரது கூற்றை சரியானது என நாங்கள் வகைப்படுத்துகிறோம்.
*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.
அட்டவணை 1: 2015 – 2019 காலப்பகுதியில் ஏற்பட்ட கடன் அதிகரிப்பில் கடந்தகால வட்டிக் கொடுப்பனவுகளின் தாக்கம்
மூலம்
வெரிட்டே ரிசேர்ச் வெளியிட்ட இலங்கையின் கடன் அதிகரிப்பைத் தெளிவுடுத்துதல், பார்வையிட: https://www.dailymirror.lk/other/Demystifying-increase-in-Sri-Lankas-debt/117-226501 (இறுதியாக அணுகியது 11 மே 2022)