ஜனக ரத்நாயக்க

பெற்றோல் விலையைக் குறைப்பதற்கான சாத்தியத்தை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டுகிறார்

"

நேற்றிரவு பெற்றோலின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டது. ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை 150 ரூபாவால் குறைக்க முடியும் என நான் இரண்டு வாரங்களுக்கு முன்பு சுட்டிக்காட்டியிருந்தேன்.

PUCSL Press Release | ஜூலை 18, 2022

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

ஜுலை 17ம் திகதி பெற்றோலின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டதற்குப் பதிலாக 150 ரூபாவால் குறைக்க முடியும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவிக்கிறார். அவரது கூற்றின் பிரகாரம், ஒரு லீற்றர் 92 ஒக்டேய்ன் பெற்றோலை ரூ.320க்கு விற்பனை செய்ய முடியும் (470-150).

இந்தக் கூற்றைச் சரிபார்க்க, 2018ம் ஆண்டில் நிதியமைச்சு உருவாக்கிய எரிபொருள் விலைச் சூத்திரத்தையும் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட பிற தரவையும் FactCheck.lk ஆராய்ந்தது. அரசாங்கத்திற்குச் செலுத்தப்படும் வரிகள் உட்பட இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஏற்படும் அனைத்துச் செலவுகளையும் முழுதாகத் திரும்பப்பெறும் வகையில் எரிபொருள் விலைச் சூத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைப்பதன் காரணமாக இந்த உண்மைச் சரிபார்ப்பு பெற்றோலின் விலைக்கு மாத்திரமே முன்னெடுக்கப்படுகிறது.

எரிபொருள் விலைச்சூத்திரத்தின் பிரகாரம் (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்), ஜுலை 17ம் திகதி அன்று ஒரு லீற்றர் 92 ஒக்டேய்ன் பெற்றோலின் விலையில் (ரூ.470) ஒரு பீப்பாய்க்கான இறக்குமதிச் செலவு 160 ஐ.அ.டொலரும் உள்ளடக்கப்பட்டுள்ளது (இது ஒரு லீற்றருக்கு சுமார் 1 ஐ.அ.டொலர் ஆகும்). பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிடுவது போன்று ஒரு லீற்றர் பெற்றோலை ரூ.320க்கு விற்பனை செய்ய வேண்டுமானால், ஒரு பீப்பாய் 92 ஒக்டேய்ன் பெற்றோலை இலங்கை அதிகபட்சமாக 105 ஐ.அ.டொலர்களுக்கு இறக்குமதி செய்ய வேண்டும். இது இலங்கை ரூபாயின் மதிப்பில் ஒரு லீற்றருக்கு சுமார் ரூ.237 ஆகும்.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தனது கூற்றுக்கான அடிப்படையாக சுங்க இறக்குமதி ஆவணங்களை கோப் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளார். FactCheck.lk இவற்றில் சில ஆவணங்களைப் பெற்று அவற்றை FactCheck.lk தளத்தில் வெளியிட்டுள்ளது. ஒரு பீப்பாய் 92 ஒக்டேய்ன் பெற்றோல் உண்மையில் 105 ஐ.அ.டொலர்களுக்கும் குறைவாக இறக்குமதி செய்யப்படுவதை ஆவணங்கள் காட்டுகின்றன (அட்டவணை 2 ஐப் பார்க்கவும்). ஆகவே விலைச் சூத்திரத்திற்கு ஏற்ப அனைத்துச் செலவுகளையும் வரிகளையும் சேர்த்து பெற்றோலை ரூ.320 ஐ விடக் குறைவான விலையில் விற்பனை செய்ய முடியும்.

ஆகவே பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரின் அறிக்கையை சரியானது என நாங்கள் வகைப்படுத்துகிறோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

 

அட்டவணை 1: 92 ஒக்டேய்ன் பெற்றோலை ரூ.320க்கு விற்க வேண்டுமானால் அதிகபட்ச இறக்குமதி விலை

மூலம்: நிதியமைச்சு, விலைச் சூத்திரம் 2018

அட்டவணை 2: எரிபொருளின் உண்மையான இறக்குமதிச் செலவு

மூலம்: FactCheck.lk பெற்றுக்கொண்ட சுங்க இறக்குமதி ஆவணங்கள்



Additional Note

குறிப்பு: எரிபொருளின் இறக்குமதிச் செலவு சிங்கப்பூர் பிளாட்ஸ் விலைக்குச் சமமானது என எரிபொருள் விலைச்சூத்திரம் அனுமானிக்கிறது. இதன் அடிப்படையிலேயே அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் அறிக்கை சரியானது எனத் தீர்மானிக்கப்பட்டது (https://factcheck.lk/factcheck/mp-kanchana-wijesekera-misidentifies-beneficiaries-of-bond-transaction-losses/). எனினும் அதன்பிறகு தெரியவந்துள்ள உண்மையான எரிபொருள் இறக்குமதிச் செலவை இந்த உண்மைச் சரிபார்ப்பு கவனத்தில் கொண்டுள்ளது.


மூலம்

எரிபொருள் விலைச் சூத்திரம், பார்வையிட: https://publicfinance.lk/en/topics/fuel-price-tracker-1653909188 [இறுதியாக அணுகியது ஆகஸ்ட் 2, 2022]

நிதியமைச்சு, ஊடக வெளியீடு (ஒக்டோபர் 16, 2018), பார்வையிட: www.treasury.gov.lk/documents/10181/606187/PRESS+RELEASE+-+Fuel+Formula20181016/acd8b96e-fae4-46b5-ae30-25086e16134e?version=1.0 [இறுதியாக அணுகியது மார்ச் 24, 2022]

FactCheck.lk பெற்றுக்கொண்ட சுங்க இறக்குமதி ஆவணங்கள்:

https://mcusercontent.com/7dec08f7f8b599c6b421dfd10/files/172e38fc-4d3c-aaf4-2081-3da3f738050b/20220803_CUSDECDocuments_FuelPrice.pdf [இறுதியாக அணுகியது ஆகஸ்ட் 3, 2022]

இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு, ஊடக வெளியீடு (ஜுலை 18, 2022), பார்வையிட: https://www.pucsl.gov.lk/proper-fuel-price-formula-2022-07-18/ [இறுதியாக அணுகியது ஆகஸ்ட் 3, 2022]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன