உண்மைச் சரிபார்ப்புகளும்
மேலேயுள்ள கூற்றில், பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பில இரண்டு விடயங்களைக் குறிப்பிடுகின்றார். (1) முஸ்லிம்களின் (இலங்கை முஸ்லிம்கள்) சனத்தொகை எதிர்வரும் பத்தாண்டுகளில் (அதாவது 2029ஆம் ஆண்டில்) மொத்த சனத்தொகையில் 12 சதவீதத்தினை விட அதிகமாகும் மற்றும் (2) சிங்களவர்களின் சனத்தொகை குறைவடைந்து வருவதுடன், முஸ்லிம் சனத்தொகையில் ஏற்படும் அபரிதமான வளர்ச்சியினால் அழிந்துபோகும் அச்சுறுத்தல் உள்ளது.
பாராளுமன்ற உறுப்பினரின் இந்தக் கூற்றானது இலங்கை சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. 5 – 9 வயதுக்கு உட்பட்டவர்களுடன் (2003 – 2007 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள்) 5 வயதுக்கு உட்பட்டவர்களை (2008 – 2012 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள்) ஒப்பிடுகின்றார்.
பாராளுமன்ற உறுப்பினரால் முன்வைக்கப்பட்ட தரவு மற்றும் அடிப்படையைக் கொண்டு அவரது கூற்றை நியாயப்படுத்த முடியுமா என FactCheck ஆராய்கின்றது. பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் தரவுகளுடன், வெளியான புள்ளிவிபரங்களை ஒப்பிடும்போது காணப்படும் சில சிறிய முரண்பாடுகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை (அட்டவணை 2ஐப் பார்க்கவும்) மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் வழிமுறையின் அணுகுமுறைகளையும் புறக்கணிக்கின்றது – ஆனால் இது ஊடகங்களில் குறிப்பிடத்தக்க விவாதமாகியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் எண்களை அடிப்படையாகக் கொண்டு, 2008 – 2012 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிறந்தவர்களை 2003 – 2007 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிறந்தவர்களுடன் ஒப்பிட்டால் சிங்கள மற்றும் முஸ்லிம் சனத்தொகையில் முறையே 0.48 மற்றும் 1.43 சதவீத வளர்ச்சி காணப்படுகின்றது. சிங்கள மற்றும் முஸ்லிம் சனத்தொகையின் இந்த ஐந்தாண்டு வயதுப்பிரிவினரின் வளர்ச்சி வீதமானது வருடாந்தர பிறப்பு வீதத்தின் வளர்ச்சிக்கு சமமானது, இதற்கு முன்னரான ஆண்டின் பிறப்புக்களுடன் ஒப்பிடுகையில் இது முறையே 0.096 மற்றும் 0.0284 வீதமாகும். இறுதியாகக் கிடைக்கப்பெற்ற சனத்தொகை கணக்கெடுப்பு தரவுகளின் பிரகாரம், வருடாந்த சனத்தொகை இறப்பு வீதமான 0.6 வீதம் பயன்படுத்தப்பட்டது. அட்டவணை 1 இல் குறிப்பிட்டுள்ளவாறு, பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றின் அடிப்படையில் 2012 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் வளர்ச்சியை கணக்கிடுவதற்கு FactCheck இந்த அளவீடுகளைப் பயன்படுத்தியது. பிற இனங்களின் மக்கள் தொகை வளர்ச்சி பூச்சியமாக கருதப்படுகின்றது. இது பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றுக்கு சாதகமாகும்.
பாராளுமன்ற உறுப்பினரின் சொந்த தரவுகள் மற்றும் அடிப்படைகளை பின்பற்றி கணக்கிட்டால், மொத்த சனத்தொகையில் முஸ்லிம்கள் 12 வீதமாவதற்கு 50 வருடங்கள் எடுக்கும் (2069 ஆம் ஆண்டில்) மாறாக பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுவது போன்று 10 வருடங்கள் அல்ல (2029 ஆம் ஆண்டில்). இந்தக் கணக்கீட்டின் போது பிற இனங்களின் மக்கள் தொகை வளர்ச்சி பூச்சியமாக கருதப்பட்டது.
மேலும் பாராளுமன்ற உறுப்பினரின் தரவு மற்றும் அடிப்படையின் பிரகாரம் கணக்கிட்டால், அவர் குறிப்பிடுவது போன்று சிங்கள இனம் அழிந்து போகாது. சிங்கள மக்கள் தொகையின் அளவினை எட்டிப்பிடிப்பதற்கு முஸ்லிம்களுக்கு 1,063 வருடங்கள் எடுக்கும். அதாவது 3082* ஆம் ஆண்டிலேயே அது சாத்தியமாகும்.
இதன் மூலம் பாராளுமன்ற உறுப்பினரால் முன்வைக்கப்பட்ட தரவு மற்றும் அடிப்படைக்கும், அதன் மூலம் அவர் பெற்றுக்கொண்ட மக்கள் தொகை மாற்றம் குறித்த முடிவுகளுக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுவதை அறிய முடிகின்றது.
எனவே அவரது கூற்றினை ‘முற்றிலும் பொய்யானது’ என நாங்கள் வகைப்படுத்துகின்றோம்.
**பகிரங்கமாக பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck மறுபரிசீலனை செய்யும்.
அட்டவணை 1: பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பில முன்வைக்கும் தரவு மற்றும் அடிப்படையில் சனத்தொகை மாற்றம்
கணக்கீட்டின் அளவீடுகள் பாராளுமன்ற உறுப்பினரின் தரவுகள் மற்றும் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களில் இருந்து பெறப்பட்டுள்ளன.
- சிங்கள மக்களுக்கான வருடாந்த பிறப்பு வீதம்: = 0.096%
- முஸ்லிம் மக்களுக்கான வருடாந்த பிறப்பு வீதம்: = 0.284%
- 2012 (கணக்கெடுப்பு ஆண்டு) தரவின் பிரகாரம் மொத்த சனத்தொகையில் இறப்புக்கள்= 122,741/ 20,359,439 = 0.60%
- பிற இனக்குழுக்களின் (சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்கள் தவிர்த்து) சனத்தொகை வளர்ச்சி பூச்சியத்திற்கு சமம்
அட்டவணை 2: வயது மற்றும் இனத்தின் அடிப்படையில் சனத்தொகை
FactCheck இன் தீர்ப்பு பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது, FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.
மூலம்
- அசல் அறிக்கைக்கு: பா.உ உதய கம்மன்பிலவின் உத்தியோகபூர்வ இணையத்தளம், ‘சிங்கள மக்களின் அழிவு அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, முஸ்லிம் குழந்தைகளின் சனத்தொகை வேகமாக அதிகரித்துவருகின்றது – உதயவின் விசேட வெளியீடு” 20 ஜுன் 2019: http://udayagammanpila.com/story/සිංහලයා–වඳ–වීම–නිල–වශයෙන්/[last accessed: 27 November 2019]
- தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம், சனத்தொகை அட்டவணைகள் – குடிசன, வீட்டு வசதிகள் தொகைமதிப்பு 2012: http://www.statistics.gov.lk/PopHouSat/CPH2011/Pages/Activities/Reports/FinalPopulation.pdf [last accessed: 27 November 2019]
- தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம், முக்கிய புள்ளிவிபரங்கள் – இறப்புக்கள் 2012: http://www.statistics.gov.lk/PopHouSat/VitalStatistics/Tables.asp?Year=2012 [last accessed: 27 November 2019]