ரஞ்சித் மத்தும பண்டார

பாராளுமன்ற உறுப்பினர் பண்டார குற்றங்களில் ஏற்பட்ட வீழ்ச்சியை மிகைப்படுத்துகின்றார்.

"

கடந்த நான்கு வருடங்களில், முந்தைய ராஜபக்ஷ ஆட்சிக் காலத்துடன் ஒப்பிடும் போது தற்போதுள்ள அரசாங்கத்தின் கீழ் அனைத்து வகையான குற்றங்களின் விகிதங்களும் வெகுவாகக் குறைந்துள்ளன.

டெய்லி நியூஸ் | அக்டோபர் 30, 2019

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

 பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றினை இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பாரிய குற்றங்கள் தொடர்பிலான அட்டவணை மற்றும் இலங்கை சிறைச்சாலைகள் புள்ளிவிபர அறிக்கை 2019 ஆகியற்றிலுள்ள தரவுகளைப் பயன்படுத்தி FactCheck ஆராய்ந்தது.

பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்ட எண்ணிக்கைகள் பெரும்பாலும் சரியானவை என்பதை அட்டவணைகள் 1 மற்றும் 2 காட்டுகின்றன. ஆனாலும் ஒப்பிடும் ஆண்டுகள் தவறானவையாக உள்ளன. ஏனென்றால் 2015 – 2018 காலப்பகுதியில் முன்னேற்றம் காணப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார். ஆனால் 2018 ஆம் ஆண்டுடன் 2014 ஆம் ஆண்டை ஒப்பிடுவதை விடுத்து, மூன்றில் இரண்டு தடவைகள் 2012 ஆம் ஆண்டை அவர் ஒப்பிடுவதற்கு பயன்படுத்துகின்றார்.

2014 ஆம் ஆண்டு புள்ளிவிபரங்களைப் பயன்படுத்தினால், பதிவான (கொலை, ()பாலியல் வன்புணர்வு/முறையற்ற பாலியல் தொடர்பு மற்றும் (மொத்த குற்றங்களில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியானது முறையே 10.8%, 10.8%  மற்றும் 28.7% ஆகும். எனினும், பாராளுமன்ற உறுப்பினரால் மேற்கோள் காட்டப்பட்ட சதவீதமானது முறையே 24.7%, 19.2% மற்றும் 29.4% ஆகும்.

எனவே, பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் எண்கள் சரியானது என்ற போதும், அவர் ஒப்பிடும் ஆண்டு இரண்டு புள்ளிவிபரங்களில் தவறாகும். சரியான ஆண்டுகளை ஒப்பிடும் போது கொலை மற்றும் பாலியல் வன்புணர்வு/முறையற்ற பாலியல் தொடர்பு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியின் சதவீதமானது பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் சதவீதத்தினை விட பாதியாக இருக்கின்றது. இருந்தபோதும், அனைத்து புள்ளிவிபரங்களிலும் வீழ்ச்சி காணப்படுகின்றது என்பதில் பாராளுமன்ற உறுப்பினர் சரியாகவே உள்ளார். அத்துடன் மொத்த குற்றங்களில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை குறிப்பிடுவதில் அவர் ஒரளவு பொருந்திப் போகின்றார்.

எனவே, நாங்கள் அவரது கூற்றினை ‘பகுதியளவு சரியானது’ என வகைப்படுத்துகின்றோம்.

*FactCheck இன் தீர்ப்பு பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது, FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.

அட்டவணை 1: 2005 – 2018 இல் பதிவான குற்றங்கள் 



மூலம்