உண்மைச் சரிபார்ப்புகளும்
இந்தக் கூற்றினை மதிப்பிடுவதற்கு தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் குடித்தன வருமானங்கள் மற்றும் செலவுகள் பற்றிய அளவீட்டில் (HIES – Household Income and Expenditure Survey) கிடைக்கக்கூடிய சமீபத்திய தரவுகளை FactCheck ஆராய்ந்தது. இலங்கையில் குடித்தன வருமானத்தை மதிப்பிடும் தரவுகளின் முக்கியமான மூலம் குடித்தன வருமானங்கள் மற்றும் செலவுகள் பற்றிய அளவீடு ஆகும். பாராளுமன்ற உறுப்பினர் தேசிய வருமானம் எனக் குறிப்பிட்டாலும், தேசிய வருமானக் கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வருமானத்தையே அவர் குறிப்பிடுவதாக நாங்கள் அனுமானிக்கின்றோம். இதில் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகள் குடித்தனங்களின் வருமானங்கள் மாத்திரமே. வேறு எந்த வர்த்தக ரீதியான அல்லது நிறுவனங்களின் வருமானங்கள் உள்ளடக்கப்படவில்லை. (குறிப்பு: குடித்தன வருமானங்கள் மற்றும் செலவுகள் பற்றிய அளவீட்டில் வழங்கப்பட்டுள்ள மொத்த வருமானம் மற்றும் மதிப்பீடுகள் மத்திய வங்கியினால் மதிப்பிடப்படும் மொத்த தேசிய வருமானத்துடன் சமப்படாது).
குடித்தன வருமானங்கள் மற்றும் செலவுகள் பற்றிய அளவீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள மதிப்பீடுகளின் அடிப்படையில் 2016 ஆம் ஆண்டில் பணக்கார 10% சனத்தொகை அறிக்கையிடப்பட்ட மொத்த குடித்தன வருமானத்தில் 35.4 சதவீதத்தைப் பெற்றுள்ளனர்.
ஆகவே நாங்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றினை ‘சரியானது’ என வகைப்படுத்துகின்றோம்.
*பகிரங்கமாக பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck மறுபரிசீலனை செய்யும்.
கடந்த கால குடித்தன வருமானங்கள் மற்றும் செலவுகள் பற்றிய அளவீடுகளுடன் ஒப்பிடுகையில் குறிப்பிட்ட காலப்பகுதியில் வருமானப் பங்கீட்டின் ஏற்றத்தாழ்வு குறைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது: 2012 – 2016 காலப்பகுதியில் பணக்கார 10% சனத்தொகை பெற்றுக்கொண்ட வருமானத்தின் பங்கு குறைந்துள்ளது. அத்துடன் அனைத்துப் பிற வருமானப் பதின்மானங்கள் பெற்றுக்கொண்ட வருமானத்தின் பங்கு அதிகரித்துள்ளது (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்).
மூலம்
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், குடித்தன வருமானங்கள் மற்றும் செலவுகள் பற்றிய அளவீடு, 2006/07, 2009/10, 2012/13, 2016, பார்வையிட: http://www.statistics.gov.lk/IncomeAndExpenditure/StaticalInformation [last accessed 29 April 2021]