காமினி லொக்குகே

அமைச்சர் லொக்குகே: ஊழியர் சேமலாப நிதியத்தின் வலு தொடர்பில் தவறான கருத்தை முன்வைக்கின்றார்.

"

ஊழியர் சேமலாப நிதியம் ஆசியாவில் இன்று வலுவான நிதியமாக மாறியுள்ளது.

பாராளுமன்ற ஹன்சாட் | பிப்ரவரி 9, 2021

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

அமைச்சர் ‘வலுவானது’ எனக் கூறுவதை அளவில் பெரியது அல்லது உயர்ந்த திரும்பு வீதத்தை (Rate of Return) தரும் எனக் குறிப்பிடுவதாக FactCheck கருதுகின்றது.

இந்தக் கூற்றினை ஆராய்வதற்கு இலங்கையின் ஊழியர் சேமலாப நிதியம் போன்று ஆசியாவின் பல நாடுகளிலுள்ள நிதியங்களின் அளவு மற்றும் திரும்பு வீதத்தை மதிப்பிடுவதற்கு உத்தியோகபூர்வ மூலங்களை FactCheck ஆராய்ந்தது.

அளவைப் பொறுத்தவரை இலங்கையின் ஓய்வூதிய நிதியம் 2019ல் ஐ.அ.டொலர் 13 பில்லியனாகக் காணப்பட்டது. இலங்கையின் ஊழியர் சேமலாப நிதியத்தை விட அளவில் பெரிய ஆசியாவிலுள்ள 9 ஒய்வூதிய நிதியங்களின் தரவுகள் அட்டவணை 1ல் வழங்கப்பட்டுள்ளன.

திரும்பு வீதத்தைப் பொறுத்தவரை இந்த நிதிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாணய அலகில் இருப்பதனால் (2015 – 2019) ஐந்தாண்டு காலப்பகுதிக்கான வருமானங்கள் அதற்கு சமமான ஐ.அ.டொலரில் தரப்படுத்துவதன் மூலம் ஒப்பிடப்படுகின்றது. இந்தக் காலப்பகுதியில் இலங்கையின் ஊழியர் சேமலாப நிதியத்தின் சராசரி திரும்பு வீதம் 3.6 சதவீதமாகக் காணப்படுகின்றது. அட்டவணை 1ல் திரும்பு வீதங்களும் வழங்கப்பட்டுள்ளதுடன், இலங்கையின் ஊழியர் சேமலாப நிதியை விட அதிக வருமானத்தைத் தரும் ஆசியாவின் இரண்டு நிதியங்களைக் காணக்கூடியதாக உள்ளது. இவை சீனாவின் தேசிய சமூகப் பாதுகாப்பு நிதியம் மற்றும் இந்தியாவின் தொழிலாளர் நல நிதியம். இவை முறையே 5.1% மற்றும் 5.7% திரும்பு விகிதத்தைத் தருகின்றன.

இலங்கையின் ஊழியர் சேமலாப நிதியமானது ஆசியாவின் பாரிய ஒய்வூதிய நிதியமோ அல்லது ஐ.அ.டொலருக்கு சமமான உயர்ந்த வருமான விகிதத்தை வழங்கும் நிதியமோ கிடையாது. எனவே நாங்கள் அமைச்சரின் கூற்றினை ‘தவறானது’ என வகைப்படுத்துகின்றோம்.

*பகிரங்கமாக பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck மறுபரிசீலனை செய்யும்.

 

 

 

 

 

 



மூலம்

ஜப்பானின் அரசாங்க ஓய்வூதிய முதலீட்டு நிதியம், 2019 நிதியாண்டுக்கான ஆண்டறிக்கை, பார்வையிட: https://www.gpif.go.jp/en/performance/past-performances.html[Last accessed: 06 April 2021]

கொரியக் குடியரசின் தேசிய ஓய்வூதிய சேவை, 2019 தேசிய ஓய்வூதிய நிதியத்தின் ஆண்டறிக்கை, பார்வையிட: https://fund.nps.or.kr/jsppage/fund/prs_e/prs_e_04.jsp [Last accessed: 06 April 2021]

மலேசிய தொழிலாளர் வைப்பு நிதியம், ஆண்டறிக்கை 2019, பார்வையிட: https://www.kwsp.gov.my/annualreport2019/index-en.html [Last accessed: 06 April 2021]

சீன சமூகப் பாதுகாப்புக்கான தேசியப் பேரவை நிதியம், 2019ம் ஆண்டுக்கான சமூகப் பாதுகாப்புக்கான தேசிய பேரவை நிதியத்தின் சமூகப் பாதுகாப்பு நிதிய ஆண்டறிக்கை, பார்வையிட: http://www.ssf.gov.cn/cwsj/ndbg/  [Last accessed: 06 April 2021]

சிங்கப்பூர் மத்திய வைப்பு நிதியச் சபை, 2019 ஆண்டறிக்கை, பார்வையிட: https://www.cpf.gov.sg/Members/AboutUs/about-us-info/annual-report [Last accessed: 06 April 2021]

ஹொங்கொங்கின் கட்டாய வைப்பு நிதியத் திட்ட அதிகாரசபை, 2019 -20 ஆண்டறிக்கை, பார்வையிட: https://www.mpfa.org.hk/en/info-center/publications/annual-reports [Last accessed: 06 April 2021]

இந்திய பணியாளர் வருங்கால வைப்பு நிதி, ஆண்டறிக்கை 2018-2019, பார்வையிட: https://search.epfindia.gov.in/OperationStatistics/operational_stats_en.php [Last accessed: 06 April 2021]

பாபர் சைய்தி, ‘கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நிதியாண்டு 19-20க்கு ஊழியர் சேமலாப நிதி 7 சதவீதத்துக்கு அதிகமான வட்டியைத் தராது: காரணங்கள் இங்கே’, எக்கனமிக் டைம்ஸ் (13 ஏப்ரல் 2020), பார்வையிட: https://economictimes.indiatimes.com/wealth/invest/epf-may-not-give-more-than-7-interest-for-fy19-20-due-to-coronavirus-impact-heres-why/articleshow/75092943.cms?from=mdr [Last accessed: 06 April 2021]

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி நிறுவனம், ஓய்வூதிய நிதிய புள்ளிவிபரங்கள், பார்வையிட: http://www.oecd.org/pensions/private-pensions/Pension-Funds-in-Figures-2020.pdf [Last accessed: 06 April 2021]

புளும்பேர்க் செய்திகள், ‘வருமானங்களை அதிகரிப்பதற்கு அரசாங்க ஓய்வூதிய நிதியம் வெளிநாட்டு பங்குகளை வாங்குகின்றது’, பாங்கொங் போஸ்ட் (24 ஓகஸ்ட் 2020), பார்வையிட: https://www.bangkokpost.com/business/1973535/government-pension-fund-buys-foreign-stocks-to-boost-returns [Last accessed: 06 April 2021]

இலங்கை ஊழியர் சேமலாப நிதியம், 2019 ஆண்டறிக்கை, பார்வையிட: http://www.epf.lk/annual_reports.php [Last accessed: 06 April 2021]

இலங்கை ஊழியர் சேமலாப நிதியத்தின் தணிக்கை செய்யப்பட்ட நிதி அறிக்கைகள் 2019 – ஆங்கிலம், பார்வையிட: http://www.epf.lk/financial_statements.php [Last accessed: 06 April 2021]

திங்கிங் அஹெட் கல்வி நிலையத்தின் உத்தியோகபூர்வ வலைதளம், உலகின் பாரிய ஓய்வூதிய நிதியங்கள்முடிவடைந்த ஆண்டு 2017, பார்வையிட: https://www.thinkingaheadinstitute.org/research-papers/the-worlds-largest-pension-funds-year-ended-2017/ [Last accessed: 06 April 2021]

உலக வங்கியின் உத்தியோகபூர்வ வலைதளம், ‘உலக அபிவிருத்தி குறிகாட்டிகள்’, பார்வையிட: https://databank.worldbank.org/reports.aspx?source=world-development-indicators [Last accessed: 06 April 2021]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன