உண்மைச் சரிபார்ப்புகளும்
1981ம் ஆண்டு முதல் ஆட்சிக்கு வந்த ஒவ்வாரு அரசாங்கத்தின் கீழும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக வரி வருமானம் குறைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அவரது அறிக்கையில் குறிப்பிடுகிறார்.
இந்தக் கூற்றைச் சரிபார்க்க, இலங்கை மத்திய வங்கியின் 2021 ஆண்டறிக்கையையும் பாராளுமன்றத்தின் ஆயுட்காலங்கள் குறித்த தகவல்களுக்கு பாராளுமன்ற வலைதளத்தையும் FactCheck.lk ஆராய்ந்தது.
வரி வருமானம் மற்றும் மொ.உ.உ பெறுமதி என்பன ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. எனவே ஒரு அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் (தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றம்) மொ.உ.உற்பத்தியில் வரி வருமானத்தின் சராசரி சதவீதத்தைக் கணக்கிடுவதற்கு, காலண்டர் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவுக்கு வந்திருந்தால் அதற்கு முந்தைய ஆண்டு இறுதிக்கு சராசரியானது கணக்கிடப்படுகிறது. அதேபோன்று அரசாங்கத்தின் பதவிக்காலம் காலண்டர் ஆண்டின் கடைசி ஆறு மாதங்களில் முடிவுக்கு வந்திருந்தால் அந்த ஆண்டின் இறுதிக்கு சராசரி கணக்கிடப்படும்.
1978ம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்த ஒவ்வொரு அரசாங்கத்தினதும் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக சராசரி வரி வருமானத்தை அட்டவணை 1 காட்டுகிறது. மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக வரி வருமானம் குறைந்துவரும் போக்கை கணக்கீடுகள் சுட்டிக்காட்டுகின்றன. எனினும் அனைத்து அரசாங்கங்களின் கீழும் இது இடம்பெறவில்லை என்பதையும் அட்டவணை காட்டுகிறது – ஆறு மற்றும் எட்டாவது பாராளுமன்ற அரசாங்கங்களின் கீழ், அதற்கு முந்தைய அரசாங்கத்துடன் ஒப்பிடும்போது மொ.உ.உற்பத்தியில் வரி சேகரிப்பு சதவீதம் அதிகரித்துள்ளது.
அனைத்து அரசாங்கங்களின் கீழும் வரி சேகரிப்புக் குறைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுவது தவறானது. எனினும் குறைந்துவரும் போக்கை அடையாளம் காண்பதில் அவர் சரியாக இருப்பதாலும் பெரும்பாலான பாராளுமன்ற ஆயுட்காலங்களில் இது பொருந்துவதாலும் அவரது கூற்றை பகுதியளவில் சரியானது என நாங்கள் வகைப்படுத்துகிறோம்.
*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.
மூலம்
சிறப்பு புள்விவிபரப் பின்னிணைப்பு, ஆண்டறிக்கை 2021, இலங்கை மத்திய வங்கி, பார்வையிட: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/publications/annual_report/2021/en/16_S_Appendix.pdf [ இறுதியாக அணுகியது ஜூன் 8, 2022]
இலங்கைப் பாராளுமன்றத்தின் வலைதளத்தில் இருந்து பாராளுமன்ற ஆயுட்காலங்கள், பார்வையிட: https://www.parliament.lk/duration-of-parliament [ இறுதியாக அணுகியது ஜூன் 8, 2022]