ஜோன் செனவிரத்ன

பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டி.ஜே செனவிரத்ன கடன் அதிகரிப்பை மும்மடங்காகக் குறிப்பிடுகிறார்

"

கௌரவ. மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைக் கையளித்தபோது எங்களிடம் 72% வெளிநாட்டுக் கடன்கள் மாத்திரமே இருந்தன. எனினும் நல்லாட்சி அரசாங்கத்தின் பிறகு நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது இது 96 சதவீதமாக உயர்ந்திருந்தது. ஆகவே நல்லாட்சி அரசாங்கத்தின் ஐந்தாண்டு கால ஆட்சியில் அவர்கள் அதிக அளவிலான கடன்களைப் பெற்றுள்ளனர்

பாராளுமன்ற ஹன்சாட் | நவம்பர் 15, 2021

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

2019 ஆம் ஆண்டில் இலங்கையின் வெளிநாட்டுக் கடன் 72 சதவீதத்தில் இருந்து 96 சதவீதமாக (24% அதிகரிப்பு) அதிகரித்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுகிறார். எனினும் பாராளுமன்ற உறுப்பினர் வெளிநாட்டுக் கடனை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாகக் குறிப்பிடுகிறாரா அல்லது மொத்தக் கடனின் சதவீதமாகக் குறிப்பிடுகிறாரா என்பது தெளிவில்லை.

மத்திய வங்கியின் 2020 ஆண்டறிக்கையின் பிரகாரம், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக மத்திய அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடன் 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் முறையே 30% மற்றும் 41.3% ஆகும். அதேவேளை அரச கடனின் சதவீதமாக வெளிநாட்டுக் கடன் 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் முறையே 41.6% மற்றும் 47.6% ஆகும். (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்). ஆகவே பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் சதவீதம் அவரது அறிக்கையின் இரண்டு விளங்கங்களிலும் மிகத் தவறு ஆகும்.

பாராளுமன்ற உறுப்பினர் தவறாகப் பேசியிருந்து, அவர் வெளிநாட்டுக் கடனுக்குப் பதிலாக மத்திய அரசாங்கத்தின் மொத்தக் கடனைக் குறிப்பிட்டதாகக் கருதினால் அவர் குறிப்பிட்ட ஒரு சதவீதம் ஓரளவுக்குச் சரியாக உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக மத்திய அரசாங்கத்தின் மொத்தக் கடன் 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் முறையே 72.3% மற்றும் 86.8% ஆகும். அவர் மொத்தப் பொதுப் படுகடனை (மத்திய அரசாங்கம் மற்றும் அரசாங்கத்துக்குச் சொந்தமான நிறுவனங்கள்) குறிப்பிட்டதாகக் கருதினால், அவர் குறிப்பிடும் மற்றொரு சதவீதம் ஓரளவு பொருந்துகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மொத்தப் பொதுப் படுகடன் 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் முறையே 80.7% மற்றும் 94.6% ஆகும் (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்).

சுருக்கமாகக் குறிப்பிடுவதானால், பாராளுமன்ற உறுப்பினர் வெளிநாட்டுக் கடனாகக் குறிப்பிடும் சதவீதம் மிகத் தவறு. அவர் மத்திய அரசாங்கத்தின் கடனைக் குறிப்பிடுவதாக இருந்தால் அவர் குறிப்பிட்ட 2019 ஆம் ஆண்டுக்கான சதவீதம் தவறு ஆகும். அவர் பொதுப் படுகடனைக் குறிப்பிடுவதாக இருந்தால் 2014 ஆம் ஆண்டுக்கான சதவீதம் தவறு ஆகும். 2014 முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கடன் அதிகரிப்பை பாராளுமன்ற உறுப்பினரின் அறிக்கை மிகைப்படுத்திக் குறிப்பிடுகிறது. ஆகவே நாங்கள் ‘தவறானது’ என வகைப்படுத்துகிறோம்.

*FactCheck.lk முடிவு பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கும் சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ஒவ்வொரு சரிபார்ப்பையும் பொறுத்தவரையில் புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் FactCheck.lk மதிப்பீட்டை மீண்டும் சரிபார்க்கும்.



மூலம்

மத்திய வங்கி ஆண்டறிக்கை 2020

மத்திய வங்கி ஆண்டறிக்கை 2017

நிதியமைச்சு ஆண்டறிக்கை 2019

நிதியமைச்சு ஆண்டறிக்கை 2014

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன