மைத்திரிபால சிறிசேன

ஜனாதிபதியின் கூற்று : ”தெற்காசியா” என்று கூறியிருந்தால் உண்மை

"

இலங்கை, ஆசிய நாடுகளில் உயர் நிலையில் தரப்படுத்தப்பட்டுள்ளது (நீதித்துறையின் சுயாதீனத்தில்)

டெய்லி நியூஸ் | ஜூலை 28, 2018

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

நீதித்துறையின் சுயாதீனம் பற்றி உலகளாவிய ரீதியில் ஆராய்ந்த அண்மைய இரண்டு ஆய்வுமுடிவுகளின் படி தெற்காசியாவை மட்டும் கருத்திற்கொண்டால், ஜனாதிபதியின் கூற்று உண்மையானது என்று காட்டுகின்றது: இலங்கையானது உயர் இடத்தைப் பெறுவதாக தரப்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஒட்டுமொத்த ஆசியாவைக் கவனத்தில் எடுக்கும்போது, இலங்கையானது அனைத்துப் பட்டியலிலும் இடை நிலைகளையே பெறுகின்ற காரணத்தால், இக்கூற்றானது நிலையிழக்கிறது.

முதலாவது மதிப்பாய்வானது உலக சமாதானத் திட்டத்தின் சட்டத்தின் ஆட்சியின் குறியீடு 2017- 2018

(மதிப்பாய்வைக் காண : ]

https://worldjusticeproject.org/sites/default/files/documents/WJP-ROLI-2018-June-Online-Edition_0.pdf )

இதில் இலங்கை தெற்காசியாவில் 6 நாடுகளில் 2வதாகத் தரநிலைப்படுத்தப்பட்டுள்ளது,  இதேவேளை ஆசியாவில் 17 நாடுகளில் 7ஆம் இடத்திலுள்ளது.

இரண்டாவது உலக பொருளாதாரக் கருத்துக்களத்தின் உயர்மட்ட நிர்வாகிகளின் கருத்துக்கணிப்பு 2017-2018

(மதிப்பாய்வைக் காண:

http://reports.weforum.org/pdf/gci-2017-2018-scorecard/WEF_GCI_2017_2018_Scorecard_EOSQ144.pdf )

இலங்கை தெற்காசியாவில் 5 நாடுகளில் 3வதாகத் தரநிலைப்படுத்தப்பட்டுள்ளது, இதேவேளை ஆசியாவில் 20 நாடுகளில் 12ஆம் இடத்திலுள்ளது.

ஆசியாவின் உள்ளார்ந்த பகுதிகள் கருத்தில் எடுக்கப்படும்போதுஇ, இலங்கையின் தரப்படுத்தல் நிலையானது உயர்வைக் காட்டுவதை இவ்விரு மதிப்பாய்வுகளும் காண்பிக்கின்றன. ஜனாதிபதி “தெற்கு” ஆசியாவைத் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருப்பாயின்இ நாம் அதனை ‘உண்மை’ என்று வகைப்படுத்தியிருப்போம்.

*FactCheck இன் தீர்ப்பு பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது, FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.



மூலம்