ருவன் விஜேவர்தன

ஐ.தே.க பிரதித் தலைவர் விஜேவர்த்தன கோவிட் – 19 உயிரிழப்புகள் தொடர்பாகத் தவறாகத் தெரிவிக்கிறார்

"

ஒவ்வொரு மணித்தியாலமும் 10 தொற்று நோயாளர்கள் உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. நோயாளர்கள் உயிரிழக்கும் வீதம் 1.5% ஆகும். கோவிட் – 19 காரணமாக ஆசியாவில் அதிகமானவர்கள் உயிரிழக்கும் நாடாக இலங்கை மாறியுள்ளது.

அருண | ஆகஸ்ட் 12, 2021

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் (1) இலங்கையில் ஒவ்வொரு மணித்தியாலமும் 10 கோவிட் – 19 தொற்று நோயாளர்கள் உயிரிழக்கின்றனர் (2) இலங்கையில் கோவிட் – 19 உயிரிழப்புகளின் வீதம் 1.5% (3) அறிக்கை வெளியான நேரத்தில் (அதாவது 11 ஓகஸ்ட்) ஆசியப் பிராந்தியத்தில் நாளாந்த கோவிட் – 19 உயிரிழப்பு விகிதம் இலங்கையில் உயர்வாக உள்ளது எனக் குறிப்பிடுகிறார்.

இந்தக் கூற்றை ஆராய்வதற்கு FactCheck.lk சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு மற்றும் அவர் வேர்ல்ட் இன் டேட்டா (Our World in Data) ஆகியவற்றின் தரவை ஆராய்ந்தது.

முதலாவது கூற்றில், 1 – 11 ஓகஸ்ட் 2021 காலப்பகுதியில் கோவிட் – 19 காரணமான நாளாந்த உயிரிழப்புகள் சராசரியாக 87.27 என தொற்றுநோய் பிரிவு குறிப்பிடுகிறது. 11ஆம் திகதி இது 118 ஆக உயர்ந்துள்ளது. இதன் பிரகாரம் (இந்த அறிக்கை வெளியான திகதி வரையில்) பதிவான உயர்ந்தபட்ச மணித்தியால வீதம் 4.917. இது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் பெறுமதியை விட மிகக் குறைவாகும் (அட்டவணை 1).

இரண்டாவது கூற்றில், கோவிட் – 19 உயிரிழப்பு வீதமானது பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை அல்லது மொத்த சனத்தொகையின் அடிப்படையில் மதிப்பிட முடியும். அத்துடன் நாளாந்த எண்ணிக்கை அல்லது மொத்த எண்ணிக்கையின் அடிப்படையில் மதிப்பிட முடியும். ஆகவே உயிரிழப்பு வீதத்தை விளக்குவதற்கு நான்கு சாத்தியமான வழிகள் உள்ளன. FactCheck.lk இந்த நான்கு கணக்கீடுகளையும் ஆராய்ந்தது. அவர் வேர்ல்ட் இன் டேட்டாவில் கிடைக்கும் தரவுக்கு அமைய நாளொன்றுக்கு குறைந்தது 500 புதிய தொற்றுகளைப் பதிவுசெய்யும் ஆசியப் பிராந்தியத்திலுள்ள நாடுகள் அனைத்தும் இந்தக் கணக்கீட்டில் உள்ளடக்கப்பட்டன.

ஓகஸ்ட் 11 அன்று பதிவான தொற்றுக்களில் மொத்த உயிரிழப்பு வீதம் 1.6%, இது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்ட 1.5% என்பதுடன் நெருங்கிப் போகிறது (அட்டவணை 2).

மூன்றாவது கூற்றில், ஓகஸ்ட் 11 ஆம் திகதி நாளாந்த நடப்பு மற்றும் மொத்த உயிரிழப்புகளின் அடிப்படையில் ஆசியாவில் இலங்கை 6 மற்றும் 8ஆவது இடத்தில் உள்ளது. ஒரு மில்லியன் சனத்தொகையில் நடப்பு மற்றும் மொத்த உயிரிழப்பு வீதத்தின் அடிப்படையில் பிராந்தியத்திலுள்ள நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை 4 மற்றும் 16ஆவது இடத்திலுள்ளது. ஆகவே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இந்த அறிக்கையை வெளியிட்ட காலத்தில் இந்த நான்கு அளவீடுகளிலும் இலங்கை ஆசியாவில் உயர்வான உயிரிழப்பு வீதத்தைக் கொண்டிருக்கவில்லை.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முன்வைத்த கூற்றுகள் (1) மற்றும் (3), அதாவது ஒவ்வொரு மணித்தியாலத்திலும் கோவிட் – 19 உயிரிழப்புகளின் எண்ணிக்கை மற்றும் ஆசியாவில் இலங்கையிலேயே உயர்ந்த உயிரிழப்பு வீதம் காணப்படுகிறது என்ற கூற்றுகள் தவறானவை. எனினும் அவரது இரண்டாவது கூற்றான “உயிரிழப்பு வீதம் 1.5%” என்பது பதிவான தொற்றுக்களில் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஒரளவு பொருந்திப் போகிறது.

ஆகவே அவரது அறிக்கையை நாங்கள் “பகுதியளவில் சரியானது” என வகைப்படுத்துகிறோம்.

**பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

 



மூலம்

அவர் வேர்ல்ட் இன் டேட்டா (Our World in Data), கொரோனா வைரஸ், தடுப்பூசிகள், அவர் வேர்ல்ட் இன் டேட்டா கோவிட் – 19 தரவு, பார்வையிட: https://covid.ourworldindata.org/data/owid-covid-data.csv [last accessed 3 September 2021]

தொற்றுநோய் பிரிவு – சுகாதார அமைச்சு, கோவிட் – 19 நாளாந்த நிலைமை அறிக்கை, பார்வையிட: https://www.epid.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=225&lang=en [last accessed 7 September 2021]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன