உண்மைச் சரிபார்ப்புகளும்
பிரதமரின் முழுமையான அறிக்கை: “ஆசியாவிலுள்ள நகரங்கள் துரிதமாக வளர்ச்சி கண்டுவரும் போதும், மெர்ஸர் தரவரிசையில் முதல் 50 இடங்களில் ஆசியாவில் உள்ள மூன்று நகரங்கள் மாத்திரமே (சிங்கப்பர், டோக்கியோ மற்றும் கோபே) இடம்பிடித்துள்ளன. தெற்காசிய நகரங்களில் கொழும்பு முதல் நிலையில் இருந்தாலும், 231 நகரங்களுக்கான பட்டியலில் 137 ஆவது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலின் இறுதி 50 இடங்களில் ஆகக்குறைந்தது 15 ஆசிய நகரங்கள் உள்ளன.’’
2018 ஆம் ஆண்டில் மெர்ஸர் 231 நகரங்களைப் பட்டியலிட்டது. இந்த தரவரிசை பின்வருவனவற்றை சுட்டிக்காட்டுகின்றது.
1) ஆசியாவில் மூன்று நகரங்கள் மாத்திரம் – சிங்கப்பூர், டோக்கியோ மற்றும் கோபே – முதல் 50 இடங்களில் உள்ளன.
2) தெற்காசிய நகரங்களில் முதலிடத்தில் உள்ள கொழும்பு, 137 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது (231 நகரங்களில்);
3) தரவரிசையின் கடைசி 50 இடங்களில் 17 ஆசிய நகரங்கள் உள்ளன.
எனவேஇ பிரதமரினால் தெரிவிக்கப்பட்ட 3 கூற்றுக்களும் உண்மையானவை.
*FactCheck இன் தீர்ப்பு பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது, FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.
மூலம்
- மெர்ஸர் மக்கள் வாழ்வதற்கான மிகச்சிறந்த நகரங்களுக்கான தரவரிசைப் பட்டியலுக்கு தயவூசெய்து பார்வையிடவூம்: https://mobilityexchange.mercer.com/Portals/0/Content/Rankings/rankings/qol2018k852147/index.html