அஜித் நிவாட் கப்ரால்

இலங்கை மத்திய வங்கியின் ஆறு மாதகாலத் திட்டத்தின் வெற்றியை மதிப்பிடுவதில் முன்னாள் ஆளுநர் கப்ரால் தவறிழைத்துள்ளார்

"

இலங்கை மத்திய வங்கி கடந்த ஆண்டு அறிவித்த ஆறு மாதகாலத் திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட உட்பாய்ச்சல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதால் அது வெற்றிகரமானது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

த மோர்னிங் | மார்ச் 3, 2022

blatantly_false

Blatantly False

உண்மைச் சரிபார்ப்புகளும்

இலங்கை மத்திய வங்கியின் ஆறு மாதகாலத் திட்டம் வெற்றியடைந்துள்ளதாக அதன் முன்னாள் ஆளுநர் கப்ரால் தெரிவித்துள்ளார். முக்கியமாக இந்தத் திட்டம் காலாவதியாவதற்கு இன்னும் ஒரு மாத காலமுள்ள நிலையில் எதிர்பார்க்கப்பட்ட உட்பாய்ச்சல்கள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூற்றைச் சரிபார்ப்பதற்கு, ஆறு மாதகாலத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட பதினான்கு அளவிடக்கூடிய இலக்குகளை, ஒக்டோபர் 1, 2021 முதல் பெப்ரவரி 28, 2022 வரையிலான காலப்பகுதிக்குரிய மத்திய வங்கி மற்றும் ஏனைய மூலங்களில் இருந்து பெறப்பட்ட உண்மையான பெறுமதிகளுடன் FactCheck.lk ஒப்பிட்டது.

முன்னாள் ஆளுநர் இந்த அறிக்கையை வெளியிட்ட காலப்பகுதியான பெப்ரவரி மாத இறுதியில், திட்டத்தில் குறிப்பிடப்பட்ட அளவிடக்கூடிய முக்கிய ஆறு பொருளாதார இலக்குகளில் எந்த இலக்குமே எட்டப்படவில்லை என்பதை விளக்கப்படம் 1 காட்டுகிறது.

திட்டத்தின் இரண்டாம்நிலை இலக்குகள் எட்டில் ஒன்று மட்டுமே எட்டப்பட்டதை அட்டவணை 2 காட்டுகிறது. கடன் நிதியளிப்பு தொடர்பான நான்கு இலக்குகள் எட்டப்படவில்லை, மேலும் மூன்று தொடர்பில் எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை.

முக்கிய ஆறு இலக்குகளை அரசாங்கம் அடையத் தவறியதுடன், இரண்டாம் நிலை இலக்குகள் எட்டில் நான்கை அடையத் தவறியுள்ளது. ஒரு இலக்கை மட்டுமே (மற்றவை தொடர்பில் எந்தத் தகவல்களும் கிடைக்கவில்லை) எட்டியுள்ள நிலையில் ஆறு மாத காலத்திட்டம் வெற்றியடைந்துள்ளது என மதிப்பிடுவது சரியானது அல்ல.

ஆகவே அவரது அறிக்கையை முற்றிலும் தவறானது என நாங்கள் வகைப்படுத்துகிறோம்.

குறிப்பு: பெப்ரவரி 2022 இறுதிக்குள் அளவிடக்கூடிய இலக்குகள் மட்டுமே இந்தச் சரிபார்ப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மற்றும் நாட்டிற்கான பன்னாட்டு முறிகள் தொடர்பிலான இலக்குகள் மதிப்பிடப்படவில்லை. ஏனெனில் இந்த அறிக்கையை மதிப்பிடும் இந்தக் காலப்பகுதியில் 2021ம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பான தரவு வெளியிடப்படவில்லை.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.



மூலம்

இலங்கை மத்திய வங்கி, பேரண்டப் பொருளாதாரம் மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினை நிச்சயப்படுத்துவதற்கான ஆறு மாதகால வழிகாட்டல் (ஒக்டோபர் 1, 2021)

https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/press/presentation_20211001_the_six_month_road_map_for_ensuring_macroeconomic_and_financial_system_stability_t.pdf

இலங்கை மத்திய வங்கி, வாராந்தப் பொருளாதாரக் குறிகாட்டிகள் (செப்டெம்பர் 2021 – மார்ச் 4, 2022), பார்வையிட:

https://www.cbsl.gov.lk/en/statistics/economic-indicators/weekly-indicators [இறுதியாக அணுகியது: 29 மார்ச் 2022]

தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம், கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் (பெப்ரவரி 2022), பார்வையிட:

http://www.statistics.gov.lk/InflationAndPrices/StaticalInformation/MonthlyCCPI/MovementsoftheCCPI  [இறுதியாக அணுகியது: 29 மார்ச் 2022]

இலங்கை மத்திய வங்கி, 2022ம் ஆண்டின் 2ம் இல. நாணயக் கொள்கை மீளாய்வு (மார்ச் 2022), பார்வையிட:

https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/press/pr/press_20220304_Monetary_Policy_Review_No_2_2022_e_D9fs3.pdf  [இறுதியாக அணுகியது: 29 மார்ச் 2022]

இலங்கை மத்திய வங்கி, ஊடக வெளியீடு – அரச பிணையங்கள் (செப்டெம்பர் 2021 – மார்ச் 2022), பார்வையிட:

https://www.cbsl.gov.lk/en/press/press-releases/government-securities  [இறுதியாக அணுகியது: 29 மார்ச் 2022]

உதித்த ஜயசிங்க, ‘இலங்கை ரூபாயின் பெறுமதியைக் குறைக்கிறது, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கான முயற்சியாக பார்க்கப்படுகிறது’, ரொய்ட்டர்ஸ் (மார்ச் 8, 2022), பார்வையிட: https://www.reuters.com/markets/rates-bonds/sri-lanka-allow-rupee-weaken-230-per-dollar-2022-03-07/ [இறுதியாக அணுகியது: 29 மார்ச் 2022]

கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், ஊடக வெளியீடு – பெற்றோலியப் பொருட்களை வாங்குவதற்காக ஐ.அ.டொ 500 மில்லியன் பெறுமதியான LOC ஒப்பந்தம்

https://hcicolombo.gov.in/press?id=eyJpdiI6InZXRkpFOUhwdHk5M2ZkUGgyS0NBOWc9PSIsInZhbHVlIjoiT3NaeHNYNmtWbHdcL2ZxVXFDUDBDM2c9PSIsIm1hYyI6ImI2MDliNTM3OTgxZWY0NjNmZGNhNTIwMDY1YmQyZGY5NzVjYmNlNjRjMjIwMDhlZDE1ZjgwMzRmNGI2NDZkYmMifQ==

கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், ஊடக வெளியீடு – இலங்கைக்கான இந்தியாவின் பாரிய உதவியை டொக்டர்.எஸ்.ஜெய்சங்கர் மற்றும் கௌரவ பஷில் ராஜபக்ஷ ஆகியோர் இறுதிப்படுத்தியுள்ளனர் (ஜனவரி 16, 2022)

https://hcicolombo.gov.in/press?id=eyJpdiI6Ik1kd3BqNDQrUW45SGtIaWtcL1JNa0pBPT0iLCJ2YWx1ZSI6Ikp1bXlwa1Yrd2RlXC9LNkFFRHplb0RBPT0iLCJtYWMiOiJhNjgyMzNiYjhiYWRmNGUzMDUxNDYwMjM1MTk4MTZkMjRlZDZjZGJjNTgwY2MxNzFjZDQ1NDNkYzdjOTRjMmNmIn0=