உண்மைச் சரிபார்ப்புகளும்
குறைவான டீசல் விலையைக் கொண்ட பாகிஸ்தான் தவிர்த்து தெற்காசியப் பிராந்தியத்தில் பெற்றோல் மற்றும் டீசலுக்கான விலை இலங்கையிலயே குறைவு என அமைச்சர் குறிப்பிடுகிறார்.
இந்தக் கூற்றை மதிப்பிடுவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC), இந்திய பெற்றோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு கூடம் (PPAC), பாகிஸ்தான் அரச எண்ணெய் நிறுவனம் (PSO), பங்களாதேஷ் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (BPC), மாலைதீவு அரச வர்த்தக அமைப்பு (STO), பூட்டான் அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் லிமிடெட் (STCBL), குயன்செல் ஒன்லைன் மற்றும் காத்மண்டு ருடே ஊடகச் செய்திகள் மற்றும் globalpetrolprices.com தரவுத் தளத்தையும் FactCheck.lk ஆராய்ந்தது.
பெற்றோல் மற்றும் டீசலின் வகையைப் பொறுத்து விலைகள் வித்தியாசப்படுவதுடன் பல நாடுகள் பெற்றோலியத்தை அடிப்படையாகக் கொண்ட எரிபொருளுக்கு குறைந்தபட்சம் இரண்டு வகைகளை வழங்குகின்றன. ஒவ்வொரு நாட்டிலும் குறைந்த விலையில் சந்தைப்படுத்தப்பட்ட வகையின் விலையை நாடுகளுக்கிடையே (சமமான இலங்கை ரூபாயில்) FactCheck.lk ஒப்பிட்டது.
உத்தியோகபூர்வத் தரவுகளின் பிரகாரம் அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்ட போது (அதாவது 20 ஜுலை 2021) இலங்கையில் ஒரு லீற்றர் பெற்றோலின் குறைந்தபட்ச விலை ரூ.157 ஆகும். அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்ட சந்தர்ப்பத்தில் அல்லது அதற்கு முன்னரான காலப்பகுதியில் விலைகளை சமமான இலங்கை ரூபாய்க்கு மாற்றிய போது, ஆப்கானிஸ்தானில் ரூ.137.39, மாலைதீவில் ரூ.141.15 மற்றும் பாகிஸ்தானில் ரூ.147.18 ஆகக் காணப்பட்டது (OANDA பிரகாரம் 7 நாட்கள் சராசரி நாணய மாற்று விகிதத்தினால் 19 ஜுலை 2021 மாற்றப்பட்டது). ஆகவே அமைச்சரின் கூற்றுக்கு மாறாக இந்த அனைத்து நாடுகளிலும் பெற்றோலின் விலை இலங்கையை விடக் குறைவாக காணப்படுகிறது.
வாகன டீசலின் குறைந்தபட்ச விலை இலங்கையில் லீற்றருக்கு ரூ.111 ஆகக் காணப்பட்டது, இது அமைச்சர் குறிப்பிட்ட காலப்பகுதியில் பிராந்தியத்தில் குறைவாகக் காணப்பட்டது.
தெற்காசியாவில் இலங்கையில் மட்டுமே டீசலின் விலை குறைவாகக் காணப்பட்டது என்ற அமைச்சரின் கூற்று சரியாகும் (இது பாகிஸ்தானையும் விடக் குறைவாகும்). எனினும் பிராந்தியத்தில் இலங்கையில் மட்டுமே பெற்றோல் விலை குறைவு என்ற அமைச்சரின் வாதம் தவறாகும். ஏனென்றால் அவர் இந்தக் கூற்றை முன்வைத்த நேரத்தில் ஆப்கானிஸ்தான், மாலைதீவு, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் பெற்றோல் விலை குறைவாகக் காணப்பட்டது.
ஆகவே அவரது கூற்றை நாங்கள் ‘பகுதியளவில் சரியானது’ என வகைப்படுத்துகிறோம்.
*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.
மூலம்
globalpetrolprices.com, பெற்றோல் விலைகள்/ டீசல் விலைகள், பார்வையிட: https://www.globalpetrolprices.com/ [last accessed 6 August 2021]
பங்களாதேஷ் பெற்றோலியக் கூட்டுத்தாபனம், பெற்றோலியப் பொருட்களின் விலை, அட்டவணை, பார்வையிட: http://www.bpc.gov.bd/ [last accessed 12 August 2021]
பூட்டான் அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் லிமிடெட், பூட்டான் பெற்றோலியம், ராம்டோக்கோ எரிபொருள் சில்லறை விற்பனை நிலையம், பார்வையிட:https://www.stcb.bt/bhutanpetroleum.php [last accessed 6 August 2021]
குயன்செல் ஒன்லைன், அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது, ஊடகச் செய்தி, பார்வையிட: https://kuenselonline.com/increase-in-prices-of-essentials-remains-unabated/ [last accessed 12 August 2021]
இந்திய பெற்றோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு கூடம், பெற்றோலியம், விலைகள், 16.6.2017 முதல் மெட்ரோ நகரங்களில் பெற்றோல் மற்றும் டீசலின் சில்லறை விற்பனை விலை, அட்டவணை, பார்வையிட: https://www.ppac.gov.in/WriteReadData/userfiles/file/PP_9_a_DailyPriceMSHSD_Metro.pdf [last accessed 12 August 2021]
மாலைதீவு அரச வர்த்தக அமைப்பு, செய்திகள், அறிவிப்புகள், எரிபொருள் விலைகளில் மாற்றம், பார்வையிட:https://sto.mv/Media/Details/revision-of-fuel-price-ref-fr-2021 [last accessed 6 August 2021]
காத்மண்டு ருடே, வர்த்தகம், நேபாளத்தில் பெற்றோல் டீசலின் விலை 2021, ஊடகச் செய்தியைப் பார்வையிட:
https://www.ktm2day.com/petrol-diesel-lpg-gas-aviation-fuel-price-in-nepal/ [last accessed 12 August 2021]
பாகிஸ்தான் அரச எரிபொருள் நிறுவனம், பொருட்கள் மற்றும் சேவைகள், பொருட்களின் விலை, பெற்றோலிய மசகு எண்ணெய், காப்பகம், பார்வையிட:https://psopk.com/en/product-and-services/product-prices/pol/pol-archives [last accessed 6 August 2021]
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், கடந்த கால விலைகளைப் பார்வையிடுவதற்கு: http://ceypetco.gov.lk/historical-prices/ [last accessed 6 August 2021]
OANDA, கடந்த கால நாணய மாற்று வீதங்கள், பார்வையிட: https://www.oanda.com/fx-for-business/historical-rates [last accessed 6 August 2021]