உண்மைச் சரிபார்ப்புகளும்
அமைச்சர் பெர்னான்டோ சரியாகவே தெரிவித்துள்ளார் – கடந்த 3 ஆண்டுகளில் 500,00 0 வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி 2015 ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தில் பல மில்லியன் வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்படும் என உறுதி அளித்திருந்தது. அமைச்சர் பெர்னான்டோவின் கூற்றானது பொதுமக்கள் நலன் சார்ந்தது என்பதனால் முக்கியம் பெறுகின்றது. அமைச்சர் தெரிவித்த இந்தக் கூற்று சரியானதா?
அதன் உண்மைத்தன்மையை ஆராய்வதற்கு குயஉவஊhநஉம குழு தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்ட தொழிற்படை கணக்கெடுப்பில் உள்ள தரவுகளை ஆராய்ந்தது.
கீழே உள்ள அட்டவணையில் குறிப்பிட்டுள்ளவாறு, தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் (DCS) வெளியிட்ட தொழிற்பல அளவீட்டின் (LFS) பிரகாரம், 2014 ஆம் ஆண்டில் 7.7 மில்லியனாக காணப்பட்ட வேலை வாய்ப்புக்கள் 2017 ஆம் ஆண்டில் 8.2 மில்லியனாக உயர்ந்துள்ளது. எனவேஇ அமைச்சர் பெர்னான்டோவின் கூற்று சரியானது என நாங்கள் வகைப்படுத்துகின்றோம்.
*FactCheck இன் தீர்ப்பு பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது, FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.
அட்டவணை 1 – தொழிற்படை சனத்தொகை (2014 – 2017)
மூலம்
இலங்கை தொழிலாளர் படை புள்ளிவிவரங்கள், காலாண்டு அறிவிப்பு, இலங்கை தொழிலாளர் படை கணக்கெடுப்பு 2வது காலாண்டு – 2018, பார்வையிட: http://www.statistics.gov.lk/samplesurvey/LFS_Q2_Bulletin_WEB_2018_final.pdf