மஹிந்தானந்த அளுத்கமகே

அமைச்சர் அளுத்கமகே கடன் அட்டைகள் மற்றும் வரிக்கோவைகள் தொடர்பில் தவறாகக் குறிப்பிடுகிறார்

"

எங்கள் நாட்டில் சுமார் 1,000 வரிக்கோவைகள் உள்ளன. எங்கள் நாட்டில் 10 மில்லியனுக்கும் அதிகமான கடன் அட்டைகள் உள்ளன. கடன் அட்டை உள்ள ஒவ்வொருவரும் சுமார் ரூ.1 மில்லியன் முதல் ரூ.1.5 மில்லியன் வரை பணப் பரிவர்த்தனை செய்கின்றனர்.

சன்டே ஒப்சேவர் | செப்டம்பர் 12, 2021

blatantly_false

Blatantly False

உண்மைச் சரிபார்ப்புகளும்

(அ) உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் சுமார் 1,000 வரிக்கோவைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன (ஆ) நாட்டில் 10 மில்லியனுக்கும் அதிகமான கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன, கடன் அட்டையைக் கொண்டுள்ள ஒவ்வொருவரும் ரூ.1 மில்லியனுக்கும் அதிகமாகப் பணப் பரிவர்த்தனையில் ஈடுபடுகின்றனர் என அமைச்சர் குறிப்பிடுகிறார். கடன் அட்டை வைத்துள்ள ஒருவர் அனைத்து கடன் அட்டைகளிலும் மேற்கொள்ளும் வருடாந்தப் பரிவர்த்தனைகளின் மொத்தத் தொகையை அன்றி, ஆண்டொன்றுக்கு கடன் அட்டை ஒன்றுக்கு மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகளின் தொகையை அமைச்சர் குறிப்பிடுவதாக அவரது கூற்றை FactCheck.lk விளங்கிக் கொள்கிறது.

இந்தக் கூற்றை மதிப்பிடுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் தரவை FactCheck.lk ஆராய்ந்தது.

கூற்று (அ) பொறுத்தவரையில், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயலாற்றுகை அறிக்கையின் பிரகாரம் பதிவு செய்யப்பட்ட வரி செலுத்துநர்களின் மொத்த எண்ணிக்கை 1,705,233 (அட்டவணை 1) ஆகும். தனிநபர்கள் மற்றும் வரி செலுத்தும் ஊழியர்களை (நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகளைக் குறிப்பிடாமல்) மட்டும் அமைச்சர் குறிப்பிடுவதாக இருந்தாலும் கூட அமைச்சர் குறிப்பிடும் 1,000 என்பதை விட அதிகமாக இருக்கும் (அட்டவணை 1).

கூற்று (ஆ) பொறுத்தவரையில், இலங்கை மத்திய வங்கியின் 2021 Q2க்கான கொடுப்பனவு செய்தித்திரட்டின் பிரகாரம், வழங்கப்பட்டுள்ள மொத்தக் கடன் அட்டைகளின் எண்ணிக்கை 2,045,716 அல்லது அமைச்சர் குறிப்பிடுவதின் சுமார் 20% மட்டும் ஆகும். 2020 ஆம் ஆண்டுக்கான கடன் அட்டை பணப் பரிவர்த்தனைகளின் மொத்தத் தொகை ரூ. 21.8 பில்லியன் ஆகும். கடன் அட்டை ஒன்றுக்கான சராசரி வருடாந்தப் பரிவர்த்தனைத் தொகை 111,765. இது அமைச்சர் குறிப்பிடும் ரூ.1 முதல் 1.5 மில்லியன் என்பதை விட மிகக் குறைவாகும் (அட்டவணை 2).

கடன் அட்டைகளின் எண்ணிக்கை, வரிக்கோவைகளின் எண்ணிக்கை மற்றும் கடன் அட்டை ஒன்றுக்கான பரிவர்த்தனைத் தொகை ஆகிய அனைத்திலும் அமைச்சர் குறிப்பிடும் எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டதாக உள்ளது.

ஆகவே நாங்கள் அவரது கூற்றை ‘முற்றிலும் தவறானது’ என வகைப்படுத்துகிறோம்.

குறிப்பு: அமைச்சர் குறிப்பிடும் எண்ணிக்கை சரியாக இருக்கவேண்டும் என்றால் கடன் அட்டையைக் கொண்டுள்ள ஒவ்வொருவரும் சராசரியாக குறைந்தது 10 கடன் அட்டைகளைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல் அந்த 10 அட்டைகளிலும் ஆண்டொன்றுக்குச் சராசரியாக ரூ.100,000க்கும் அதிகமாகச் செலவிட வேண்டும்.

**FactCheck.lk முடிவு பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கும் சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ஒவ்வொரு சரிபார்ப்பையும் பொறுத்தவரையில் புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் FactCheck.lk மதிப்பீட்டை மீண்டும் சரிபார்க்கும்.



மூலம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை, வெளியீடுகள், வருடாந்த செயலாற்றுகை அறிக்கை 2019, பார்வையிட

http://www.ird.gov.lk/en/publications/Annual%20Performance%20Report_Documents/IR_PR_2009_E.pdf [last accessed 5 October 2021]

இலங்கை மத்திய வங்கி, நிதியியல் முறைமை, நிதியியல் உட்கட்டமைப்பு, கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள், கொடுப்பனவு செய்தித்திரட்டு – இரண்டாம் காலாண்டு 2021, பார்வையிட https://www.cbsl.gov.lk/sites/default/files/Payments_Bulletin_2Q2021_e.pdf [last accessed 5 October 2021]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன