உண்மைச் சரிபார்ப்புகளும்
மாகாண மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவுகளைப் பயன்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க பின்வரும் கூற்றுக்களை வெளியிட்டுள்ளார்.
1. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மேல் மாகாணத்தின் பங்களிப்பு 52 சதவீதம், அதனைத் தவிர்த்த பிற மாகாணங்களின் பங்களிப்பு 48 சதவீதம்
2. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மேல் மாகாணம் தவிர்ந்த பிற மாகாணங்களின் பங்களிப்பு அதிகரிக்காமல் தேங்கியுள்ளது.
இந்த கூற்றுக்கள் உண்மையானவையா?
முதலாவது கூற்றின்; உண்மைத்தன்மையை ஆராய்தல்:
மாகாண மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிபரங்களை பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கையில் இருந்து பெற்றுக்கொண்டதாக குறிப்பிடுகின்றார். எனினும், பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிபரங்கள் 2017 ஆம் ஆண்டின் (சமீபத்திய தரவுகள்) இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட புள்ளிவிபரங்களுடன் ஒத்துப் போகவில்லை. அந்த அறிக்கையானது: (i) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மேல் மாகாணத்தின் பங்களிப்பு 52 சதவீதம் அல்ல, மாறாக 39.7 சதவீதம்இ அத்துடன் (ii) மேல் மாகாணம் தவிர்ந்த மற்றைய அனைத்து மாகாணங்களின் பங்களிப்பு 48 சதவீதம் அல்ல, மாறாக 60.3 சதவீதம்.
அட்டவணை 1 இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கையில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகளைக் காட்டுகின்றது.
இரண்டாவது கூற்றின் உண்மைத்தன்மையை ஆராய்தல்:
பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்கவின் இரண்டாவது கூற்றும் இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கையில் உள்ள புள்ளிவிபரங்களுடன் மாறுபடுகின்றது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மேல் மாகாணம் தவிர்ந்த பிற மாகாணங்களின் பங்களிப்பில் அதிகரிப்பு இல்லாமல் தேங்கிப் போயூள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க தெரிவித்திருந்தார். ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பிற மாகாணங்களின் பங்களிப்பு 2012 அம் ஆண்டில் 57.2 சதவீதத்தில் இருந்து 2016 ஆம் ஆண்டு 60.3 சதவீதமாக அதிகரித்துள்ளதை தரவூகள் சுட்டிக்காட்டுகின்றன.
முடிவூ:
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மாகாணங்களின் பங்களிப்பு குறித்த புள்ளிவிபரங்கள் மாத்திரமன்றி, மேல் மாகாணம் தவிர்ந்த பிற மாகாணங்களின் பங்களிப்பு தேங்கிப் போயுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்த கூற்றும் உத்தியோகபூர்வ தரவுகளுடன் முரண்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை உண்மையில் இதற்கு எதிரான முடிவினையே காட்டுகின்றது. அதாவது கடந்த நான்கு வருடங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மேல் மாகாணம் தவிர்ந்த பிற மாகாணங்களின் பங்களிப்பு குறிப்பிட்ட அளவில் அதிகரித்துள்ளதுடன், மேல் மாகாணத்தின் பங்களிப்பினை விட வேகமாகவூம் அதிகரித்து வருகின்றது.
இந்த அனைத்து தகவல்களையும் கருத்தில் கொள்ளும் போது, பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்கவின் கூற்றினை “முற்றிலும் தவறானது” என வகைப்படுத்துகின்றோம்.
*FactCheck இன் தீர்ப்பு பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது, FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.
அட்டவணை 1: மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மாகாணங்களின் பங்கு (2012 – 2016)
மூலம்
- Table 4, Statistical Appendix, Central Bank Annual Report 2017, available at: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/publications/annual_report/2017/en/14_Appendix.pdf