ரணில் விக்கிரமசிங்க

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க: சில சரியான புள்ளிவிபரங்களுடன் தவறாகக் குறிப்பிடுகின்றார்.

"

நான் பிரதமராக இருந்தபோது, அரசாங்கத்தின் வருமானம் ரூ.150,000 மில்லியன். கடந்த மாத வருமானம் ரூ.50,000 மில்லியன். அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்கு ரூ.90,000 மில்லியன் தேவைப்படும்.

திவயின | அக்டோபர் 3, 2020

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவரது அறிக்கையில் இரண்டு கூற்றுக்களை முன்வைக்கின்றார்: (1) அரசாங்கத்தின் வருமானம் 2020 ஜுலை மாதத்தில் ரூ.100 பில்லியனால் குறைந்து ரூ.50 பில்லியனாக உள்ளது. (2) சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களுக்கான செலவினத்தின் தேவை வருமானத்தை விட அதிகரித்துள்ளது.

இந்தக் கூற்றினை ஆராய்வதற்கு, இலங்கை மத்திய வங்கியின் வாராந்த குறிகாட்டிகள் மற்றும் மாதாந்த செய்தித் திரட்டுக்களின் தரவுகளை FactCheck ஆராய்ந்தது.

கூற்று 1: 2019 ஜுலை மாதத்தில் அரசாங்கத்தின் வருமானம் அண்ணளவாக ரூ.143.9 பில்லியன் என்பதை அட்டவணை 1 காட்டுகின்றது. இது 2020 ஜுலை மாதத்தில் ரூ.99.8 பில்லியனாக குறைந்தது. ஆனால் அவர் குறிப்பிடுவது போல ரூ.50 பில்லியனாக குறையவில்லை. அவர் பிரதமராக இருந்த போது மாதாந்த வருமானம் ஏறக்குறைய சரியாக இருந்தது என முன்னாள் பிரதமரை மதிப்பிட்டாலும், 2020 ஜுலை மாதத்திற்கான வருமானம் ரூ.50 பில்லியன் என்பது தவறாக உள்ளது. இதன் விளைவாக, வருமானத்தில் ஏற்பட்ட உண்மையான சரிவு அவர் குறிப்பிட்ட 100 பில்லியனில் பாதிக்கும் குறைவாகும்.

கூற்று 2: 2020 ஜனவரி முதல் மே மாதம் வரையில் சராசரியாக சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களுக்கான அரசாங்கத்தின் மாதாந்த மொத்த செலவினம் ரூ.83.8 பில்லியன். முன்னாள் பிரதமர் இந்த புள்ளிவிபரத்தை ஓரளவு சரியாகக் குறிப்பிட்டுள்ளார் எனக் கருதினாலும், வருமானத்தை விட செலவினம் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவிக்கும் கூற்று தவறு, ஏனென்றால் அவர் வருமானத்தை குறிப்பிடத்தக்க அளவு குறைத்தே குறிப்பிட்டுள்ளார்.

ஓரளவுக்கு சரியான சில புள்ளிவிபரங்களை குறிப்பிட்டிருந்தாலும், 2020 ஜுலை மாதத்திற்கான அரசாங்கத்தின் வருமானத்தை தவறாகக் குறிப்பிட்டதன் விளைவாக, முன்னாள் பிரதமரின் இரண்டு கூற்றுக்களும் தவறாகியுள்ளன.

ஆகவே, நாங்கள் முன்னாள் பிரதமரின் கூற்றினை ‘தவறானது’ என வகைப்படுத்துகின்றோம்.மூலம்

இலங்கை மத்திய வங்கி, வாராந்த குறிகாட்டிகள், 16 ஒக்டோபர் 2020, அட்டவணை 3.1, பக்கம் 11, பார்வையிட: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/statistics/wei/WEI_16_10_2020_E_.pdf

இலங்கை மத்திய வங்கி, வாராந்த குறிகாட்டிகள், 4 ஜுன் 2020, அட்டவணை 3.1, பக்கம் 11, பார்வையிட:

https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/statistics/wei/WEI_20200604_e1.pdf

இலங்கை மத்திய வங்கி, வாராந்த குறிகாட்டிகள், 12 ஜுன் 2020, அட்டவணை 3.1, பக்கம் 11, பார்வையிட:

https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/statistics/wei/WEI_20200612_e.pdf

இலங்கை மத்திய வங்கி, வாராந்த குறிகாட்டிகள், 10 ஜுலை 2020, அட்டவணை 3.1, பக்கம் 11, பார்வையிட:

https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/statistics/wei/WEI_20200710_e1_0.pdf

இலங்கை மத்திய வங்கி, வாராந்த குறிகாட்டிகள், 7 ஓகஸ்ட் 2020, அட்டவணை 3.1, பக்கம் 11, பார்வையிட:

https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/statistics/wei/WEI_20200807_e.pdf

இலங்கை மத்திய வங்கி, வாராந்த குறிகாட்டிகள், 18 செப்டெம்பர் 2020, அட்டவணை 3.1, பக்கம் 11, பார்வையிட:

https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/statistics/wei/WEI_20200918_e1.pdf

இலங்கை மத்திய வங்கி, வாராந்த குறிகாட்டிகள், 16 ஒக்டோபர் 2020, அட்டவணை 3.1, பக்கம் 11, பார்வையிட:

https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/statistics/wei/WEI_16_10_2020_E_.pdf

இலங்கை மத்திய வங்கி, மாதாந்த செய்தித் திரட்டு ஜனவரி 2020, அட்டவணை 30, பக்கம் 32, பார்வையிட: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/statistics/mbt/Monthly_Bulletin_January_2020_e.pdf

இலங்கை மத்திய வங்கி, மாதாந்த செய்தித் திரட்டு பெப்ரவரி 2020, அட்டவணை 28, பக்கம் 30, பார்வையிட:

https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/statistics/mbt/Monthly_Bulletin_February_2020_e.pdf

இலங்கை மத்திய வங்கி, மாதாந்த செய்தித் திரட்டு பெப்ரவரி 2020, அட்டவணை 30, பக்கம் 32, பார்வையிட:

https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/statistics/mbt/Monthly_Bulletin_February_2020_e.pdf

இலங்கை மத்திய வங்கி, மாதாந்த செய்தித் திரட்டு மார்ச் 2020, அட்டவணை 28, பக்கம் 30, பார்வையிட:

https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/statistics/mbt/Monthly_Bulletin_March_2020_e.pdf

இலங்கை மத்திய வங்கி, மாதாந்த செய்தித் திரட்டு மார்ச் 2020, அட்டவணை 30, பக்கம் 32, பார்வையிட:

https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/statistics/mbt/Monthly_Bulletin_March_2020_e.pdf

இலங்கை மத்திய வங்கி, மாதாந்த செய்தித் திரட்டு ஏப்ரல் 2020, அட்டவணை 30, பக்கம் 32, பார்வையிட: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/statistics/mbt/monthly_bulletin_april_202020.pdf

இலங்கை மத்திய வங்கி, மாதாந்த செய்தித் திரட்டு மே 2020, அட்டவணை 30, பக்கம் 32, பார்வையிட: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/statistics/mbt/monthly_bulletin_may_202020.pdf

இலங்கை மத்திய வங்கி, மாதாந்த செய்தித் திரட்டு ஜுன் 2020, அட்டவணை 31, பக்கம் 33, பார்வையிட: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/statistics/mbt/monthly_bulletin_june_202020.pdf

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன