சி.வி.விக்னேஸ்வரன்

பாராளுமன்ற உறுப்பினர்  விக்னேஸ்வரன் யுத்தத்தினால்  பாதிக்கப்பட்ட  பகுதிகளில் வேலையின்மை  ஏற்றத்தாழ்வினை  மிகைப்படுத்துகின்றார்.

"

மேலதிக குறிப்பு: யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விகிதாசாரமாகப் பாதிக்கும் பொருளாதார வாய்ப்பின் பற்றாக்குறைக்கு வேலை வாய்ப்பின்மை வீதம் போதுமான குறிகாட்டியாக இல்லை. மக்கள் தொகையில் உழைக்கும் வயத

டெய்லி எப் ரி | செப்டம்பர் 12, 2020

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

இந்தக் கூற்றின் உண்மைத்தன்மையை மதிப்பிடுவதற்கு, தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்ட இலங்கை தொழிற்படை கணக்கெடுப்பு 2019 ஆண்டறிக்கையை FactCheck ஆராய்ந்தது. இந்த மதிப்பிட்டின் நோக்கத்திற்காக “யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட” பகுதிகளாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள மாவட்டங்களை நாங்கள் கருதுகின்றோம்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில், 7.2% என்ற மிக உயர்ந்த வேலை வாய்ப்பின்மை வீதம் மட்டக்களப்பில் பதிவாகியுள்ளது. எடையிடப்பட்ட சராசரி வேலைவாய்ப்பின்மை வீதம் 5.8 வீதமாகக் காணப்படுகின்றது. இந்த இரண்டுமே பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் 10 சதவீதத்தை விட மிகக் குறைவாகும். (வேலைவாய்ப்பின்மை வீதம் மிகக் குறைவாக உள்ள வடமாகாணத்தின் பல மாவட்டங்களில், மதிப்பீடு புள்ளிவிபர ரீதியாக நம்பகமானதாக இருக்காது என தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எனினும், உயர் வேலைவாய்ப்பின்மை மதிப்பீடுகள் உள்ள மாவட்டங்களுக்கு இது பொருந்தாது.)

தேசிய எடையிடப்பட்ட வேலைவாய்ப்பின்மை வீதம் 4.4% ஆகும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் 1.4% வித்தியாசம் காணப்படுகின்றது. இது பாராளுமன்ற உறுப்பினரால் சுட்டிக்காட்டப்பட்ட சதவீதத்தின் பாதிக்கும் குறைவாகும். இலங்கையில் உயர் வேலைவாய்ப்பின்மை வீதம் பதிவாகியுள்ள மாவட்டங்களாக மாத்தறை (7.5%), மாத்தளை (7.4%) மற்றும் அம்பாந்தோட்டை (7.3%) காணப்படுகின்றன. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பதிவான அதிகபட்ச வேலைவாய்ப்பின்மை வீதத்தை விட இவை அதிகமாகும் (அட்டவணை 1).

பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுவதை விட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வேலைவாய்ப்பின்மை வீதமும், ஏற்றத்தாழ்வும் குறைவாகக் காணப்படுவதால், அவரது கூற்றினை ‘தவறானது’ என நாங்கள் வகைப்படுத்துகின்றோம்.

குறிப்பு: வேலைவாய்ப்பின்மை வீதம் குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றுக்கள் தவறானவை என்றாலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தொழிற்படை பங்கேற்பு மற்றும் தனிநபர் வேலைவாய்ப்பு ஆகிய பிற புள்ளிவிபரங்கள் மிக மோசமாக உள்ளன. மேலதிக தகவல்களுக்கு, முழுமையான உண்மை சரிபார்ப்பினை www.factcheck.lk.  இல் பார்க்கவும்.

மேலதிக குறிப்பு:

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விகிதாசாரமாகப் பாதிக்கும் பொருளாதார வாய்ப்பின் பற்றாக்குறைக்கு வேலை வாய்ப்பின்மை வீதம் போதுமான குறிகாட்டியாக இல்லை. மக்கள் தொகையில் உழைக்கும் வயதில் வேலையில் ஈடுபடும் அல்லது வேலை தேடிக்கொண்டிருக்கும் பங்கினை அளவிடும் தொழிற்படை பங்கேற்பு அல்லது தனிநபருக்கான வேலை வாய்ப்பின் எண்ணிக்கை ஆகியன வெவ்வேறு மாவட்டங்களில் பொருளாதார வாய்ப்பினை கண்டறிய பரந்த பார்வையினை வழங்கும்.

நாட்டின் பிற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் குறைந்த தொழிற்படை பங்கேற்பு வீதம் மற்றும் தனிநபருக்கான வேலைவாய்ப்பைக் கொண்டுள்ளன – யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எடையிடப்பட்ட சராசரி தொழிற்படை பங்கேற்பு வீதம் 45 சதவீதமாக உள்ளது, அதேவேளை நாட்டின் பிற பகுதியில் 53 சதவீதமாகக் காணப்படுகின்றது. 8 சதவீத வித்தியாசம் காணப்படுகின்றது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் நாட்டின் பிறபகுதிகளில் 1,000 பேருக்கு 109 வேலைகள் அதிகமாகக் காணப்படுகின்றன (536 vs 427).

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலுள்ள மக்கள் நாட்டின் பொருளாதாரத்தில் பங்கேற்கும் வீதம் மற்றும் நாட்டின் பிற பகுதியிலுள்ளவர்களுடன் ஒப்பிடுகையில் அவர்களுக்கான வேலை வாய்ப்புக்களில் குறிப்பிடத்தக்க ஏற்றத்தாழ்வு காணப்படுகின்றது.

 



மூலம்