நாமல் ராஜபக்ஷ

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கல்வி குறித்த தவறான தரவினை தவறாகப் பயன்படுத்துகின்றார்.

"

இன்று கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு 560,000 பரீட்சார்த்திகளும், உயர்தரப் பரீட்சைக்கு 340,000 பரீட்சார்த்திகளும் தோற்றுகின்றார்கள்

மவ்பிம | ஜூலை 11, 2020

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

மேலேயுள்ள கூற்றினை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்ததாக மவ்பிம பத்திரிகை 2019 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 11 ஆம் திகதி செய்தி வெளியிட்டிருந்தது. அந்தக் கூற்றில் 560,000 பரீட்சார்த்திகள் (க.பொ.த). சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுவதாகவும், அவர்களில் 28,000 பேர் (அதாவது சுமார் 5 வீதம்) மாத்திரமே பல்கலைக்கழகத்திற்கு தகுதிபெறுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

பாராளுமன்ற உறுப்பினரது கூற்றின் உண்மைத்தன்மையை ஆராய்வதற்கு FactCheck இலங்கை பரீட்சைத் திணைக்களத்திடம் இருந்து (க.பொ.த). சாதாரண தரம் மற்றும் (க.பொ.த). உயர்தரப்பரீட்சைகளின் செயற்திறன் தொடர்பான சமீபத்திய தகவல்களையும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தகுதிபெறுபவர்கள் குறித்த தகவல்களையும் பயன்படுத்தியது.

பின்வரும் மூன்று விடயங்களில் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்ட தகவல்கள் தவறு என்பதனை அட்டவணை 1 காட்டுகின்றது. (i) உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுபவர்களின் எண்ணிக்கை (ii) உயர்தரப்பரீட்சையில் சித்தியடைபவர்களின் எண்ணிக்கை (iii) பல்கலைக்கழகத்திற்கு தகுதிபெறுபவர்களின் எண்ணிக்கை.

அவர் பயன்படுத்திய எண்கள் மாத்திரம் அன்றி பாராளுமன்ற உறுப்பினரின் கருத்தும் தவறானது. சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றுபவர்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடும் போது பரீட்சைக்கு முதல்தடவை தோற்றுபவர்களை மாத்திரம் குறிப்பிடாமல், குறைந்தது ஒரு பாடத்திற்காவது மீண்டும் பரீட்சைக்கு தோற்றுபவர்களையும் உள்ளடக்கியே குறிப்பிட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டில் முதற்தடவையாக சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய பாடசாலை பரீட்சார்த்திகளின் (ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்கள்) எண்ணிக்கை 296,029 ஆகும். அதேவேளை, 2018 ஆம் ஆண்டில் 139,129 தனியார் பரீட்சார்த்திகள் சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றியிருந்தார்கள். அவர்களில் 19,621 மாணவர்கள் மாத்திரமே குறைந்தது 5 அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களுக்கு தோற்றியிருந்தார்கள். எனினும், இந்த தனியார் பரீட்சார்த்திகள் முதல் தடவையாக தோற்றியிருந்தார்களா அல்லது இரண்டாவது, மூன்றாவது தடவையாக தோற்றியிருந்தார்களா என்பது தொடர்பில் குறிப்பான தகவல்கள் இல்லை. எனவே பாடசாலை ரீதியாக சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழக அனுமதியைப் பெறுபவர்கள் 9.6 வீதமாகும். மாறாக பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டது போன்று 5 வீதம் அல்ல.

தவறான தரவுகளைப் பயன்படுத்துவதன் மூலமும், தரவுகளை தவறாகப் பயன்படுத்துவதன் மூலமும் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றானது இலங்கையின் கல்வி முன்னேற்றத்தின் நிலை தொடர்பில் தவறான தகவல்கள் மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்துகின்றது. எனவே நாங்கள் அவரது கூற்றினை ‘தவறானது’ என வகைப்படுத்துகின்றோம்.

*FactCheck இன் தீர்ப்பு பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது, FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.

அட்டவணை 1: (க.பொ.த). சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்களின் செயற்திறன் (2016 – 2018) மூலம்