எரான் விக்கிரமரத்ன

பாராளுமன்ற உறுப்பினர் விக்கிரமரத்ன இலங்கையின் வட்டிக் கொடுப்பனவு குறித்துச் சரியாகத் தெரிவிக்கிறார்

"

கடன் மீள்கொடுப்பனவு வட்டிக்காக அரசாங்க வருமானத்தில் 70% செலவிடப்படுகிறது. தேசிய வருமானத்தின் சதவீதமாக வட்டியைக் கணக்கிடும் போது இலங்கையை விட அதிக வட்டியைச் செலுத்தும் ஒரே நாடு லெபனான்.

டெய்லி FT | ஆகஸ்ட் 5, 2021

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

பாராளுமன்ற உறுப்பினர் அவரது அறிக்கையில் (1) அரச வருமானத்தின் 70% கடனின் வட்டிக் கொடுப்பனவுகளுக்காகச் செலவிடப்படுகிறது (2) தேசிய வருமானத்தின் சதவீதமாகக் கணக்கிடும் போது இலங்கையை விட அதிக வட்டி செலுத்தும் ஒரே நாடு லெபனான் எனக் குறிப்பிடுகிறார். அவரது அறிக்கையைச் சரிபார்ப்பதற்கு இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கைகள் மற்றும் உலக வங்கியின் உலக அபிவிருத்திக் குறிகாட்டிகளின் தரவுத்தளத்தை FactCheck.lk ஆராய்ந்தது.

கூற்று 1: இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கை 2020 இன் பிரகாரம் இலங்கை அரசாங்கத்தின் வருமானத்தில் கடன் மீள்கொடுப்பனவுகளுக்கான வட்டி 2019 ஆம் ஆண்டில் 47.7 சதவீதத்தில் இருந்து 2020 ஆம் ஆண்டில் 72 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த அதிகரிப்பானது வட்டிக் கொடுப்பனவுகளில் ஏற்பட்ட அதிகரிப்பு மற்றும் 2020 ஆம் ஆண்டு அரச வருமானத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியினால் இடம்பெற்றுள்ளது (அட்டவணை 1ஐப் பார்க்கவும்). ஆகவே பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்ட 70% என்பது 2020 ஆம் ஆண்டுக்குரிய வட்டிக் கொடுப்பனவுகளைப் பிரதிபலிக்கிறது.

கூற்று 2: உலக வங்கியின் உலக அபிவிருத்திக் குறிகாட்டிகள் தரவுத்தளம் தற்போது 117 நாடுகளுக்கு (இலங்கை உட்பட) 2019 ஆம் ஆண்டு வரை கிடைக்கிறது. அதில் 2019 ஆம் ஆண்டில் தேசிய வருமானத்தில் 47 சதவீதத்தை வட்டிக் கொடுப்பனவுகளுக்காகச் செலவிட்டு இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. லெபனான் 51 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது (அட்டணை 2 ஐப் பார்க்கவும்). இது பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை உறுதிப்படுத்துகிறது.

பாராளுமன்ற உறுப்பினரின் முதலாவது கூற்று 2020 ஆம் ஆண்டுக்குச் சரியாக உள்ளது. அத்துடன் இரண்டாவது கூற்று 2019 ஆம் ஆண்டுக்குச் சரியாக உள்ளது, பல்வேறு நாடுகளுக்கான தரவு கிடைக்கும் சமீபத்திய ஆண்டாக 2019 காணப்படுகிறது. ஆகவே நாங்கள் அவரது கூற்றை ‘சரியானது’ என வகைப்படுத்துகிறோம்.

குறிப்பு: 2020 ஆம் ஆண்டில் லெபனானால் கடன்களைச் செலுத்த முடியாமல் போனதால் வருமானத்தில் 18% மாத்திரமே வட்டிக் கொடுப்பனவுகளுக்காகச் செலவிடப்பட்டது. ஆகவே வருமானத்தில் 72% வட்டிக் கொடுப்பனவுகளுக்காகச் செலவிட்டு இலங்கை முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. (அதிக கடன்களைக் கொண்ட நாடுகள் வருமானத்தில் வட்டிக்காகச் செலுத்தும் விகிதத்தை வெரிட்டே ரிசேர்ச்சின் தளமான Publicfinance.lk கணக்கிட்டுள்ளதை விளக்கப்படம் மூன்றில் பார்க்கவும்).

**பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.மூலம்

உலக வங்கி, தரவுத்தளம் – உலக அபிவிருத்திக் குறிகாட்டிகள், பார்வையிட: https://databank.worldbank.org/source/world-development-indicators [last accessed 25 August 2021]

உலக வங்கி, லெபனான் பொருளாதாரக் கண்காணிப்பு – பெலனான் கடனில் மூழ்கிறது (முதல் 3 இடங்களுக்கு) – 2021, பார்வையிட: https://documents1.worldbank.org/curated/en/394741622469174252/pdf/Lebanon-Economic-Monitor-Lebanon-Sinking-to-the-Top-3.pdf [last accessed 30 August 2021]

இலங்கை மத்திய வங்கி, ஆண்டறிக்கை 2020, பார்வையிட://www.cbsl.gov.lk/en/publications/economic-and-financial-reports/annual-reports/annual-report-2020 [last accessed 25 August 2021]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது