சஜித் பிரேமதாச

சீனி வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை எதிர்க்கட்சித் தலைவர் பிரேமதாச மதிப்பிடுகிறார்

"

சீனி தொடர்பான ஊழலினால் இலங்கை ரூ.20 பில்லியனை இழந்துள்ளது.

சஜித் பிரேமதாசவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் | ஆகஸ்ட் 27, 2021

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

இலங்கையில் “சீனி ஊழல்” என்பது சீனி இறக்குமதிகளுக்கான விசேட வியாபாரப் பண்ட அறவீட்டில் ஏற்பட்ட திடீர் குறைப்புத் தொடர்பான ஊழலைக் குறிக்கிறது. இது ஒக்டோபர் 13, 2020 முன்னெடுக்கப்பட்டது. சீனிக்கான விசேட வியாபாரப் பண்ட அறவீடு கிலோகிராமுக்கு ரூ.50 என்பதிலிருந்து கிலோகிராமுக்கு ரூ.0.25 என 99.5 சதவீதத்தினால் குறைக்கப்பட்டது.

விசேட வியாபாரப் பண்ட அறவீட்டைக் குறைத்ததனால் சந்தை விலையில் குறிப்பிடத்தக்க எந்த விலைக்குறைப்பும் ஏற்படவில்லை என்ற கவனிப்பின் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. (அட்டவணை 2 ஐப் பார்க்கவும்). அரசாங்கத்திற்கு ஏற்பட்ட வரி வருமான இழப்பு சமூகத்திற்கு நன்மையளிப்பதற்குப் பதிலாக இறக்குமதியாளர்கள் தங்கள் சீனி இறக்குமதிகளைக் குறைந்த வரி வீதத்தில் இறக்குமதி செய்து தனிப்பட்ட நன்மையைப் பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இதனால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட வருமான இழப்பு ரூ.20 பில்லியன் என எதிர்கட்சித் தலைவரின் அறிக்கை மதிப்பிடுகிறது.

இந்தக் கூற்றை மதிப்பிடுவதற்கு சுங்கத் திணைக்களம் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் மாதாந்த பொருளாதாரக் குறிகாட்டிகளை FactCheck.lk ஆராய்ந்தது. ஒவ்வொரு மாதமும் இறக்குமதி செய்யப்பட்ட சீனியின் அளவு மற்றும் அதனால் அரசாங்கத்துக்கு ஏற்பட்ட வருமான இழப்பை அட்டவணை 1 காட்டுகிறது. வரி குறைக்கப்பட்டு சுமார் ஆறு மாதங்களின் பின்பு அதாவது மார்ச் 2021 இறுதியில், எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டது போன்று வருமான இழப்பு ரூ.20 பில்லியனாக உள்ளது.

ஆகவே எதிர்க்கட்சித் தலைவரின் அறிக்கையை ‘சரியானது’ என நாங்கள் வகைப்படுத்துகிறோம்.

**பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.மூலம்

வர்த்தமானி, ஒக்டோபர் 13, 2020 –   https://www.customs.gov.lk/wp-content/uploads/2021/06/scl201014.pdf

வர்த்தமானி, மே 22, 2020 – https://www.customs.gov.lk/wp-content/uploads/2021/06/38.scl200522.pdf

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது