டலஸ் அழகப்பெரும

சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் பயணம் குறித்து அமைச்சர் அழகப்பெரும சரியாகக் குறிப்பிடுகிறார்

"

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF – International Monetary Fund) உறுப்புரிமையைப் பெறுவதற்காக 1950 ஆம் ஆண்டில் நாங்கள் நிதியத்துடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்தினோம். உறுப்புரிமை பெற்ற நாடாக, 1960 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 16 தடவைகள் கடன்களைப் பெற்றுள்ளோம்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் | ஜனவரி 19, 2022

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

அமைச்சரின் கூற்றுக்களை மதிப்பிடுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள உறுப்புரிமை மற்றும் கடன் வழங்கல்கள் தொடர்பான தரவை FactChecl.lk ஆராய்ந்தது.

அமைச்சர் குறிப்பிடுவது போன்று, இலங்கை 1950 ஆம் ஆண்டில் (ஓகஸ்ட் 29, 1950) சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்புரிமையைப் பெற்றது என்பதைத் தரவு காட்டுகிறது. மேலும் அன்று முதல் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 16 கடன்களை இலங்கை பெற்றுள்ளது. (குறிப்பு: சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து ஓகஸ்ட் 2021ல் ஐ.அ.டொலர் 787 மில்லியன் பெறுமதியான சிறப்பு எடுப்பனவு உரிமைகளின் (SDR – Special Drawing Rights) ஒதுக்கீட்டை இலங்கை பெற்றிருந்தாலும் கூட, இது சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வழங்கும் ஏற்பாடாகக் கருதப்படவில்லை).

ஐ.அ.டொலர் 2.6 பில்லியன் என்ற அதிகூடிய கடன் 2009 ஆம் ஆண்டு பெறப்பட்டுள்ளதை அட்டவணை 1 காட்டுகிறது. அமைச்சர் இந்தத் தொகையை ஒரளவு சரியாகக் குறிப்பிட்டுள்ளதுடன் கடன் பெற்றுக்கொண்ட ஆண்டை 2008 எனக் குறிப்பிடுகிறார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்பட்ட அதிகூடிய கடனின் ஐ.அ.டொலர் பெறுமதியையும் பெற்றுக்கொண்ட ஆண்டையும் அமைச்சர் ஒரளவு சரியாகக் குறிப்பிடுகிறார். மேலும் சர்வதேச நாணய நிதியத்தில் இலங்கை இணைந்து கொண்ட ஆண்டையும் அன்று முதல் இலங்கை பெற்றுக்கொண்ட கடன்களின் எண்ணிக்கையும் அவர் சரியாகக் குறிப்பிடுகிறார்.

ஆகவே அவரது அறிக்கையை ‘சரியானது’ என நாங்கள் வகைப்படுத்துகிறோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகிறது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.மூலம்

இலங்கையிலுள்ள IMF அலுவலகம், பார்வையிட: https://www.imf.org/en/Countries/ResRep/LKA [இறுதியாக அணுகியது பெப்ரவரி 15, 2022]

IMF உறுப்பினர்கள் பட்டியல், பார்வையிட: https://www.imf.org/external/np/sec/memdir/memdate.htm [இறுதியாக அணுகியது பெப்ரவரி 15, 2022]

இலங்கை: செப்டெம்பர் 30, 2018 நிலவரப்படி இதுவரையான கடன்கள், பார்வையிட: https://www.imf.org/external/np/fin/tad/extarr2.aspx?memberKey1=895&date1key=2018-09-30 [இறுதியாக அணுகியது பெப்ரவரி 15, 2022]

SDR மதிப்பீடு, பார்வையிட:  https://www.imf.org/external/np/fin/data/rms_sdrv.aspx [இறுதியாக அணுகியது பெப்ரவரி 15, 2022]

சர்வதேச நாணய நிதியத்தின் சிறப்பு எடுப்பனவு உரிமைகளின் ஒதுக்கீடு மற்றும் பங்களாதேஷ் வங்கியுடனான நாணயப் பரஸ்பர பரிமாற்றல் ஏற்பாடுகளின் ஆரம்பப் பகிர்ந்தளிப்புகளை இலங்கை பெற்றுக்கொள்கிறது, பார்வையிட: https://www.cbsl.gov.lk/en/news/sri-lanka-receives-sdr-and-initial-disbursement-of-currency-swap-agreement-with-bangladesh [இறுதியாக அணுகியது பெப்ரவரி 15, 2022]

சிறப்பு எடுப்பனவு உரிமைகள் தொடர்பான கேள்விகளும் பதில்களும், பார்வையிட: https://www.imf.org/en/About/FAQ/special-drawing-right#Q1.%20What%20is%20an%20SDR? [இறுதியாக அணுகியது பெப்ரவரி 15, 2022]

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன