கஞ்சன விஜேசேகர

எரிபொருள் விலைத்திருத்தம் குறித்து அமைச்சர் விஜேசேகர சரியாகக் குறிப்பிடுகிறார்

"

எரிபொருள் விலை இன்று அதிகாலை 3 மணி முதல் திருத்தம் செய்யப்படவுள்ளது. அமைச்சரவையினால் ஒப்புக்கொள்ளப்பட்ட எரிபொருள் விலைச் சூத்திரத்தைப் பயன்படுத்தி விலைகள் திருத்தப்படவுள்ளன.

கஞ்சன விஜேசேகரவின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கம் | மே 24, 2022

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

அமைச்சர் அவரது ட்வீட்டில் அனைத்துப் பொருத்தமான செலவுகளையும் உள்ளடக்கிய சூத்திரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அண்மையில் எரிபொருள் விலைத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடுகிறார். இதன் மூலம் பெற்றோலும் டீசலும் இதற்கு மேலும் நட்டத்தில் விற்பனை செய்யப்படாது என அவர் குறிப்பிடுகிறார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அனைத்துச் செலவுகளையும் (அரசாங்கத்திற்குச் செலுத்தப்படும் வரி உட்பட) முழுமையாக உள்ளடக்கியதாக 2018ம் ஆண்டில் எரிபொருள் விலைச் சூத்திரம் நிதியமைச்சினால் உருவாக்கப்பட்டது. அமைச்சரின் இந்தக் கூற்றை எரிபொருள் விலைச் சூத்திரம் மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட தரவு ஆகியவற்றைப் பயன்படுத்தி FactCheck.lk ஆராய்ந்தது. 92 ஒக்டெய்ன் பெற்றோல் மற்றும் ஓட்டோ டீசல் ஆகியவற்றுக்கான தரவு மட்டுமே கிடைப்பதால் FactCheck.lk அதன் மதிப்பீடுகளை இந்த இரு வகை எரிபொருட்களுக்கு மட்டுமே முன்னெடுக்கிறது.

மே மாதத்தில் (24ம் திகதி வரை) சராசரியாக சிங்கப்பூர் பிளாட்ஸின் விலை பெற்றோல் ஒரு பீப்பாய்க்கு ஐ.அ.டொ 139.9 ஆகவும், டீசல் ஒரு பீப்பாய்க்கு ஐ.அ.டொ 142.4 ஆகவும் காணப்பட்டது. ஐ.அ.டொலரின் நாணய மாற்று வீதத்தின் விற்பனை விலை சராசரியாக 358.8 ஆகும். இந்தப் பெறுமதிகளைப் பயன்படுத்தி பெற்றோல் மற்றும் டீசலுக்கான விலைச் சூத்திரத்தை (இது நட்டம் ஏற்படாது என உறுதிசெய்யும்) முறையே ரூ.413 மற்றும் ரூ.385 என FactCheck.lk மதிப்பிட்டது.

மாதாந்த அடிப்படையில் கணக்கிடப்படும் சூத்திரத்தின் விலை எனும் https://publicfinance.lk/en/topics/fuel-price-tracker-1653909188 தளத்தில் வெளியிடப்படுகிறது. மே 24, 2022க்கு முன்னதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் செலவினத்தை (வரிகள் உட்பட) விடக் குறைவாக பெற்றோலை விற்பனை செய்தது. டீசலும் செலவினத்தை (வரிகள் உட்படவும் வரிகள் இல்லாமலும்) விடக் குறைவாகவே விற்பனை செய்யப்பட்டது.  இந்த விலைகள் அட்டவணை 2ல் காட்டப்பட்டுள்ளன. இதில் சூத்திரத்தின் விலையை விட சந்தை விலை குறைவாக உள்ளது. எனினும் தற்போது பெற்றோல் மற்றும் டீசலின் விலை சரிசெய்யப்பட்டதன் மூலம் சூத்திரத்தின் விலைக்கு சந்தையில் விற்கப்படும் விலை உயர்ந்துள்ளது.

ஆகவே அவரது அறிக்கையை சரியானது என நாங்கள் வகைப்படுத்துகிறோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

 

அட்டவணை 1: அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலைத்திருத்தம்

அட்டணை 2: ஜனவரி 2022 முதல் மே 2022 வரை வரிகளுடனும் வரிகள் இன்றியும் சந்தை விலை மற்றும் சூத்திரத்தின் விலை

குறிப்பு: மே மாதம் தவிர பிற மாதங்கள் மாத இறுதிப் பெறுமதிகளைக் குறிக்கின்றன. மே மாதத்தில் மட்டும் 24ம் திகதி வரை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சூத்திரத்தின் செலவின மதிப்பீட்டில் ஏற்படக்கூடிய பிழைகளுக்கு 3% வரம்பு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.



மூலம்

எரிபொருள் விலைச் சூத்திரம், பார்வையிட: https://publicfinance.lk/en/topics/fuel-price-tracker-1653909188  [இறுதியாக அணுகியது ஜூன் 1, 2022]

இலங்கை மத்திய வங்கியின் நாளாந்தப் பொருளாதாரக் குறிகாட்டிகள், பார்வையிட: https://www.cbsl.gov.lk/en/statistics/economic-indicators/daily-indicators [இறுதியாக அணுகியது ஜூன் 1, 2022]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன