சஜித் பிரேமதாச

எக்ஸ்பிரஸ் பேர்ள் (X-Press Pearl) பேரிடரினால் பாதிக்கப்பட்ட கடற்றொழில் துறை குறித்து பிரேமதாச சரியாகக் குறிப்பிடுகிறார்.

"

இலங்கை மத்திய வங்கி 2019 அறிக்கையின் பிரகாரம், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு கடற்றொழில் துறை 1.1% பங்களிப்பை வழங்கியுள்ளது.

திவயின | ஜூன் 3, 2021

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

எக்ஸ்பிரஸ் பேர்ள் (X-Press Pearl) கப்பல் பேரிடரைத் தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக மீனவ சமூகம் எதிர்கொள்ளும் சிரமங்கள் அதிகரித்துள்ள நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரமதாஸ மேலுள்ள கூற்றைத் தெரிவித்துள்ளார். அவருடைய கூற்றை மதிப்பிடுவதற்காக மத்திய வங்கியின் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள இலங்கையின் பொருளாதார மற்றும் சமூகப் புள்ளிவிபரங்கள் அறிக்கையை FactCheck.lk ஆராய்ந்தது.

2019 இல் கடல் மீன்பிடி மற்றும் கடல் மீன்வளர்ப்பினால் இலங்கைக்குக் கிடைத்த மொத்த வருமானம் ரூ.169,976 மில்லியன். மத்திய வங்கியின் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பிரகாரம் 2019 இல் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (மொ.உ.உ) ரூ.15,016,142 மில்லியன் ஆகும். ஆகவே அந்த ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு கடல் மீன்பிடி மற்றும் மீன்வளர்ப்பு துறையின் பங்களிப்பு 1.1% ஆகும்.

ஆகவே பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை நாங்கள் ‘சரியானது’ என வகைப்படுத்துகிறோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

மேலதிகக் குறிப்பு (1):

இலங்கையின் கடற்றொழில் துறை பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது: (அ) கடல் மீன்பிடி மற்றும் கடல் மீன்வளர்ப்பு (ரூ.169,976 மில்லியன்), (ஆ) நன்னீர் மீன்பிடி மற்றும் நன்னீர் மீன்வளர்ப்பு (ரூ.27,013 மில்லியன்). ஆகவே நன்னீர் மீன்பிடியையும் சேர்க்கும் போது கடற்றொழில் துறையின் மொத்தப் பங்களிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 1.31% ஆகும். பாராளுமன்ற உறுப்பினரின் கூற்று கடற்றொழில் துறையின் கடல் மீன்பிடி மற்றும் மீன்வளர்ப்பை மாத்திரம் குறிப்பிடுவதால் அவரது கூற்று சரியாக உள்ளது.

மேலதிகக் குறிப்பு (2):

2020 ஆம் ஆண்டில் கடற்றொழில் துறை சுருங்கி மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 1.1% மொத்தப் பங்களிப்பை மாத்திரம் வழங்கியிருந்தது.

 



மூலம்

புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி, இலங்கையின் பொருளாதார மற்றும் சமூகப் புள்ளிவிபரங்கள் 2020 (ESS), பக்கம் 16, பார்வையிட: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/statistics/otherpub/ess_2020_t1.pdf [last accessed 29 June 2021]

புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி, இலங்கையின் பொருளாதார மற்றும் சமூகப் புள்ளிவிபரங்கள் 2019 (ESS), பார்வையிட: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/statistics/otherpub/ESSS%202019%20-%20T.pdf [last accessed 29 June 2021]

கடற்றொழில் திணைக்களம், மீன்பிடி புள்ளிவிபரங்கள் 2020, பக்கம் 57, பார்வையிட: https://www.fisheriesdept.gov.lk/web/images/Statistics/FISHERIES-STATISTICS–2020-.pdf [last accessed 29 June 2021]

 

 

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன