பசில் ராஜபக்ஷ

அமைச்சர் பசில் ராஜபக்ஷ முட்டை மற்றும் கோழி இறைச்சியில் தன்னிறைவு பெற்றுள்ளதைச் சரியாகக் குறிப்பிடுகிறார்

"

இலங்கை ஏற்கனவே முட்டை மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றில் தன்னிறைவு இலக்கை அண்மித்துள்ளது.

2022 வரவு செலவுத் திட்ட உரை | நவம்பர் 12, 2021

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் பிரகாரம், ”உணவு தன்னிறைவு என்பது பொதுவாக உள்நாட்டு உற்பத்தி மூலமாக ஒரு நாடு தனது உணவுத்தேவையைப் பூர்த்தி செய்வதாகும்”. மேலும் நிகர உணவு ஏற்றுமதி நாடுகள் தன்னிறைவு பெற்றவை, நிகர உணவு இறக்குமதி நாடுகள் தன்னிறைவு பெறாதவை என உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு குறிப்பிடுகிறது. ஆகவே அமைச்சரின் அறிக்கையை மதிப்பிடுவதற்கு நிகர இறக்குமதிகளைத் தன்னிறைவுக் குறிகாட்டியாக FactCheck.lk கருத்தில் கொள்கிறது. ஏற்றுமதி அபிவிருத்திச் சபையி்ன் 2017 முதல் 2021 ஆம் ஆண்டு வரையான வர்த்தகப் புள்ளிவிபரங்களை FactCheck.lk ஆராய்ந்ததுடன் இலங்கையின் மொத்த உற்பத்தியுடன் வர்த்தகப் பெறுமதிகளை ஒப்பிடுவதற்கு இலங்கை மத்திய வங்கியின் 2020 ஆண்டறிக்கையிலுள்ள தரவையும் பயன்படுத்தியது.

இறைச்சி வர்த்தகம் இரண்டு வகையானது: உயிருள்ள கோழி மற்றும் கோழி இறைச்சி. 2017 முதல் 2021 வரையிலான ஒவ்வொரு ஆண்டும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தரவின் பிரகாரம், இலங்கையானது முட்டை மற்றும் கோழி இறைச்சியில் நிகர ஏற்றுமதியாளர். ஆனால் உயிருள்ள கோழியைப் பொறுத்தவரை நிகர இறக்குமதியாளராக உள்ளது. ஒட்டுமொத்தமாக (உயிருள்ள மற்றும் இறைச்சி) கோழிகளில் நிகர இறக்குமதியாளராக உள்ளது. முட்டை மற்றும் கோழி இறைச்சியில் இலங்கை தன்னிறைவு பெற்றுள்ள போதும் உயிருள்ள கோழியில் தன்னிறைவு பெறவில்லை என்பதே இதன் அர்த்தமாகும்.

தன்னிறைவு அடைவதற்கு ”மிக அருகில்” உள்ளதாக அமைச்சர் தெரிவித்திருப்பதால், மொத்த உயிருள்ள கோழி உற்பத்தியில் நிகர இறக்குமதிகள் எத்தனை சதவீதம் என்பதையும் நாங்கள் ஆராய்ந்தோம். 2017 – 2020 வரையில் ஒவ்வொரு ஆண்டும் இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட உயிருள்ள கோழிகளின் மொத்த எண்ணிக்கையில் உயிருள்ள கோழி நிகர இறக்குமதிகள் 1% – 2.5% என்பதை இலங்கை மத்திய வங்கியின் தரவு சுட்டிக்காட்டுகிறது. ஆகவே உயிருள்ள கோழி உற்பத்தியில் தன்னிறைவு அடைவதில் இலங்கை ”மிக அருகில்” உள்ளது.

இலங்கை முட்டையில் தன்னிறைவு அடைந்துள்ளதுடன் கோழி இறைச்சியில் தன்னிறைவு பெறுவதற்கு மிக அருகில் உள்ளது என்பதை அமைச்சர் சரியாகத் தெரிவித்துள்ளார். ஆகவே நாங்கள் அவரது அறிக்கையை ‘சரியானது’ என வகைப்படுத்துகிறோம்.

மேலதிகக் குறிப்பு:

கோழிகளுக்கு HS குறியீடுகள் 0105 (உயிருடன் உள்ள பறவைகள் அதாவது வாத்துகள், வான்கோழிகள், கினிப்பறவைகள் உள்ளிட்ட வீட்டில் வளர்க்கப்படும் பறவை இனங்கள்) மற்றும் 0207 (குறியீடு 0105 கீழ் வரும் கோழிகளின் இதர இறைச்சி மற்றும் உண்ணக்கூடிய இறைச்சியின் கழிவுகள், புதியது, குளிரூட்டப்பட்டது அல்லது உறைந்தது) ஆகியவற்றை FactCheck.lk கருத்தில் கொண்டது.

முட்டைகளுக்கு HS குறியீடுகள் 0407 (பறவைகளின் முட்டைகள், ஓட்டுடன் இருப்பது, புதியது, பதப்படுத்தப்பட்டது அல்லது சமைக்கப்பட்டது) மற்றும் 0408 (பறவைகளின் முட்டைகள், ஓடில்லாதவை, முட்டைக் கரு, புதியது, உலர்த்தியது, ஆவியில் சமைக்கப்பட்டது அல்லது கொதி நீரில் அவிக்கப்பட்டது, வார்க்கப்பட்டவை, உறைந்தது அல்லது பாதுகாக்கப்பட்டவை, சீனி அல்லது இனிப்பூட்டிகள் சேர்க்கப்பட்டவை மற்றும் சேர்க்கப்படாதவை) ஆகியவற்றை FactCheck,lk கருத்தில் கொண்டது.

 

 மூலம்

ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, வர்த்தகப் புள்ளிவிபரங்கள் தளம், HS குறியீடுகள் 0105, 0207, 0407, 0408, பார்வையிட: https://stat.edb.gov.lk/ [last accessed 6 December 2021]

இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை (2021), ப. 42, பார்வையிட: https://www.cbsl.gov.lk/en/publications/economic-and-financial-reports/annual-reports [last accessed: 6 December 2021]

உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, உணவு தன்னிறைவு மற்றும் சர்வதேச வர்த்தகம்: தவறான இரு பகுதிகளா? ப. 2, பார்வையிட: https://www.fao.org/3/i5222e/i5222e.pdf [last accessed: 7 December 2021]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது