நிமல் சிறிபால டி சில்வா

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா: தேயிலை ஏற்றுமதியிலுள்ள பிரச்சினைகளை சுட்டிக்காட்டுகின்றார்.

"

2020 ஆம் ஆண்டில் தேயிலை ஏற்றுமதியின் அளவு முந்தைய ஆண்டினை விட 9.2 சதவீதத்தினால் அல்லது 27 மில்லியன் கிலோவினால் குறைந்து 265.5 மில்லியன் கிலோவாகக் காணப்படுகின்றது, பெறுமதியின் அடிப்படையில் 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.10.4 பில்லியனால் அல்லது 4.3 சதவீதத்தினால் குறைந்து ரூ.230.1 பில்லியனாக உள்ளது

டெய்லி FT | பிப்ரவரி 9, 2021

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

இந்தக் கூற்றினை மதிப்பிடுவதற்கு, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தரவுகளை FactCheck ஆராய்ந்தது.

(அ) தேயிலை ஏற்றுமதியின் அளவு குறைந்துள்ளது, மற்றும் (ஆ) தேயிலையின் மூலமான வருமானம் குறைந்துள்ளது, ஆனால் (இ) தேயிலை ஏற்றுமதியின் விலை அதிகரித்துள்ளது என அமைச்சர் தரவுகளுடன் சுட்டிக்காட்டுகின்றார்.

கூற்று (இ) யில், 2019 ஆம் ஆண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட ஒரு கிலோ தேயிலையின் சராசரி FOB விலை ரூ.822.25. 2020 ஆம் ஆண்டில் இந்த விலை ரூ.866.72 ஆக அதிகரித்தது. இது அமைச்சர் டி சில்வா குறிப்பிட்டது போன்று 5.4% சதவீத அதிகரிப்பாகும்.

கூற்று (அ) வில், 2019 ஆம் ஆண்டு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலை 292.7 மில்லியன் கிலோகிராமுடன் ஒப்பிடுகையில், 2020 ஆம் ஆண்டு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையின் அளவு 265.6 மில்லியன் கிலோவாகக் குறைந்துள்ளதை தரவுகள் வெளிப்படுத்துகின்றன. இது அமைச்சர் குறிப்பிட்டதைப் போன்று 9.3% வீழ்ச்சியாகும்.

இதன் விளைவான கூற்று (ஆ) உம் சரியாகும். அலகொன்றின் பெறுமதியில் அதிகரிப்பு ஏற்பட்ட போதும், தேயிலை ஏற்றுமதியின் அளவில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சியினால் ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையின் மொத்தப் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு ரூ.240.6 பில்லியனாகக் காணப்பட்ட மொத்த ஏற்றுமதிப் பெறுமதி 2020 ஆம் ஆண்டில் ரூ.230.2 பில்லியனாகக் குறைந்துள்ளது. இது அமைச்சர் குறிப்பிட்டதைப் போன்று ரூ.10.4 பில்லியன் அல்லது 4.3% வீழ்ச்சியாகும்.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் அனைத்துக் கூற்றுக்களுடனும் தரவுகள் பொருந்திப் போவதனால், நாங்கள் அவரது அறிக்கையை “சரியானது” என வகைப்படுத்துகின்றோம்.

*பகிரங்கமாக பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck மறுபரிசீலனை செய்யும்.மூலம்

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, வர்த்தக புள்ளிவிவரம்: https://stat.edb.gov.lk/index.php

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது