அசேல குணவர்த்தன

கோவிட்-19 சமூகப் பரவல் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தவறான அளவுகோல்களை முன்வைக்கின்றார்.

"

“சமூகப் பரவல் நிலையை எட்ட வேண்டுமானால், பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கைக்கு இணையாக கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் வீதமும் சடுதியாக அதிகரிக்க வேண்டும். இலங்கை தற்போது அவ்வாறான நிலையை எட்டவில்லை.”

டெய்லி மிரர் | பிப்ரவரி 10, 2021

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்த்தன அவரது அறிக்கையில், கோவிட் – 19 சமூகப் பரவல் நிலையை எட்டினால், அதன் அறிகுறியாக கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் வீதம் அதிகரிக்கும் எனக் குறிப்பிடுகின்றார். இந்த அளவுகோலின் அடிப்படையில் இலங்கையில் சமூகப் பரவல் நிகழவில்லை என அவர் முடிவுக்கு வருகின்றார்.

சுகாதார அமைச்சின் சிரேஷ்ட தொற்றுநோயியல் நிபுணரின் அறிக்கையை நொவம்பர் 2020 இல் FactCheck மதிப்பீடு செய்து, உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவுகோல்களின் பிரகாரம் அப்போதே இலங்கை சமூகப் பரவல் நிலையை எட்டிவிட்டது என முடிவுக்கு வந்தது. தற்போதைய கூற்று அறியப்பட்ட எந்தவொரு அளவுகோலுக்கும் பொருந்தாத போதும், உறுதிப்படுத்தப்பட்ட சான்றுகளின் அடிப்படையில் ஏதேனும் உண்மைகளைக் கொண்டிருக்குமா என இந்த உண்மை சரிபார்ப்பு மதிப்பிடுகின்றது.

இந்தக் கூற்றினை சரிபார்ப்பதற்கு, உலக சுகாதார அமைப்பின் மார்ச் 2020 முதல் பெப்ரவரி 2021 வரையிலான உலகளாவிய கோவிட் – 19 தொடர்பான தகவல்கள் மற்றும் Our World in Data இடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட உலகளாவிய கோவிட் – 19 பரிசோதனை தரவுகளை FactCheck மதிப்பிட்டது. 10 பெப்ரவரி 2021 இல் சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளதாக 74 நாடுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் (i) விரிவான சோதனைத் தரவுகள் கிடைக்கப்பெற்ற மற்றும் (ii) சமூகப் பரவல் என வகைப்படுத்துவதற்கு முன்னரான வாரத்தில் நாளொன்றுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைந்தது 4,000 ஆகியவற்றைக் கொண்ட 24 நாடுகள் தொடர்பான தரவுகளை FactCheck மதிப்பிட்டது.

பணிப்பாளர் நாயகம் குறிப்பிடும் தொற்றுக்குள்ளானவர்களின் வீதத்தில் ஏற்படும் அதிகரிப்பு (சோதனைகளின் அடிப்படையில் தொற்றுக்குள்ளானவர்களின் விகிதம்) என்பது தொற்றுக்குள்ளானவர்களை சோதனை செய்யும் விகிதத்தில் (TCR) ஏற்பட்ட வீழ்ச்சிக்கு சமமானது எனவும் குறிப்பிடலாம். பணிப்பாளர் நாயகத்தின் கூற்றினை மதிப்பிடுவதற்கு கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் வீதத்தை விட, உலகளவில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட TCR ஐ FactCheck பயன்படுத்தும்.

மதிப்பிடப்பட்ட 24 நாடுகளில், 30 நாள் சராசரி TCR குறைந்த பட்சம் 2.79 (மெக்சிக்கோ) முதல் அதிகபட்சம் 107.68 (எதியோப்பியா) வரை காணப்பட்டது, சராசரி 29.9 ஆகும். 2021 பெப்ரவரி 10 ஆம் திகதி இலங்கையின் சராசரி TCR 27.25 – உலகளவில் “சமூகப்பரவல்” என நாடுகள் வகைப்படுத்தப்படும் சராசரி புள்ளிக்கு அருகாமையில் இலங்கை உள்ளது. “சமூகப்பரவல்” என குறிப்பிட வேண்டும் என்றால் TCR “சடுதியாக” குறைய வேண்டும் என பணிப்பாளர் நாயகத்தின் கூற்று குறிப்பிடுகின்றது. ஆயினும் உலகளவில் அவ்வாறு இல்லை. மதிப்பிடப்பட்ட 24 நாடுகளில் 8 நாடுகளில் வகைப்பாடு மாற்றத்திற்கு வழிவகுக்கும் மாதத்தில் TCR உண்மையில் அதிகரித்துள்ளது – தொற்று ஏற்பட்டுள்ளதை கண்டறிவதற்கு அதிக சோதனைகள் தேவை என்பதே இதன் பொருள். பரவல் குறைந்து வருகின்றது என்பது இதற்கு அர்த்தமல்ல; நாட்டின் பரிசோதனை நிலை மேம்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் குறிக்கலாம். 2021 பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு முந்தைய மாதத்தில் இலங்கையின் TCR 2.03 ஆல் குறைந்தது.

ரி.சி.ஆரைப் பொறுத்தவரையில், குறைந்தது 9 நாடுகள் “சமூகப் பரவல்” என வகைப்படுத்தப்பட்ட போது காணப்பட்ட நிலையை விட இலங்கை மிகவும் மோசமாக உள்ளது. ரி.சி.ஆரில் ஏற்பட்ட வீழ்ச்சி குறைந்து 11 நாடுகளை விட அதிகமாகும். இந்த எண்கள் குறிப்பிடுவது என்னவென்றால், பின்லாந்து, ஹங்கேரி, லித்துவேனியா மற்றும் லக்சம்பேர்க் போன்ற நாடுகளின் கோவிட் – 19 பரவல் “சமூகப் பரவல்” என வகைப்படுத்தப்பட்டபோது TCR எண்ணிக்கைகள் மற்றும் TCR போக்கு ஆகிய இரண்டிலும் அவை இலங்கையை விட சிறப்பாக செயற்பட்டன.

ஆகவே “சமூகப் பரவல்” என்பதற்கான வகைப்படுத்தலின் அறியப்பட்ட வரையறையில் இருந்து விலகிச் செல்வது மாத்திரமன்றி, பணிப்பாளர் நாயகத்தின் கூற்று உறுதிப்படுத்தப்பட்ட சான்றுகளுக்கும் மாறாக உள்ளது. ஆகவே நாங்கள் பணிப்பாளர் நாயகத்தின் கூற்றினை “தவறானது” என வகைப்படுத்துகின்றோம்.

*பகிரங்கமாக பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck மறுபரிசீலனை செய்யும்.



மூலம்

உலக சுகாதார அமைப்பு, கொரோனா வைரஸ் (கோவிட் – 19) டாஷ்போர்ட், நாடு, பிராந்தியம் மற்றும் பகுதி வாரியாக நிலைமை அட்டவணை, பார்வையிட: https://covid19.who.int/table [last accessed 12 March 2021]

Our World in Data, மொத்த கோவிட் – 19 பரிசோதனைகள், பார்வையிட: https://ourworldindata.org/grapher/full-list-total-tests-for-covid-19?time=2020-02-20..latest [last accessed 12 March 2021]

Our World in Data, நாளாந்த கோவிட் – 19 பரிசோதனைகள், பார்வையிட: https://ourworldindata.org/grapher/full-list-covid-19-tests-per-day?time=2020-02-20..latest [last accessed 12 March 2021]

உலக சுகாதார அமைப்பு, வாராந்த தொற்றுநோயியல் விபரங்கள் மற்றும் வாராந்த செயல்பாட்டு விபரங்கள், மார்ச் 2021, பார்வையிட: https://www.who.int/emergencies/diseases/novel-coronavirus-2019/situation-reports [last accessed 12 March 2021]

Our World in Data, உறுதிப்படுத்தப்பட்ட தொற்று ஒன்றுக்கான சோதனைகள் – மொத்தம் vs. இறப்பு விகிதம், மார்ச் 8 2021, பார்வையிட: https://ourworldindata.org/grapher/number-of-tests-per-confirmed-case-vs-case-fatality-rate?tab=chart&stackMode=absolute&time=latest&country=®ion=World [last accessed 12 March 2021]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன