அநுர குமார திசாநாயக்க

அண்மைக் காலங்களில் பெறப்பட்ட பணவனுப்பல்கள் குறித்து ஜனாதிபதி தவறாகத் தெரிவித்துள்ளார்

"

கடந்த இரண்டு மாதங்களில் வெளிநாட்டு தொழிலாளர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற பணவனுப்பல்களின் உட்பாய்ச்சலே அண்மைக் காலங்களில் பதிவான மிக அதிகமான தொகையாகும். கடந்த இரண்டு மாதங்களில் [ஐ.அ.டொ] 1,121 மில்லியனை நாங்கள் பெற்றுக்கொண்டுள்ளோம்… […]

பாராளுமன்றத்தில் | மார்ச் 21, 2025

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

ஐ.அ.டொ 1,121 மில்லியன் பணவனுப்பல் பெறுமதியைக் குறிப்பிட்டு, கடந்த இரண்டு மாதங்களில் கிடைத்த இந்தப் பணவனுப்பல்களே அண்மைக் காலங்களில் பதிவான அதிகூடிய பெறுமதி என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குறிப்பிடுகின்றார்.

இந்தக் கூற்றைச் சரிபார்க்க இலங்கை மத்திய வங்கியின் பணவனுப்பல்கள் தொடர்பான தரவை FactCheck.lk ஆராய்ந்தது.

2025 ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் பெறப்பட்ட மொத்த பணவனுப்பல்களையே ஜனாதிபதி குறிப்பிடுவதாக FactCheck.lk விளங்கிக்கொள்கின்றது. ஏனெனில் அவர் மேற்கோள் காட்டும் பெறுமதி இந்த இரண்டு மாதங்களுக்குமான இலங்கை மத்திய வங்கியின் தரவுகளுடன் பொருந்துகின்றது.

அண்மைக் காலங்களில் பெறப்பட்ட பணவனுப்பல்களில் 2025 ஜனவரி – பெப்ரவரி பணவனுப்பல்கள் அதிகமானவையா என்பதைச் சரிபார்க்க, 2025 ஜனவரி – பெப்ரவரி மாதங்களின் மொத்தப் பணவனுப்பல்களை 2024 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் தொடர்ச்சியான இரண்டு மாத காலங்களுடன் FactCheck.lk ஒப்பிட்டது (உதாரணம், ஜனவரி – பெப்ரவரி, பெப்ரவரி – மார்ச், மார்ச் – ஏப்ரல் போன்றவை).

2024 ஆம் ஆண்டின் நான்கு வெவ்வேறான இரண்டு மாத காலப்பகுதிகளை அட்டவணை 1 காட்டுகின்றது. இதில் 2025 ஜனவரி – பெப்ரவரி மாதங்களுக்கு முன்னதான மாதங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த பணவனுப்பல்கள் ஐ.அ.டொ 1,121 மில்லியனை விட அதிகமாகவுள்ளன.

மாதம் ஒன்றில் கிடைத்த பணவனுப்பல்களில், 2025 ஜனவரியில் கிடைத்த பணவனுப்பல் ஐ.அ.டொ 573 மில்லியன் (பெப்ரவரியை விட அதிகமாகும்). எனினும், 2024 ஆம் ஆண்டின் ஆகஸ்ட், ஒக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கிடைத்த பணவனுப்பல்கள் 2025 ஜனவரியை விட அதிகமாகும் (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்).

மொத்தத்தில், ஜனவரி – பெப்ரவரி பணவனுப்பல்களின் பெறுமதி அண்மைக் காலங்களில் கிடைக்கப்பெற்ற அதிகூடிய உட்பாய்ச்சல் என்ற ஜனாதிபதி திசாநாயக்கவின் கூற்று இரண்டு மாத கால ஒப்பீட்டிலும் ஒரு மாத கால ஒப்பீட்டிலும் தவறானதாக உள்ளது.

எனவே நாங்கள் ஜனாதிபதியின் கூற்றை தவறானது என வகைப்படுத்துகின்றோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனதுமுடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

 

அட்டவணை 1: 2025 ஜனவரி மற்றும் பெப்ரவரி மாத பணவனுப்பல்களுடன் 2024 ஆம் ஆண்டு பணவனுப்பல்களின் ஒப்பீடு



மூலம்

YouTube Page of the Parliament of Sri Lanka, https://www.youtube.com/live/Tb5Ovs5qhGY?si=u6nChWoxYXHRvqwa&t=31201 

Workers’ Remittances, Central Bank of Sri Lanka. https://www.cbsl.gov.lk/en/workers-remittances/statistics

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன