லொஹான் ரத்வத்த

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சொகுசு வாகனங்களுக்கான கடன் குறித்து லொஹான் ரத்வத்த தவறாகத் தெரிவிக்கிறார்

"

இது ஒரு கிரெடிட் லைன் (Credit line)… இந்தக் கிரெடிட் லைனைப் பயன்படுத்தவில்லை என்றால் பயனற்றதாகிவிடும் – இதைப் பயன்படுத்த வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம் எங்கள் அரசாங்கம் கடனாளி ஆகாது.

நியூஸ் பெர்ஸ்ட்.lk | ஜூன் 12, 2021

blatantly_false

Blatantly False

உண்மைச் சரிபார்ப்புகளும்

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அவரது அறிக்கையில் (அ) கிரெடிட் லைனின் கீழ் இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் நாட்டின் பொதுப்படுகடனை அதிகரிக்காது, பொது நிதியில் இருந்து கிரெடிட் லைன் செலவிடப்படுவதில்லை. ஆகவே (ஆ) கிரெடிட் லைனைப் பயன்படுத்தாவிட்டால் அது பயனற்றதாகிவிடும் எனக் குறிப்பிடுகிறார்.

இந்தக் கூற்றை மானியங்கள், கடன்கள் மற்றும் கிரெடிட் லைன்கள் ஆகியவற்றுக்கான வரைவிலக்கணம் மற்றும் தாக்கங்களின் அடிப்படையில் FactCheck.lk மதிப்பிடுகிறது.

மானியங்கள், கடன்கள் மற்றும் கிரெடிட் லைன்கள் ஆகியவற்றைப் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைப்பு (OCED – Economic Co-operation and Development) பின்வருமாறு வரையறுக்கிறது.

  • மானியம் என்பது பணம், பொருட்கள் அல்லது சேவைகளாகப் பரிமாற்றம் செய்யப்படுவது, இதைத் திருப்பிச் செலுத்தத் தேவையில்லை.
  • கடன் என்பது மீள்கொடுப்பனவு செய்யப்பட வேண்டும்.
  • கிரெடிட் லைன் என்பது கடனின் ஒரு வகையாகும். இதில் பயன்படுத்தப்பட்ட தொகை மட்டும் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்.

கூற்று (அ) சரியாக இருக்க வேண்டுமானால் வாகனங்களுக்குக் கடனை விட மானியத்தால் நிதியளிக்கப்பட வேண்டும். இராஜாங்க அமைச்சர் மானியத்தைக் குறிப்பிடாமல் கடனின் ஒரு வகையான கிரெடிட் லைனைப் பற்றியே குறிப்பிடுகிறார். வாகனங்களை இறக்குமதி செய்ய கிரெடிட் லைனைப் பயன்படுத்தினால் அது பொது நிதியிலிருந்து திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். இதன் விளைவாக நாட்டின் பொதுப்படுகடன் அதிகரிக்கும்.

கூற்று (ஆ), கிரெடிட் லைனைப் பயன்படுத்தாவிட்டால் அது ”பயனற்றதாகிவிடும்” எனக் கூறுவதன் மூலம், கிரெடிட் லைனைப் பயன்படுத்துவது நன்மையானது எனவும் அரசாங்கத்துக்கு எந்தச் செலவும் இல்லை எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிடுகிறார். இது தவறு.

கிரெடிட் லைன் ஒரு கடன் என்ற போதும் அதை திருப்பிச் செலுத்தத் தேவையற்ற மானியம் என இராஜாங்க அமைச்சர் தவறாக விபரிக்கிறார். மேலும் அரசாங்கத்துக்கான செலவை நன்மையானது எனப் பொய்யாகக் குறிப்பிடுகிறார். ஆகவே அவரது கூற்றை ‘முற்றிலும் தவறானது‘ என வகைப்படுத்துகிறோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

 



மூலம்

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைப்பு, DAC சொற்களஞ்சியம், பார்வையிட: https://www.oecd.org/dac/financing-sustainable-development/development-finance-data/dac-glossary.htm [last accessed

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைப்பு, புள்ளிவிபரச் சொற்பதங்களுக்கான சொற்களஞ்சியம், ”லைன்ஸ் ஒவ் கிரெடிட்”, பார்வையிட: https://stats.oecd.org/glossary/detail.asp?ID=1534

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன