ராஜித சேனாரத்ன

மலேரியா பாதிப்பு குறித்து முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தவறான தகவலைத் தெரிவிக்கின்றார்.

"

2016 ஆம் ஆண்டில் இலங்கையில் மலேரியாவை நான் முற்றாக ஒழித்தேன்.

திவயின | ஜூன் 24, 2020

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் கூற்றினை ஆராய்வதற்கு, உலக சுகாதார ஸ்தாபனத்தின் மலேரியா சொற்பதங்களையும், சுகாதார அமைச்சின் ஆண்டறிக்கை மற்றும் தேசிய மலேரியா மூலோபாயத் திட்டத்தினையும் FactCheck ஆராய்ந்தது.

‘அனோபிலஸ் நுளம்புகளினால் உள்நாட்டில் மலேரியா பரவுவது நாடு முழுவதும் தொடர்ச்சியாக குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு இல்லாதிருப்பது சந்தேகத்திற்கிடமின்றி நிருபணம் ஆனால் மாத்திரமே’ மலேரியா நோய் அற்ற நாடு என்ற சான்றினை வழங்குவதாக உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிடுகின்றது.

ராஜித சேனாரத்ன சுகாதார அமைச்சராக 2015 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி நியமிக்கப்பட்டார். இலங்கைக்கு 2016 ஆம் ஆண்டு மலேரியா நோய் அற்ற நாடு என்ற அந்தஸ்து வழங்கப்பட்டது – இது சேனாரத்னவின் பதவிக்காலத்தில் ஆகும் – இலங்கையில் 2012 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உள்நாட்டில் மலேரியா பதிவாகவில்லை என தேசிய மலேரியா மூலோபாயத் திட்டம் சுட்டிக்காட்டுகின்றது. மலேரியா அற்ற அந்தஸ்தை நோக்கிய முன்னேற்றம் பல்வேறு நிர்வாகங்களின் கீழ் பெற்றுக்கொள்ளப்பட்டதை அட்டவணை 2 காட்டுகின்றது: குறைந்தது 1999 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டில் மலேரியாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி காணப்படுகின்றது. 1999 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை இலங்கையில் 6 சுகாதார அமைச்சர்கள் பதவியில் இருந்துள்ளனர்.

எனவே, முன்னாள் அமைச்சர் சேனாரத்னவின் கூற்று இரண்டு விடயங்களில் தவறாகும். (1) மலேரியாவை முற்றாக ஒழித்ததில் ஒருவருக்கு மாத்திரம் அங்கீகாரத்தை வழங்கமுடியாது, இது 15 ஆண்டுகளுக்கும் மேலான கூட்டு முயற்சியின் விளைவாகும், அத்துடன் (2) இலங்கையில் கடைசி மலேரியா நோயாளி இனங்காணப்பட்டது ராஜித சேனாரத்ன சுகாதார அமைச்சராக பதவி வகித்த காலத்திற்கு மூன்றாண்டுகளுக்கு முன்னராகும்.

எனவே, நாங்கள் இந்தக் கூற்றினை ‘தவறானது’ என வகைப்படுத்துகின்றோம்.

*பகிரங்கமாக பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck மறுபரிசீலனை செய்யும்.



மூலம்

  • உலக சுகாதார ஸ்தாபனம், உலகளாவிய மலேரியாத் திட்டம், உலக சுகாதார ஸ்தாபனம் மலேரியா சொற்பதம், 2016, பக்கம் 12
  • சுகாதார அமைச்சு, மலேரியாவிற்கு எதிரான பிரச்சாரம், தேசிய மலேரியா மூலோபாயத் திட்டம், 2014 – 2018, பார்வையிட: http://amc.health.gov.lk/index.php/en/resources/strategic-plan [last accessed: 12 August 2020]
  • சுகாதார அமைச்சு, மலேரியாவிற்கு எதிரான பிரச்சாரம், ஆண்டறிக்கை 2014 – 2016