உண்மைச் சரிபார்ப்புகளும்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலேயுள்ள கூற்றினை தெரிவித்திருந்ததாக, தினமின 2019 மார்ச் 28 ஆம் திகதி செய்தி வெளியிட்டிருந்தது.
தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சமீபத்திய இலங்கை தொழிற்படை கணக்கெடுப்பு (2017) வருடாந்த அறிக்கையின் பிரகாரம், பொதுத்துறை ஊழியர்களின் எண்ணிக்கை (ஆயுதப் படையினர் தவிர்த்து) 1,178,708 ஆகும். இந்த எண்ணிக்கையில் பெண்களின் பங்கு 44.8 வீதம் ஆகும்.
அதேபோன்று, 2018 ஆம் ஆண்டின் கிடைக்கப்பெற்ற நான்கு காலாண்டுகளுக்கான அறிக்கையில், பொதுத்துறையில் பணிபுரியும் ஊழியர்களின் சராசரி எண்ணிக்கை 1,158,478 (ஆயுதப் படையினர் தவிர்த்து). இந்த எண்ணிக்கையில் பெண்களின் பங்கு 45.2 வீதம் ஆகும்.
பொதுத்துறையில் பெண்களின் பங்கு சுமார் 45 சதவீதம் என தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால் ஜனாதிபதி 70 சதவீதம் எனக் குறிப்பிடுகின்றார். எனவே நாங்கள் ஜனாதிபதியின் கூற்றினை ‘தவறு’ என வகைப்படுத்துகின்றோம்.
*FactCheck இன் தீர்ப்பு பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது, FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.
மூலம்
இலங்கை தொழிற்படை கணக்கெடுப்பின் வருடாந்த மற்றும் காலாண்டு அறிக்கைகள், பார்வையிட:
http://www.statistics.gov.lk/samplesurvey/LFS_Annual%20Report_2017_version2.pdf
http://www.statistics.gov.lk/samplesurvey/2018Q1report.pdf
http://www.statistics.gov.lk/samplesurvey/2018Q2report.pdf