உதய கம்மன்பில

பா.உ கம்மன்பில: உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்க IMF நிபந்தனை விதிக்கவில்லை, ஆனால் வெளிக்கடன் வழங்குனர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்

"

உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) நிபந்தனை விதிக்கவில்லை. …அவ்வாறு இருக்கும் நிலையில், அதனைச் செய்யுமாறு எங்களை மிரட்டியது யார்?

மிரர் நியூஸ் யூடியூப் பக்கம் | ஜூன் 27, 2023

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

பாராளுமன்ற உறுப்பினர் அவரது அறிக்கையில் இரண்டு கூற்றுக்களை முன்வைக்கிறார். 1) உள்நாட்டுக் கடன்களை மறுசீரமைக்குமாறு சர்வதேச நாணய நிதியத்துடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு நிபந்தனை விதிக்கப்படவில்லை, 2) வெளிநாட்டுக் கடன்களைப் போன்று உள்நாட்டுக் கடன்களும் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று சர்வதேச முறிகளை வைத்திருப்பவர்களே நிபந்தனை விதித்துள்ளார்கள். 

இந்தக் கூற்றுக்களைச் சரிபார்க்க, சர்வதேச நாணய நிதியத்துடனான சபை மட்ட ஒப்பந்த உத்தேச ஒப்புதல் கடிதம் (LOI), மார்ச் 6, 2023 திகதியிடப்பட்ட சர்வதேச நாணய நிதிய ஊழியர் மட்ட  அறிக்கையில் உள்ள பொதுப் படுகடன் நிலைத்தன்மை பகுப்பாய்வு (DSA) மற்றும் ஜுன் 28, 2023 திகதியிடப்பட்ட இல. MF/TO/006/CM/2023/154 அமைச்சரவை விஞ்ஞாபனம் ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது. 

கூற்று 1: சர்வதேச நாணய நிதியத்துடனான உத்தேச ஒப்புதல் கடிதத்தில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று அரசாங்கமோ சர்வதேச நாணய நிதியமோ உறுதிமொழி வழங்கவில்லை. 

உத்தேச ஒப்புதல் கடிதத்தில் அரசாங்கம் “உள்நாட்டுக் கடன் தொடர்பில் காணப்படும் விருப்பங்களை ஆராய்வதுடன்” அது தொடர்பிலான விபரங்களை 2023 ஏப்ரல் இறுதிக்கு முன்னதாக அறிவிக்க வேண்டும் என்று மட்டுமே உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் குறிப்பிட்டுள்ளது. 

DDR தொடர்பான சில சூழ்நிலைகள் DSA இல் உள்ளடக்கப்பட்டுள்ளன. எனினும் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு ஒரு விருப்பமாக மட்டுமே பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன் பொருளாதார மீட்சித் திட்டத்திற்கான நிபந்தனையாகக் குறிப்பிடப்படவில்லை. இது தொடர்பான மேலதிகத் தகவல்களுக்கு மேலதிகக் குறிப்பு 1 ஐப் பார்க்கவும். 

கூற்று 2: பாரளுமன்ற உறுப்பினரின் இரண்டாவது கூற்று ஜுன் 28, 2023 திகதியிடப்பட்ட அமைச்சரவை விஞ்ஞாபனம் மூலம் ஆதரிக்கப்படுகிறது. உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பானது இலங்கையின்  நாணய முறிகளை வைத்திருப்பவர்களின் தற்காலிகக் குழுவின் உறுப்பினர்களுக்குச் செலுத்த வேண்டிய வெளிநாட்டுச் சட்ட வெளிநாட்டு நாணயக் கடனை மறுசீரமைப்பதற்கான ஒரு முன்நிபந்தனையாகும்” என்று குறிப்பிடுகிறது. 

அமைச்சரவை விஞ்ஞாபனத்தில் (மேலதிகக் குறிப்பு 2) பிரதிநிதித்துவத்தின் நம்பகத்தன்மை குறித்த கவலைகள் இருந்தாலும், பா.உறுப்பினரின் கூற்றுக்கள் விஞ்ஞாபனத்தில்  அரசாங்கம் முன்வைத்த அறிக்கைகள், சர்வதேச நாணய நிதியத்திற்கு அரசாங்கம் அளித்த உத்தேச ஒப்புதல் கடிதம் ஆகியவற்றின் அடிப்படையிலானவை என்பதால்  அவருடைய அறிக்கையை நாங்கள் சரியானது என வகைப்படுத்துகிறோம். 

மேலதிகக் குறிப்பு 1: சர்வதேச நாணய நிதியத்தின் திட்டமானது உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பை முன்னெடுக்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை என்றாலும் 2027 முதல் 2032 வரை மொத்த நிதித் தேவைகளை சராசரியாக மொ.உ.உற்பத்தியில் 13 சதவீதமாகப் பராமரிப்பது போன்ற, திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடன் நிலைத்தன்மையின் பிற வரையறைகளை எட்டுவது அவசியமாகிறது. இது உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்கான காரணமாக வேறு பல காரணங்களுடன் நிதியமைச்சின் ஜுலை 7, 2023 முதலீட்டாளர் விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலதிகக் குறிப்பு 2: சர்வதேச முறிகளைக் கொண்டிருப்பவர்களுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது நாட்டிற்கான பொதுப் படுகடன் நிலைத்தன்மை பகுப்பாய்வின் வரையறைகளை எட்டுவதற்கு நியாயமான முறையை அடைவதற்கான ஒரு செயல்முறையாகும். இவ்வாறான ஒரு பேச்சுவார்த்தையில் எந்தவொரு தரப்பினரும் ஒரு தலைபட்சமாக மற்றவர் மீது நிபந்தனைகளை விதிக்க முடியாது என்பதே FactCheck.lk இன் புரிதலாக உள்ளது. பேச்சுவார்த்தைகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன என்ற புரிதலை அமைச்சரவை விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முன்நிபந்தனை மீறுகிறது. 

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும் 

 



மூலம்

சர்வதேச நாணய நிதியம், இலங்கை “விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் விரிவாக்கப்பட்ட ஏற்பாட்டைப் பெறுவதற்கான கோரிக்கை – ஊடக வெளியீடு; ஊழியர் மட்ட அறிக்கை; மற்றும் இலங்கைக்கான நிறைவேற்றுப் பணிப்பாளரின் அறிக்கை”, மார்ச் 20, 2023, பார்வையிட: https://www.imf.org/en/Publications/CR/Issues/2023/03/20/Sri-Lanka-Request-for-an-Extended-Arrangement-Under-the-Extended-Fund-Facility-Press-531191  

நிதியமைச்சு, அமைச்சரவை விஞ்ஞாபனம், “வெளிநாட்டுக் கடன் நிலைத்தன்மையை மேம்படுத்த உள்நாட்டுக் கடன் மேம்படுத்துதலைச் செயல்படுத்துதல்”, ஜுன் 28, 2023, பார்வையிட: https://mcusercontent.com/7dec08f7f8b599c6b421dfd10/files/4dd67c2c-99fe-782f-2238-77b4e066425b/Cabinet_Memo.pdf 

நிதியமைச்சு, உள்நாட்டுக் கடனை மேம்படுத்துதல் தொடர்பான முதலீட்டாளர் விளக்கம், ஜுலை 7, 2023, பார்வையிட: https://www.treasury.gov.lk/api/file/125879b7-87df-4d3f-961f-06e9dc0cf984  

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன