அஜித் நிவாட் கப்ரால்

பாராளுமன்ற உறுப்பினர் கப்ரால்: கடன் மீள்கொடுப்பனவு கூற்றில் தவறு இல்லாமல் இல்லை

"

தற்போது வரையில் (பெப்ரவரி 2021) மொத்த பன்னாட்டு முறிகளின் நிலுவை ஐ.அ.டொலர் 14 பில்லியன், இது இலங்கையின் மொத்தக் கடன் தொகையில் வெறும் 16.7 சதவீதமாகும். இலங்கையின் 83.3% கடன்களைக் கொண்டுள்ள பிற கடன் வழங்குனர்கள் மீள்கொடுப்பனவு ஆற்றல் குறித்து கவலை அல்லது அழுத்தத்தின் எந்த அறிகுறியையும் வெளிக்காட்டவில்

சன்டே ஒப்சேவர் | பிப்ரவரி 28, 2021

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

இராஜாங்க அமைச்சர் இரண்டு கூற்றுக்களை முன்வைக்கின்றார்:

1) இலங்கையின் பன்னாட்டு முறிகளைக் கொண்டிராத கடன் வழங்குனர்கள் (இலங்கையின்) மீள்கொடுப்பனவு திறன் குறித்து கவலை அல்லது அழுத்தத்தின் எந்த அறிகுறியையும் வெளிக்காட்டவில்லை.

2) ஆண்டொன்றுக்கு செலுத்த வேண்டிய பன்னாட்டு முறிகளின் கடன்தொகை ஐ.அ.டொ 1 முதல் 1.5 பில்லியன், தவணை தவறுவதைத் தவிர்க்க இந்தப் பெறுமதியை செலுத்த வேண்டும்.

கூற்று 1: கடன் வழங்குனர்கள் கோரும் வட்டி வீதம் மற்றும் வழங்குவதற்கான அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் மீள்கொடுப்பனவு குறித்த கவலைகள் அல்லது கொடுகடன் இடர்நேர்வை மதிப்பிட முடியும். இலங்கை அரசாங்கத்தின் பன்னாட்டு முறிகள் அற்ற பிற கடன்களில் அதிகமானவை உள்நாட்டு ரூபா கடன்களாகும் (மொத்தக் கடனில் 53.5%). இவற்றின் வட்டி வீதங்கள் மிகவும் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளன. இது கொடுகடன் இடர்நேர்வு குறித்த அக்கறை குறைவாக உள்ளதைக் காட்டுகின்றது. எனினும், மீதமுள்ள பன்னாட்டு முறிகள் அற்ற பிற கடன்களைப் பொறுத்தவரையில், புதிய கடன்களுக்கான வட்டி வீதங்கள் எப்போதும் பொது வெளிக்கு வராத காரணத்தினால் சந்தையில் இல்லாத வெளிநாட்டுக் கடன்களின் (இருதரப்பு மற்றும் பலதரப்பு கடன்கள்) கொடுகடன் இடர்நேர்வை மதிப்பிடுவது சாத்தியமில்லை (உதாரணம், மார்ச் 2020 சீன அபிவிருத்தி வங்கிக் கடன்). மேலும், இலங்கை அபிவிருத்தி முறிகளின் வட்டி வீதம் (மொத்தக் கடனில் 3.3%) ஜனவரி 2020 முதல் ஜனவரி 2021 க்குள் அதிகரித்துள்ளது. உதாரணமாக, இரண்டு ஆண்டு முதிர்வினைக் கொண்ட இலங்கை அபிவிருத்தி முறிகளின் வட்டி வீதம் 5.79 சதவீதத்திலிருந்து 6.92 சதவீதமாக அதிகரித்துள்ளது. அத்துடன் இந்தக் காலப்பகுதியில் ஏல விற்பனைகளில் விநியோகிக்கப்பட்ட 54% தொகுதிகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டப்படவில்லை. இது அதிக கடன் அபாய உணர்வின் கூடுதல் அறிகுறி.

கூற்று 2: 2021 முதல் 2030 வரையில் இலங்கை ஒவ்வொரு ஆண்டும் பன்னாட்டு முறிகளின் மூலதன மீள்கொடுப்பனவாக சராசரியாக ஐ.அ.டொலர் 1,405 மில்லியனைச் செலுத்த வேண்டும், இது இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்ட பெறுமதியில் உள்ளது. எனினும், மூலதனத்தை திருப்பிச் செலுத்துவதுடன் மேலதிகமாக கடனின் வட்டிக் கொடுப்பனவையும் இலங்கை செலுத்த வேண்டும் என்பதை அவர் கணக்கில் கொள்ளத் தவறிவிட்டார். இன்று வரையில், மொத்த பன்னாட்டு முறிகளின் 6.64% நிறையேற்றப்பட்ட சராசரி நறுக்கு வீதத்தின் (முறிகளின் மீது செலுத்தப்படும் வட்டி வீதம்) அடிப்படையில் மூலதனக் கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக இலங்கை ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ஐ.அ.டொலர் 933 மில்லியனை வட்டிச் செலவினமாக செலுத்த வேண்டும்.

முதலாவது கூற்றில் இராஜாங்க அமைச்சர் சரியாக உள்ளார். அதில் மொத்தக் கடன் வழங்குனர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கவலைக்கான எந்த அறிகுறியையும் காட்டவில்லை. எனினும், வேறு எந்தக் கடன் வழங்குனர்களும் கவலைக்கான அறிகுறியை வெளிக்காட்டவில்லை என்ற கூற்றினை உறுதிப்படுத்த முடியாது. அவரது இரண்டாவது கூற்றில், பன்னாட்டு முறிகளுக்கான வட்டிக் கொடுப்பனவுகளை அவர் உள்ளடக்கவில்லை. இதன் மூலம் தவணை தவறுவதை தவிர்க்க வேண்டுமானால் செலுத்தவேண்டிய பன்னாட்டு முறிகளுக்கான மொத்த செலவினத்தை அவர் குறைத்து மதிப்பிட்டுள்ளார்.

ஆகவே, இராஜாங்க அமைச்சரின் கூற்றினை நாங்கள் “பகுதியளவில் சரியானது” என வகைப்படுத்துகின்றோம்.



மூலம்

இலங்கை மத்திய வங்கி, 2020 டிசம்பர் 01 அன்று பன்னாட்டு முறிகளின் நிலுவை, பார்வையிட: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/about/outstanding_isb_as_at_01_december_2020_e.pdf

இலங்கை மத்திய வங்கி, பத்திரிகை வெளியீடுகள் – அரச பிணையங்கள், பார்வையிட: https://www.cbsl.gov.lk/en/press/press-releases/government-securities

இலங்கை மத்திய வங்கி, வாராந்த பொருளாதார குறிகாட்டிகள், 12 மார்ச் 2021, அட்டவணை 3.2, பார்வையிட: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/statistics/wei/WEI_20210312_e.pdf

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன