உண்மைச் சரிபார்ப்புகளும்
வர்த்தமானி அறிவிப்பு 2069/2 இன் படி இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் விளைவாக சுமார் 4,000 பொருட்களை பூச்சிய வரிக்கு இறக்குமதி செய்ய முடியூம் என பந்துல குணவர்த்தன தெரிவித்திருந்த கருத்தினை திவயின பத்திரிகை 17 ஆம் திகதி ஒக்டோபர் 2018 ஆம் ஆண்டு பிரசுரித்திருந்தது.
இந்தக் கூற்றின் உண்மைத்தன்மையை ஆராய்வதற்கு நாங்கள் வர்த்தமானி அறிவிப்பு 2069/2 இனை ஆராய்ந்தோம்.
வர்த்தமானி அறிவிப்பு 2069/2 இன் படி 3,539 தயாரிப்புக்களுக்கான தற்போதய கட்டண விகிதத்தையும் சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் இத்தயாரிப்புகள் ஒவ்வொன்றிற்குமான புதிய விகிதாசாரத்தையும் பட்டியல் படுத்துகின்றது.
வர்த்தமானி அறிவிப்பானது தற்போது 3,509 பொருட்களுக்கு பூச்சிய வரி வீதம் அறவிடப்படும் நிலையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் அவை எந்தவித மாற்றத்துக்கும் உட்படவில்லை என்பதை காட்டுகின்றது. முன்பு பூச்சிய விகிதாசாரமற்றிருந்த 30 பொருட்கள் மட்டும் (அவர் குறிப்பிட்டதில் 1 சதவீதத்திற்கும் குறைவான பொருட்கள்) தற்போது சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் பூச்சிய வரி விகிதத்தால் குறைக்கப்பட்டது.
எனவே சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் மூலம் சுமார் 4,000 பொருட்களுக்கான வரி பூச்சியமாக குறைக்கப்பட்டுள்ளது என்ற கூற்றை “முற்றிலும் தவறானது” என வகைப்படுத்துகின்றௌம்.
*FactCheck இன் தீர்ப்பு பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது, FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.
மூலம்
- (வர்த்தமானி அறிவிப்பு 2069/2 தொழில் மற்றும் தொழிற்சங்க உறவூகள் அமைச்சு: http://www.documents.gov.lk/files/egz/2018/5/2069-02_E.pdf)