மஹிந்த ராஜபக்ஷ

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ: மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி தொடர்பில் இரண்டு முறை ‘தவறாக’ குறிப்பிடுகின்றார்

"

நான் ஒன்பது வருடங்கள் பதவியில் இருந்த போது, நாட்டின் தனிநபர் வருமானத்தினை மூன்று மடங்காக அதிகரித்தேன். அந்தக் காலப்பகுதியில் பொருளாதார வளர்ச்சி 7.4 வீதமாகக் காணப்பட்டது.

தெரண தொலைக்காட்சி | நவம்பர் 25, 2018

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

மஹிந்த ராஜபக்ஷ 25 ஆம் திகதி நொவம்பர் மாதம் தெரண தொலைக்காட்சியில் பின்வரும் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

1.அவர் ஜனாதிபதியாக இருந்த 9 ஆண்டுகளில், சராசரி பொருளாதார வளர்ச்சி வீதம் 7.4 ஆக காணப்பட்டது.

2.அந்தக் காலப்பகுதியில், நாட்டின் தனிநபர் வருமானம் மும்மடங்கு அதிகரித்தது.

(காணொளியைக் காண்பதற்கு: https://youtu.be/Gf-FDFcJOP4?t=341)

ராஜபக்ஷவின் கூற்று உண்மையா?
அவருடைய கூற்றுக்களின் உண்மைத்தன்மையை ஆராய்வதற்கு, இலங்கை மத்திய வங்கியின் 2017 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பான தரவூகளை ஆராய்ந்தோம்.

மத்திய வங்கியின் அறிக்கையில் இருந்து பெறப்பட்ட புள்ளிவிபரங்கள் மற்றும் பொருத்தமான கணக்கீடுகள் அட்டவணை 1 இல் குறிப்பிடப்பட்டுள்ளன.

மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்ட 2006 – 2014 காலப்பகுதியில் சராசரி பொருளாதார வளர்ச்சி வீதத்தினை கணக்கிடுவதற்கு நாங்கள் அட்டவணை 1 இல் வரிசை A யில் உள்ள புள்ளிவிபரங்களின் சராசரியைக் கணித்தோம். அதன் பிரகாரம் சராசரி வளர்ச்சி வீதமானது 6.4 வீதமாகும். மாறாக ராஜபக்ஷ குறிப்பிட்டது போன்று 7.4 வீதம் அல்ல.

எனவே, மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்த முதலாவது கூற்று தவறாகும்.

2006 – 2014 காலப்பகுதியில் உண்மையில் தனிநபர் வருமானம் எவ்வளவூ அதிகரித்துள்ளது என  ராஜபக்ஷவின் இரண்டாவது கூற்றை நாங்கள் ஆராய்ந்தோம்.

இந்தக் காலப்பகுதியில் தனிநபர் வருமானத்தில் ஏற்பட்ட அதிகரிப்பினை கண்டறிய நாங்கள் பின்வருவனவற்றைச் செய்தோம்.
படிமுறை 1 – ஒவ்வொரு ஆண்டும் அரசாங்கத்தினால் மதிப்பிடப்படும் சனத்தொகை புள்ளிவிபரங்களை (வரிசை D) கணித்தோம். இதனைக் கணிப்பதற்கு நாங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (வரிசை B) தனிநபர் வருமானத்தினால் (வரிசை C) பிரித்தோம்.

படிமுறை 2 – (நிலையான) 2005 ஆம் ஆண்டு விலைப்பட்டியலுக்கு (வரிசை F) அமைவாக உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணித்தோம். இதற்காக நாங்கள் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியை (வரிசை E) சனத்தொகை (வரிசை D) புள்ளிவிபரங்களினால் பிரித்தோம்.

படிமுறை 3 – 2006 – 2014 காலப்பகுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிநபர் வருமானம் எவ்வளவூ என்பதனை கணக்கிட்டோம். இதற்காக நாங்கள் 2014 ஆம் ஆண்டின் உண்மையான தனிநபர் வருமானத்தை (ரூ.206,644 மில்லியன்) 2006 ஆம் ஆண்டின் வருமானத்தினால் (ரூ.124,862 மில்லியன்) பிரித்தோம். ராஜபக்ஷ குறிப்பிட்டது போன்று தனிநபர் வருமானம் 3 மடங்கினால் அல்ல, 1.65 மடங்கினாலேயே அதிகரித்துள்ளது.

எனவே, ராஜபக்ஷவின் இரண்டாவது கூற்றும் தவறாகும்.

எனினும், 2006 – 2014 காலப்பகுதியில் தனிநபர் வருமான வளர்ச்சியினை அமெரிக்க டொலர்களில் கணக்கிட்டால் 1.65க்கு பதிலாக 2.7 ஆக காணப்படுகின்றது. இது ராஜபக்ஷ குறிப்பிட்ட 3 மடங்கிற்கு அருகில் உள்ளது. 2006 – 2014 காலப்பகுதியில் அமெரிக்க டொலர்களுக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததே இதற்கு காரணமாகும். எனினும், இலங்கையர்கள் பொருட்கள் மற்றும் சேவைகளை இலங்கை ரூபாயிலேயே கொள்வனவூ செய்கின்றார்கள், அமெரிக்க டொலர்களில் அல்ல. எனவே மக்களின் உண்மையான வருமானத்தை அளவிட இது பொருத்தமானது அல்ல.

இந்த அனைத்து தகவல்களையூம் கருத்தில் கொண்டு, மஹிந்த ராஜபக்ஷவின் கூற்றுக்கள் ‘தவறானவை’ என்று நாங்கள் வகைப்படுத்துகின்றௌம்.

*FactCheck இன் தீர்ப்பு பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது, FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.

அட்டவணை 1: இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைகளில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மற்றும் கணக்கீடுகள் (2005 – 2014)



மூலம்